தலைப்பு

சனி, 4 ஏப்ரல், 2020

சுவாமியின் தியானப் புகைப்படத்தின் பின்னால் இருக்கும் கதை..

அனைத்து சாய் பக்தர்களும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு.

1946 ல் ஒரு முறை ஸ்ரீ சத்ய சாயி பெங்களூரில் ஒரு பக்தர் வீட்டிற்கு அன்பு அழைப்பின் பேரில் தரிசனம் தர வேண்டி சென்றிருந்தார்..
அப்போது அவ்வீட்டினர் சுவாமியை புலித் தோலில் அமர்ந்து கொள்ளுமாறும் ... ருத்திராட்ச மாலையை கையில் வைத்தபடியும்.. தவம் செய்யும் கோலத்தில் புகைப்படத்திற்காக காட்சி அளிக்குமாறு வேண்டினர்..
அதற்கு பேரிறைவன் சத்ய சாயியோ தாமே நீங்கள் செய்யும் தவமும்.. அந்த தவ நிலையும் என்ற போது..
தவமே ஏன் தவம் செய்வது போல் காட்சி தர வேண்டும் என்று மறுத்திருக்கிறார்..
விடாப்பிடியாக பெங்களூர் பக்தர்கள் சுவாமியை மன்றாடிக் கேட்டுக் கொள்ள..
சரி இப்படித் தான் ரிஷிகள் தவம் செய்வார்கள் என செய்து காட்டியதே இந்த  தெய்வீக திருப்படம்..

இது பரவலாய் பக்தர்கள் எங்கும் பரவிக் கொண்டிருக்க.. சுவாமியும் தவம் செய்து தான் ரிஷிகளைப் போல் இறை நிலை எய்தினார் போல என தவறாகப் புரிந்து கொண்டனர்..
அதன்பிறகு சுவாமி இந்தப் புகைப்படத்தைப் பகிர வேண்டாமென உத்தரவிட்டார்.
ஒரே ஒரு முறை இந்த கோலத்தில் சுவாமி காட்டிய திவ்ய தவ ரூபத்தை நாம் தவறாக புரிந்து கொள்ளாமல்..

 ஆத்ம சாதனையின் போது எந்த நிலையில் எப்படி அதைச் செய்து தவத்தில் லயிக்க வேண்டும் என்பதை இந்தப் படத்தைப் பார்த்து உணர வேண்டும்..

பேரிறைவன் சத்ய சாயி குருவாக இறங்கி நமக்கு ஆத்ம ஞானம் வழங்கி வந்தாலும்.. அவர் பிற குருமார்களைப் போல் நெடுந்தவம் செய்து எந்த வரமும் பெற்று.. எந்த உயர் நிலையும் எய்தி ஆன்மிகத்தில் ஜொலிக்கவில்லை..

அவர் எப்போதும் எங்கும் தவம் செய்ததே இல்லை...

மேல்நிலை தவமே கீழ் இறங்கி  நம்மை தவத்திற்கு ஆற்றுப்படுத்த ... நமக்காக உதித்த சத்திய தவரூப கடவுள் பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயி பாபா...

ஆன்ம சாதனையால் ஒருவர் எந்நிலையை அடைகிறாரோ அந்நிலையே பேரிறைவன் சத்ய சாயி .. பக்தர்கள் ஆத்ம சாதகர்களாக உருமாறும் போது உணர்ந்து கொள்வார்கள்.. 

ஆதாரம்: ரேடியோ சாய்
தமிழில் தொகுத்தளித்தவர்: கவிஞர் வைரபாரதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக