எதைப் பேச வேண்டும்... எங்கே பேச வேண்டும்... எப்படிப் பேச வேண்டும்... இது மூன்றுமே மிகவும் முக்கியம்... இடம் பொருள் ஏவல் அறிந்து பேசுவதே பண்பு... சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் செயல்படுவதே சாமர்த்தியம்... அதை மனிதனுக்கு இறைவன் சொல்லித் தராமல்.. வேறு யார் சொல்லித் தர முடியும்?? இதோ இறைவனின் ஆற்றுமொழி... அத்தியாவசிய கூற்றுமொழி...
ஒரு நேர்காணலில் சுவாமி பிரபலமான குரு ஒருவரைப் பற்றிச் சொன்னார். அந்த குரு பகவத்கீதையை விளக்கிப் பேசுவதை நாங்கள் கேட்டதுண்டா என்று விசாரித்தார். சுவாமி "ஒருநாள் அவர் இயற்கையை வர்ணித்துக் கொண்டிருந்தார். முன்வரிசையில் உட்கார்ந்து கொண்டிருந்த பெண்ணின் அழகில் ஈர்க்கப்பட்ட அவர் படைப்பின் அவர் படைப்பின் அழகைப் புகழ்ந்து பேசினார். அந்தப் பெண்மணியின் சகோதரரும் கூட்டத்தில் இருந்தார். அவர் அங்கிருந்தே குருஜியை ஏசத் தொடங்கினார்" என்றார் சுவாமி. மேலும் சுவாமி, "குருஜியின் மனத்தில் எந்தக் கெட்ட எண்ணமும் இருக்கவில்லை, ஆனால் அவரது உணர்வு தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டது. அதனால் கூட்டத்தின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இதனால் தான் சுவாமி (தன்னைச் சுட்டிக்காட்டிக் கொண்டார் சுவாமி) அப்படி ப்பட்ட விஷயங்களைப் பேசாமல் கவனமாக இருக்கிறார். நீங்கள் கவனித்திருக்கலாம், கவனிக்க்காமலும் இருக்கலாம், சுவாமி அருளுரை வழங்கும்போது அது காலம், இடம் அறிந்து, கலாசாரம், சமூகம் இவற்றின் பின்னணிக்குப் பொருந்தி வரும்படிப் பேசுவார். தான் என்ன பேசுகிறோம் என்பது அவருக்குத் தெரியும். எதை எப்போது சொல்வது என்று தெரிந்து பேசுவதை நீங்களும் வழக்கமாகக் கொள்ள வேண்டும்" என்று சொல்லி முடித்தார். சமயோஜித புத்தியுடன், இடமறிந்து, எதைச்சொல்ல வேண்டும் என்பதை அறிந்து பேசவேண்டும் என்பதை மீண்டும் சுவாமி எங்களுக்கு நினைவூட்டினார்.
ஆதாரம்: 90 Divine Interactions of Bhagawan with youth
சாய்ராம்🙏
பதிலளிநீக்கு