தலைப்பு

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

தவறிலிருந்து தடுத்தாளும் சாயி தெய்வம்!


"சுவாமி, சில விஷயங்கள் தவறு  என்று தெரிந்தும், நாங்கள் அவற்றைச் செய்கிறோம். இதை எப்படித் தவிர்ப்பது?"என்று ஒரு  சகோதரர் சுவாமியிடம் பேட்டி ஒன்றில் கேட்டார்.

"பங்காரு, எவரும் தெரிந்தே தவறு செய்வதில்லை. நீங்கள்  எல்லோரும் அறியாமையால் செய்து விடுகிறீர்கள்" என்று சுவாமி அன்போடு கூறினார்.மிகவும் மனம் வருந்திச் சகோதரர், "இல்லை சுவாமி. சிலவற்றைத் தவறென்று தெரிந்தே செய்துவிடுகிறோம். தெரிந்துதான் தவறிழைக்கிறோம்" என்றார்.

சுவாமி  கூறினார், "நீ அந்தி நேரத்தில் சாலையில் நடக்கப்போவதாகக் கற்பனை செய்துகொள்வோம். அந்தக் குறைந்த ஒளியில் சாலையில் ஏதோ ஒன்று சுருண்டு கிடைப்பதைப் பார்க்கிறாய்.அது சர்ப்பம் என்று தெரிந்தால் அதை நீ கையில் எடுப்பாயா? சரி, நீ எடுத்துவிட்டாய் ; அது பாம்புதான் என்றால் அதை நீ கையில் வைத்துக் கொண்டு இருப்பாயா? இல்லை, உடனடியாகக் கீழே போட்டுவிடுவாய். அது போலவே, அறியாமை இருளில் நீ ஒரு பழக்கத்தைப் பிடித்துக் கொள்கிறாய். சிலசமயம் அறியாமையால் நீ தவறு செய்யலாம். ஆனால், அது  தவறென்று தெரிந்த உடனேயே அதை விட்டுவிட வேண்டும். .அந்தத் தவறான பழக்கவழக்கங்களைத் தொடர்ந்தால், அது மிருகத்தனமான அல்லது அரக்கத்தனமான இயல்பு  என்று கருதலாம். அது மனிதத்துவம் அல்ல. அஞ்ஞானத்தினால் செய்யும் தவறு சில சமயம்  மன்னிக்கப்படலாம். ஆனால், தவறென்று அறிந்த பின்னரும் திரும்பத் திரும்ப  அதையே செய்தாலோ, அந்தப் பழக்கத்தைத் தொடர்ந்து கைக்கொண்டிருந்தாலோ,அது மன்னனிக்கத் தக்கதல்ல! தப்பு செய்வதையே பழக்கமாக்கிக் கொள்ளாதீர்கள். 

சில சமயம், உனக்கு நல்லதல்ல என்று தெரிந்திருந்த போதிலும், அதைத் தொடர்ந்து செய்யக்கூடும். உனக்கு நம்பிக்கை இல்லாதபோது இப்படி நேரலாம். நல்லது கெட்டது எது என்பதில் உனது நம்பிக்கை வலுவற்றதாக இருந்தால், நீ கெட்ட பழக்கங்களை விடமாட்டாய். அறிந்தே தவறு  செய்யக்கூடாது என்பதை நினைவில் கொள். "சுவாமி, எங்களது அறியாத் தவறுகளை மன்னித்துவிடுங்கள். அதைவிட சுவாமி, பல ஆண்டுகளாக நாங்கள் வளர்த்துக் கொண்டுவிட்ட கெட்ட பழக்கங்கள், பெருந்துன்பங்களாக மாறிவிடும் முன்னால், அவற்றை விட்டொழிக்க எங்களுக்கு வலிமையைத் தாருங்கள்.

ஆதாரம்: 90 Divine Interactions of Bhagawan with youth

எவ்வளவு சிறந்த பிரார்த்தனை.
இறைவன் சத்ய சாயி இதைப்போன்ற வழிபாட்டிற்கும்.. வேண்டுதலுக்குமே செவி சாய்க்கிறார்.

தவறுகளை ஒப்புக் கொள்ளுதல் என்பது தவத்திற்கான முதல் படி. 
மன்னிப்பைக் கேட்டல் என்பது சந்நதிக்கான கடைசிப் படி.

திறந்த மனத்துடனேயே தெய்வ சாயியை அணுகுவோமாக!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக