தலைப்பு

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

கடவுள் எங்கே இருக்கிறார்? - பாபா


ஒரு நேர்காணலின் போது சுவாமி, "கடவுள் எங்கே இருக்கிறார்?" என்று கேட்டார். பல சகோதரர்கள் பதில் கூறினர்.ஒருவர் "சுவாமி கடவுள்  எனக்குள் இருக்கிறார்"என்று கூறினார்."ஓ அப்படியா?அப்படியானால் நீ ஏன் புட்டபர்த்திக்கு வருகிறாய்?எதற்காக சுவாமியைப் பார்க்க வருகிறாய்?"என்று சுவாமி  சீண்டினார். சகோதரரால் பதில் சொல்ல முடியவில்லை.சுவாமி "பங்காரு, உன்னிடம் எண்ணம், சொல்,செயல் இவற்றின் ஒருமைப்பாடு இருக்கவேண்டும். உனக்குள் சுவாமி  இருக்கிறார் என்பதோடு அதை நீ உணரவும் வேண்டும். அந்த அனுபவத்துக்குப் பின்னால்தான் நீ அப்படிக் கூறமுடியும்.இல்லையென்றால் அது போலி நடிப்புதான்" என்று கூறினார். அனுபவத்தின் குரலில்தான் நாம் பேசவேண்டும் என்பதை நாங்கள் அதிலிருந்து புரிந்து கொண்டோம். இல்லையென்றால் அது பாசாங்கு.


சுவாமி கூறுவதன் உட்பொருளைப் புரிந்துகொள்ள (அந்தப் பொருளின் அனுபவமே சுவாமிதான்)அவரது போதனைகளை நாம், குறிப்பாக இளைஞர்கள், வெளிநோக்கிய போக்குக்கொண்டிருப்பதால், நாம் செயல்படுவதை புறச்செயல்பாட்டை நோக்கியே சாய்கிறோம்.பகவானின் போதனைகளை மையமாகக் கொண்டு, அதையே ஆழ்ந்து சிந்தித்து,, அதைச்(சிரமப்பட்டாவது) செயலில் கொண்டு வருவதுதான் சாதனைப் பாதை ஆகும். அந்தப் பாதையில்தான் சுவாமி நாம் நடக்கவேண்டும் என விரும்புகிறார். பகவானே! எங்கள்  திசையை மாற்றியமைக்கு நன்றி. இவற்றைப் பின்பற்றுவதற்கான பலத்தை நீங்கள்தான் கொடுக்கவேண்டும். இந்தப்  படிப்பினைகளைப் பின்பற்ற எங்களுக்கு ஆற்றல், அறிவு, விழிப்புணர்வு ஆகியவற்றைத் தாருங்கள். நன்றி,ஜெய் சாய்ராம்.

ஆதாரம்: 90 Divine Interactions of Bhagawan with youth

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக