தலைப்பு

திங்கள், 27 ஏப்ரல், 2020

சுவாமி ப்ரசாதம் = வாழ்க்கையின் வர ப்ரசாதம்!


ஸ்வாமியை தரிசனம் செய்ய செல்லும் போதெல்லாம், ஸ்வாமியின் அன்பினால் சிறப்பு முன்னுரிமையோடு,ஒவ்வொரு முறையும் ஸ்வாமியின் தர்ஷன்,ஸ்பர்ஷன்,சம்பாஷன் ஆகிய மூன்றின் அனுக்ரஹத்தையும் பெற்றிருந்தனர் அந்த சென்னை சகோதரர்கள். அதில் ஒருவர் ஒரு நாள் அலுவலக விடுமுறையில் கூட, ஸ்வாமி தர்சனம் பெற்று அவசரமாக ஊர் திரும்புவதுண்டு. அந்த வகையி்ல் தரிசனத்திற்க்கு பிரசாந்தி நிலையம் வரும்போதெல்லாம் ஸ்வாமி அனுமதி கொடுத்தால்தான் ஊர் திரும்புவர்.

அந்த வகையில் ஒரு நாள் அலுவலக விடுமுறையில்  தரிசனத்திற்காக வந்து முன்  வரிசையில் அமர்ந்திருந்தார். ஸ்வாமியின் ஆசீர்வாதத்தை பெற்ற பிறகு, ஊருக்கு திரும்பி போக ஸ்வாமியிடம் கேட்ட  வழக்கமான அனுமதிக்கு, இம்முறை ஸ்வாமி பதிலளிக்கவில்லை.

2 ம் நாளும் பதிலில்லை. 3 நாள் ஆகியது , ஊஹூம். சொல்லி கொள்ளாமல் நீண்ட  லீவில் இருந்ததால் வேலை போவது நிச்சயம். சரி ஸ்வாமி விட்ட வழி என்று  ப்ரசாந்தி நிலைய கேண்டினில் தினமும் 3 வேளை சாப்பிடுவது, ஸ்வாமியை தரிசிப்பது என்ற நிலைதொடர்ந்து 7,8  நாட்களாகியதால், ஏதோ உந்துதலில் ஸ்வாமிக்கு கடிதம் எழுதினார் .

அதில்,  ஸ்வாமி, தர்சனத்திற்க்கு வந்து இன்றோடு 9 நாட்களானபடியால் "போ" என்று ஒரு வார்த்தை சொன்னால், தங்கள் அனுமதித்ததாக ஊருக்கு சென்று விடுவேன் என எழுதி தரிசனத்தில் அமர்ந்திருந்தார். ஸ்வாமியும்  கடிதத்தை பெற்றுக் கொண்டு "போ" என்று  சொன்னார், தன் இன்டர்வியூ ரூமுக்குள் 👈 👈.

 வெளியே போ என்று சொல்வாரென்று எதிர்பார்த்து காத்திருந்தவரை உள்ளே போ என்று கூறியதால் குழப்பத்துடனும், அதே சமயம் பயம் கலந்த ப்ரார்த்தனைகளுடன் உள்ளே உட்கார்ந்திருந்தார்.

 ஸ்வாமி இன்டர்வியூ ரூமில் இவரருகில் வந்ததும், பக்கத்திலிருந்த Dr. நாகராஜனை பார்த்து , இவன் உடம்பை பரிசோதனை செய் என்றார். ( Dr. நாகராஜன் நம் தற்போதைய National Vice President - NVP  திரு.ரமணி சாய்ராம் அவர்களின் அப்பா)

முழு பரிசோதனைக்கு பிறகு   டாக்டர் ஸ்வாமியிடம் ஆச்சர்யமாக, "ஸ்வாமி இவருடைய உடலில் லிவர் (ஈரல்) முற்றிலும் பழுதடைந்து இயங்கவில்லை, ஆனால் இவர் எப்படி இன்னமும் உயிரோடு  இவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதுதான் டாக்டராகிய எனக்கு புரியவில்லை ஸ்வாமி" என்றார்.



 அதற்கு ஸ்வாமி  ஒரு தெய்வீக புன்னகையுடன், எனக்கு எல்லாம்  தெரியும், அதனால்தான் என் ஒரு நாள் தரிசனத்திற்க்கு  வந்த  இவனை திரும்பி போக அனுமதிக்காமல், தொடர்ந்து  9 நாள் இங்கேயே தங்க வைத்து, என் ப்ரசாதத்தை 3 வேளையும் சாப்பிட வைத்தேன், இப்போது எப்படி வைத்தியம் ஆரம்பிக்க போகிறாய் ? என்று கேட்டார். ஸ்வாமி முதலில்  ஒரு சிறப்பு ஊசி உடனே போட வேண்டும் என்றவுடன் அந்த ஊசி மருந்தின் பெயரை கேட்ட பிறகு, சரி அதையே போடு , சென்னை சென்றதும் உன் வைத்தியத்தால் இவனை பார்த்துக்கொள், மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்  என்று டாக்டரிடம்  ஸ்வாமி கூறிவிட்டு, அந்த சென்னை பக்தரை தற்போது ஆசீர்வதித்து  இப்போது ஊருக்கு போ என்று சொல்லி ஊருக்கு போக அனுமதித்தார்.

இப்போதுதான் அந்த பக்தருக்கு எல்லாம் புரிந்தது. ஊருக்கு திரும்பி சென்றிருந்தால் ஆயுள் முடிந்திருக்கும், ஸ்வாமி நம்மீதுள்ள கருணையாலும்,அன்பாலும் இங்கே நீண்ட நாட்களுக்கு தங்க செய்து, அவர் ப்ரசாதத்தை சாப்பிட.செய்து , நம் கெட்ட கர்ம பலன்களிலிருந்து காப்பாற்றி, தன் ஆயுளை நீட்டிக்கச் செய்தார், சாயி ஈஸ்வரன் என்பதை பூரணமாக உணர்ந்தார்.

சென்னை வந்த பிறகு,பகவானின் அருளாலும், ஸ்வாமி டாக்டரின் தொடர் சிகிச்சையாலும் அந்த பக்தருக்கு உடல் நலம் பரிபூரணமாக குணமாகியது.


🌹பிரசாந்தியில் நீண்ட நாட்களாக தங்கி சேவை புரிந்து வரும் அன்பர்கள்,  நம் ஷேமத்திற்காக  ஸ்வாமி  புரியும் காரண, காரிய லீலைகளை இதன் மூலம் உணர்ந்து ஆனந்தமாக சேவை செய்வோம்.🌹

பிரசாந்தி நிலையம் = மார்க்கண்டேய ஸ்தலம்

ஓம் ஶ்ரீ சாயி வைத்ய நாதாய நமஹ‼

அதே சமயம் சொல்லி கொள்ளாமல் தொடர் விடுமுறையில் இருந்ததால், கண்டிப்பாக வேலை போயிருக்கும்,  அலுவலக மிச்சம் மீதி  பண செட்டில்மென்ட்டில் அடுத்த வேலை வரை சமாளிக்க வேண்டும் என்ற கவலையோடு அலுவலகம் சென்ற அந்த பக்தருக்கு  காத்திருந்தது ஸ்வாமியின் அடுத்த " இன்ப அதிர்ச்சி".

அலுவலகத்தில் தயக்கத்துடன்  நுழைந்ததுமே அவர் மேல் அலுவலர் " எங்கேயப்பா போனாய், உன்னைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம், தலைமையக தணிக்கை  மேலதிகாரிகள் வந்துள்ளார்கள், அவர்கள் கேள்விகளை எங்களால் சமாளிக்க முடியவில்லை, உன்னால்தான் முடியும், போ, அவர்களை சமாளி " என்று பெருமூச்சோடு கூறினார். " சார், என் வேலை, லீவு என தயங்கி,தயங்கி கேட்டதற்க்கு, அதேல்லாம் பின்னால் உன் லீவு கணக்கில் அட்ஜஸ்ட் செய்துக்கலாம், முதலில் இந்த அவசர வேலையை போய் கவனி " என்று உத்தியோகத்திலும் லீலை செய்து தொடர வைத்தார் நம் கருணா மூர்த்தி.  சொல்லி கொள்ளாத எக்கசக்க லீவினால், வேலை போயிருக்கும் என்றிருந்தவர்க்கு, உத்தியோகத்திலும் தொடர வைத்து,  தலைமை தணிக்கையாளர்களை திறம்பட கையாண்டதில், பாராட்டையும், பதவி உயர்வையும் பெற வைத்தார் நம் ஆபத்பாந்தவர் என்று சொல்லித்தான் நமக்கு தெரிய வேண்டுமா ?


சரணாகதி அடைந்தோரை, தன் தலை மேல் தூக்கி வைத்து  காப்பான் நம் சரணாகத ரக்ஷகன்.

ஓம் ஶ்ரீ சாயி சரணாகத ரக்ஷணாய நமஹ‼

ஜெய் சாய்ராம்.

ஆதாரம் - ரேடியோ  சாய் உரையாடல்-- தமிழ் மொழி சாராம்சம் - ஸ்வாமியின் கருவியாக -சாய் முரளி, சேலம். TN.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக