தலைப்பு

புதன், 15 ஏப்ரல், 2020

பிரபஞ்சம் இயக்கும் சாயி பரம்பொருள்!


நாமே அனைத்தும் செய்கிறோம் என நினைக்கிறோம். சத்தியமாக இல்லை. இறைவன் சத்ய சாயியே எல்லாவற்றையும் நடத்துகிறார் இதை கேள்வி பதில் எனும் அற்புத உரையாடலின் வழி அழகாக மிக ஆழமாக அவரே தெள்ளத் தெளிவாக இதோ விளக்குகிறார்.

சுவாமி:  நீங்கள் அனைவரும் பகுதி நேர பக்தியில் பிஸியாக இருக்கிறீர்கள்.

பக்தர்:  பகுதி நேர பக்திக்கும் நிறைய நேரம் எடுக்கும் சுவாமி.

சுவாமி:  உன் பழைய நிறுவனத்தில் உங்கள் ஊழியர்களை எவ்வாறு வேறுபடுத்துகிறாய்?

பக்தர்:  சுவாமி ஒன்று நிரந்தரமானது, மற்றொன்று தற்காலிகமானது சுவாமி.

சுவாமி:  என்ன வித்தியாசம்?

பக்தர்:  சுவாமி நிரந்தர ஊழியர்கள் சம்பளம் + டிஏ + ஓய்வூதியம் ஆகியவையும், தற்காலிக ஊழியர்கள் சம்பளம் மட்டுமே பெறுவார்கள் சுவாமி.

சுவாமி:  அது போல, பகுதி நேர பக்தியில் உங்களுக்கு தகுதியானதை நான் தருவேன். நீங்கள் பகுதி நேர பக்தி செய்கிறீர்கள்.

முழுநேர பக்தியில் நீங்கள் ஈடுபட்டால், உங்களது பக்தியின் ஈடுபாட்டிற்கு தகுந்தமாதிரி கருணையினையும் அதுமட்டுமில்லாது எனது பிரேமையுடன் கூடிய அருகாமையினையும் நான் சோ்த்து அளித்திடுவதோடுகூட, பிரேமையினை அளிப்பது, எனது அண்மையினை அளிப்பது, உபகார வெகுமதி இவையாவும் இந்த வாழ்வினைக் கடந்த பின்னரும் உபயோகம் உள்ளதாக இருக்கும். எனது கருணையும் தொடா்ந்திடும்

பக்தர்: சுவாமி பகுதி நேர பக்தியிலும், நமக்கு அதிக நேரம் கிடைக்காது சுவாமி.

சுவாமி: முழு நேர பக்தியானது பகுதி நேர பக்தியை விட சுலபமானது.

பக்தர்: அது எப்படி சுவாமி?

சுவாமி: பக்தியினை அளப்பதற்கு எனக்கென ஓா் அளவு கோல் உண்டு, முழு  நேரத்துடன் கூடியபக்தி என்பது மிக எளிதானது "(வாழ்வின் ஏற்ற தாழ்வுகளை) எல்லா சூழ்நிலைகளிலும், எல்லா காலங்களிலும் வேறுபாடு இல்லாத மன நிலையோடு  பராமரிப்பது " என்பது முழு நேர பக்தி ஆகும்.

பக்தர்: சுவாமி பஜன்கள் மற்றும் நாம் செய்யும் பிற விஷயங்களைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

சுவாமி:  நல்லது, இவை அனைத்தும் உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க உதவும், ஆனால் இவை எல்லாம் பகுதி நேர பக்திதான்.

பக்தர்: அப்படியானால், நாம் எவ்வாறு முழுநேர பக்தியைப் பெற முடியும் சுவாமி?

சுவாமி:  நீங்கள் சரணடைந்தால் எல்லாம் எளிதானது.

பக்தர்:  சரணடைதல் என்றால் என்ன?

சுவாமி:  நீங்கள்தான் அனைத்தையும் செய்பவர்கள்  என்று நீங்கள் அனைவரும் நினைக்கிறீர்கள்.

பக்தர்: ஆமாம் சுவாமி, எந்தவொரு பணியும் எனக்கு முன்னால் வரும்போது, அதை ​​நான் முடிக்கும்போது நான் தான் செய்பவன், சுவாமி அல்ல என்று நினைக்கிறேன்.


சுவாமி ஒரு சிறுவனைப் பார்த்து,
"தம்பி நீ உன் இடது கையைத் தூக்கு" ... என்றார்.
உடனே பையன் தன் இடது கையைத் தூக்கினான்.

பின்னர் சுவாமி “இப்போது நீ வலது கையைத் தூக்கு” ​​என்றார்.
சிறுவன் அவ்வாறு செய்ய முயற்சிக்கிறான், ஆனால் அவனால் அதைத் தூக்க முடியவில்லை. அவன் கை உணர்வில்லாமல் இருந்ததை நினைத்து பயந்தான்..

பின்னர் சுவாமி, "நான்  எல்லாவற்றையும் செய்கிறேன், ஆனால் நான் தான் செய்கிறேன் என்பதைக் காட்டவில்லை, ஆனால் நீங்கள் எதையும் செய்ய முடியாது, ஆனால் நீங்கள் தான்  செய்பவர்கள் என்று கூறுகிறீர்கள் ". 

 உயிர் வாழ்தலின் அடிப்படையான மூச்சுவிடுவதே மனிதனின் செயலாக இல்லாத போது... எதுதான் மனிதனால் சாதிக்கப்படுகிறது?

இறைவன் சத்ய சாயியே எல்லா இயக்கங்களும்.. எல்லா செயல்களும்.. எல்லாவிதமான சாதனைகளும்...

மனிதன் முதல் அனைத்து ஜீவராசிகளும்...  எப்போதும் போல இறைவன் சத்ய சாயியால் இயக்கப்படும் கருவியே!

ஆதாரம்: Students with Sai Conversations Part 1 (1991-2000)
மொழிமாற்றம்: சித்ரா சாய்ராம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக