இறைவன் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் மகாசமாதி தினம், ஏப்ரல் 24ம் திகதி, வெள்ளிக்கிழமையாகும், இவ்வாண்டு அமைதியான சூழ்நிலையில் பிராத்தனைகளுடன், வீடுகளில் இருந்தபடி அனுஷ்டிக்க வேண்டியிருக்கிறது.
சமாதி என்றால் என்ன ?
சம ஆதி என்ற சொல்லே சமாதி.
மகான்கள் அந்த சமாதி நிலையை தியானத்தின் வழி அடைந்தனர்..
அந்த உயர் நிலையே இறைவன் சத்ய சாயியாக உடல் எடுத்து இறங்கி வந்தது.
ராமாவதாரம் நதியோடு இறங்கியது.. கிருஷ்ணாவதாரம் வேடன் அம்போடு ஏறியது.
ஷிர்டி அவதார..... பர்த்தி அவதார பக்தர்கள் மட்டுமே கொடுத்து வைத்திருக்கின்றனர்..
இறைவன் தேர்ந்தெடுத்த உடல் எனும் வாகனத்தை இறக்கிய நாளை இதய வழிபாட்டில் கொண்டாடி.. அந்த உயரிய உடலுக்கு ஒரு நினைவு எழுப்பி அதைத் தீண்டி வழிபட்டு வருகின்றனர்.
எவ்வளவு கொடுத்து வைத்த பக்தர்கள்!
இறைவன் சத்ய சாயி ஜோதி வடிவம்...
இறைவனுக்கு தொடக்கமோ .. முடிவோ இல்லை..
உடல் என்பது அவருக்கு சட்டையைப் போல்..
எவருக்கு தரிசன சங்கல்பம் இருக்கிறதோ அவருக்காக சட்டையை அணிவித்துக் கொண்டு காட்சி தருகிறார்.
சிலருக்கு ஜோதி மயமாகவும் இன்றும் காட்சி தருகிறார்..
இப்படிப் பலருக்கு பல அனுபவம்...
சாயி பக்தர்களிடத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார் இறைவன் சத்ய சாயி..
அதனால் உங்கள் வீடுகளில், நீங்கள் செய்யும் பிராத்தனைகளுக்கு, அவரது ஆசீர்வாதத்தை, ஒவ்வொருவரும் நிச்சயம் உணரமுடியும்.
இறைவன் தன் உடல் சட்டையை களைவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன், தனது பக்தர்களுக்கு ஒரு செய்தியைத் தெரியப்படுத்தினார். அதாவது பிரசாந்தி நிலைய மண்டபத்தில் நான்கு திசைகளில் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்களை பார்த்து, என்றுமில்லாதவாறு, வழக்கத்துக்கு எதிர்மாறாக, தனது கைகளைக் குவித்து வணங்கிய காட்சியை பக்தர்கள் என்றும் மறக்கமாட்டார்கள். அதாவது ஒவ்வொருவரிடத்திலும் தானே குடிகொண்டுள்ளேன். இதனால் ஒவ்வொருவரையும் வணங்கும்போது, ஒவ்வொருவரது உள்ளத்தில் வீற்றிருக்கும் தனக்கு வணக்கம் செலுத்துவதற்கு சமமாகும் என்ற அர்த்தத்தைப் புரியவைத்தார்.
தன்னைத் தானே வணங்கிக் கொண்டார்.
வாகனமான உடலுக்கும் அந்த வணக்கம் பொருந்தும்..
இறைவன் எல்லோரிடத்திலும் தம்மைக் கண்டது போன்று, நாம் பார்க்கும் அனைவரிடத்திலும் அவரைக் காணமுடியும். இந்தச் செய்தியை தனது இறுதி தரிசனத்தில் அனைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
அதனைத்தான் சுவாமி தனது வாழ்க்கைமுறையானது தனது செய்தியாக இருக்கவேண்டும் என்பதனை ஒவ்வொரு பக்தனுக்கும் உணர்த்தினார். ஒவ்வொரு சாயி பக்தர்களின் இதயத்தில் சுவாமி வாழ்ந்துகொண்டிருக்கிறார். “சாயிராம்" “சாயிராம்" என்று நாம் உச்சரிக்கும் போது, அவர் இதயத்திலிருந்து ஆசீர்வதிக்கின்றார். அவர் நம்மொடு வாழ்ந்துகொண்டிருப்பதால், நாமும் ஒழுக்கமாகவும், சுத்தமாகவும், உண்மையாகவும், சேவை மனப்பான்மையுடனும் இருக்கவேண்டியுள்ளது.
“பிறப்பையும் இறப்பையும் பிரித்துப்பார்க்க முடியாது. அது இறைவனின் அனுக்கிரகம். அவரே யாவற்றினுள்ளும் உறைந்திருப்பதனால் உண்மையில் நாம் அனைவரும் மாறுவேடம் போடுகின்றோமேயல்லாது யாரும் புதிதாகப் பிறப்பதில்லை.”
“நான் உன்னிடத்திலிருந்து விலகிச்சென்று விடுவேனென்று ஒருபோதும் ஏங்காதே. 'சாயி', 'சாயி' என ஜெபித்துக் கொண்டிருப்பவனை ஏழுகடலையும் தாண்டி சொர்க்கலோகத்துக்கு அழைத்துச் செல்வேன். என்னை அளவுக்கதிகமாக நேசிப்பவனுக்கு என்றும் காட்சி தருகின்றேன்"
இவையாவும் சீரடி சாயி மற்றும் இறைவன் சத்ய சாயியின் சத்ய வாக்குகளாகும்.
இறைவன் ராமனுக்கு பிறகு வந்த கிருஷ்ணரைப் போல் இறைவன் சீரடிசாயி பாபாவின் மறுஅவதாரம்தான் பரிபூரணப் பரம்பொருள் ஸ்ரீ சத்ய சாயி பாபா.
இறைவன் சத்ய சாயியின் அடுத்த அவதாரமான பேரன்பு இறைவன் ஸ்ரீ பிரேம சாயியை உளமாற அழைத்து இந்த பொன்னான நேரத்தில் அவரின் வருகைக்காக இதயத்தை இன்னும் அகலமாய்த் திறந்து வைத்துக் காத்திருப்போம்...
நன்றி: ஸ்ரீ சத்ய சாய் மத்திய நிலையம், கொழும்பு, இலங்கை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக