தலைப்பு

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

வெற்றியையே பரிசளிக்கும் வீரஇறைவன் சாயி!

ஷீரடி காலத்தில் நடந்த சுவாரசிய சம்பவத்தை நினைவு கூறும் சத்திய சாயி

எனது முந்தைய உடலில் இருந்தபோது நடந்த சில பழைய சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன...
அப்போதும் எனக்கு சத்தியமே ஆதாரமாக இருந்தது. ஒரு மல்யுத்த வீரர் என்னைச் சண்டைக்கு அழைத்தார். மிகப்பெரிய கிராமவாசிகள் கூட்டத்தின் முன்னிலையில் அவரைத் தோற்கடித்தேன்.

இதனால் அவமானப்பட்ட அவர் இரண்டாவது முறை சண்டை போட மறுநாள் பாபாவை அழைத்தார் தான் இழந்த மானத்தை அதன்மூலம் திரும்பப் பெற நினைத்தார்.மீண்டும்  தோற்கடிக்கப்பட்டால் கஃப்னி எனப்படும் நீண்ட அங்கியை நான் அணிந்து கொண்டு தலையைத் துணியால் மூடிக் கொள்கிறேன் என்று அவர் கூறினார். அதே சவாலை ஏற்றுக்கொள்ளுபடி ஷீரடி பாபாவைக் கூறினார். பாபாவுக்கு மீண்டும்  மைதானத்தில் இறங்க மனமில்லை அதனால்  அவன் எதற்காக ஏங்கினானோ அந்த வெற்றியை அவனுக்கு விட்டுக் கொடுத்துவிட்டார்.பாபா தோல்வியை ஒப்புக்கொண்டு கஃப்னி எனப்படும் நீண்ட அங்கியையும் தலையில் கைக்குட்டையையும் அணிந்து கொண்டார். மல்யுத்த வீரருக்கு வருத்தமாகிவிட்டது. அவருடைய திமிர் அடங்கிப்போனது அவர் பாபாவிடம் நீங்கள் உங்கள் பழைய வழக்கப்படியே ஆடை அணிந்து கொள்ளுங்கள் என்று கூறினார். ஆனால் பாபா தன்னுடைய வார்த்தையை கடைப்பிடித்தார்.அவர் சத்தியமே அன்றி வேறில்லை, புதிய முறையில் ஆடை அணியும் பழக்கத்தைத் தொடர்ந்தார்.- இறைவன் சத்ய சாயி.

ஆதாரம்: CHINNA KATHA  - A LITTLE STORY FROM BHAGAVAN

வெற்றியையேப் பரிசாக வழங்கும் கடவுள் சாயி...
இறைவன் சத்ய சாயியே விட்டுக் கொடுப்பவர்.. 
எதை விட்டுக் கொடுப்பவர் ? என கேட்டால்..
தன்னையே பக்தருக்காக விட்டுக் கொடுப்பவர் என்றே உணர வேண்டும்.

எப்பேர்ப்பட்ட கடவுளின் பக்தர்களாக இருக்கிறோம் என்பது நாம் போன ஒரே ஒரு பிறவியில் செய்த புண்ணியம் மட்டுமல்ல...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக