தலைப்பு

வியாழன், 2 ஏப்ரல், 2020

ஸ்ரீ ராமனின் பல்வேறு செயல்களுக்கான சரியான விளக்கங்கள்:


ராமனின் சில செயல்கள் பல்வேறு காரணங்களுக்காக படித்த பண்டித்தார்களால் விமர்சிக்கப்படுகின்றன. சரியான கோணத்தில் பார்த்தால், ராமன், ஒவ்வொரு விஷயத்திலும், அந்நிகழ்வில் இருக்கும் நபர்களின் இயல்புக்கு ஏற்ப செயல்பட்டுள்ளார் என்பது விளங்கும்... 

ஒரு அரக்கியை கொல்லும்போது ராமன் 'ஸ்திரிஹத்தி' (பெண்ணை கொல்லும் பாவம்) செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறார். ஆனால் அது அப்படி அல்ல. அவ்வரக்கி அடையாளப்படுத்தும் தமோ குணத்தையே ராமன் அழித்தார். ரஜோ குணத்தை பிரதிபலிக்கும் சபரிக்கு முக்தி அளித்தார். சத்வ குணத்தை குறித்து நின்ற, அகல்யாவை தூய்மைப்படுத்தி, அவளது தவறுகளை திருத்தி, கௌதமரிடம் மீண்டும் சேர்பித்தார்.


அரக்க சகோத்தர்கள் விஷயத்தில், தமோ குணம் மற்றும் ரஜோ குணத்தை குறிக்கும் கும்பகர்ணன் மற்றும் இராவணனை அழித்த இராமன், சத்வ குணத்தை குறிக்கும் விபீஷணனை இலங்கையின் அரசனாக்கினார்.

நம்முள் இருக்கும் தமோ குணம் மற்றும் ரஜோ குணத்தை அழித்தால்தான், சத்வ குணம் நம் இதயத்தில் ஆட்சி செய்யும். இது ஒவ்வொரு மனிதனின் தலையாய கடமையாகும். இதுவே நமது உயரிய லட்சியமாக இருத்தல் வேண்டும்.

இராமனுடைய இத்தகைய மேன்மையான குணங்களை பின்பற்றி, அதன் வழியில் நம் வாழ்வை சீர்படுத்தினால், நம்மை நாம் தெய்வீகமாக்கி கொள்ள இயலும்.

 ~ பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா ( 03.04.1990)

பகவானின் இந்த பேருரையை ஆங்கிலத்தில் முழுமையாக வாசிக்க: http://www.sssbpt.info/ssspeaks/volume23/sss23-06.pdf

முக்குணங்களின் விளக்கம்: 
https://bit.ly/2yj7MzW

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக