ஒருமுறை எங்கள் குழு நேர்காணலில், சுவாமியிடம் ஒரு கிராமத்தில் நடக்கும் சேவையைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தோம். "சால சந்தோஷம். கிராம சேவைச் செயல்பாடுகளிலேயே சுவாமியைத் தரிசிக்க நீங்கள் இப்போது கற்றுக்கொள்ளவேண்டும். இங்கேயோ, அங்கேயோ, எங்கே ஆனாலுமே, அதே சுவாமிதான் எங்குமிருக்கிறார். உங்களுக்கென அங்கேயே காத்துக்கொண்டிருக்கிறார்" என்றார் சுவாமி.
எப்படிச் சேவை செய்வதென்பதை யோசிக்க வைத்ததற்கு நன்றி சுவாமி! நாங்கள் அதை ஏதோ வழக்கமான வேலையாக எண்ணிவிடுகிறோம். இனி,எங்கள் பயனாளிகளின் கண்களில் தெரியும் தெய்வீகத்தைப் பார்க்க நாங்கள் எங்கள் சேவைப் பணிக்கு நடுவே ஓரிரு கணங்களை எடுத்துக் கொள்வோம். இனி எங்கள் திட்டப்பணியில் செய்யும் ஒவ்வொரு வேலையையும் சுவாமிக்குச் செய்வதாகவே பார்ப்போம். இந்த உண்மையை நினைவூட்டியதற்கு நன்றி சுவாமி!
ஆதாரம்: 90 Divine Interactions of Bhagawan with youth
very well maintained blog. congrats
பதிலளிநீக்கு