தலைப்பு

திங்கள், 6 ஏப்ரல், 2020

நீ ஒழுங்கா காயத்ரீ பண்ணுகிறதில்லை!


பிரசாந்தி நிலையத்தில் நடக்கவிருக்கும் விழாக்களைப் பற்றி 'சனாதன சாரதி' ஏட்டில் முன்னறிவிப்பு வெளியிடுவது வழக்கம். ஏதோ ஒரு விழா நடக்கவிருந்த போது அதற்கு முன்பு வெளிவந்த இதழில் இவ்வாறு அறிவிப்பு செய்வதற்கு அதன் அப்போதைய ஆசிரியரான திரு. கஸ்தூரி மறந்து விட்டார்.

ஒவ்வொருவரும் தாங்கள் செய்யும் தொழிலை யோகம் போல், தவம் போல் ஆற்ற வேண்டும் என்ற கொள்கையை நாளும் வலியுறுத்துபவர் நம் ஸ்வாமி. தம் ஆஸ்தான ஊழியர்கள் இந்நெறியில் சிறிது வழுவினாலும் கண்டிப்புக்கார யஜமானராக வாங்கு வாங்கென்று வாங்குவார்.

பகவானுடன் பேராசிரியர் கஸ்தூரி

இப்போது கஸ்தூரி செய்த தவற்றுக்கு என்ன சொல்லி கண்டித்தார் தெரியுமா? "அதெப்படி முக்கியான சமாச்சாரம் மறந்துபோகும்? மறந்து போச்சுன்னா என்ன அர்த்தம்? நீ ஒழுங்கா காயத்ரீ பண்ணுகிறதில்லை என்கிறதையே இந்த மறதி காட்டுகிறது" என்று சொல்லியே கண்டித்தார்.

(ஆதாரம்: திரு. ரா. கணபதி அவர்களின், 'ஸ்ரீ ஸாயி - 108', அத்யாயம் 25)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக