தலைப்பு

வியாழன், 31 டிசம்பர், 2020

ஒரு வண்டின் வடிவத்தில் வந்து தன் புகைப்படத்தை ஆசிரியர் தம்பிராஜுவுக்கு தந்தருளிய சாயி!


எது நியாயமான தேவையோ அதை நேர தாமதம் இன்றி தரும் இறைவன் சத்யசாயி. சத்தியமான இந்த இறைவன் பேராசைகளுக்கு செவி சாய்ப்பதில்லை. நமது கோரிக்கைகள் அத்தியாவசியமானதா? இல்லை ஆசைகளால் உருவாக்கப்பட்டவையா? என்பதை நாமே பரிசீலிப்பது அத்தியாவசியம். ஆசைகள் நிறைவேறவில்லை என அவரை எண்ணி வருந்துவது அறிவீனம். தேவைகள் பர்த்தி பரமாத்மாவால் மட்டுமே பூர்த்தியாகும்.. அப்படியொரு ஏக்கம் அளித்த தேவை எவ்வாறு ஆச்சர்யகரமான வகையில் சுவாமி தீர்த்து அருளினார் என்பதை இந்தப் பதிவில் அணுஅணுவாய் அனுபவிக்கலாம்!

செவ்வாய், 29 டிசம்பர், 2020

ஷிர்டி சாயி பக்தர் சுப்பராவின் சந்தேக நோயை தீர்க்க வீட்டின் பூஜையறைக்கே வந்து பிரசாதம் ஏற்ற சத்யசாயி இறைவன்!

மனிதனின் முக்கியமான நோய் சந்தேகப்படுவது.. அதுவும் சத்தியத்தை சந்தேகப்படுவது கலியுகம் பரப்பி வருகிற விசேஷமான மனோ வைரஸ். அதை அழித்தொழிப்பது இறைவனால் மட்டுமே முடியும். வெகு ஆண்டுகளுக்கு முன்பே பக்தர்கள் தன் மேல் கொண்ட சந்தேகத்தை எவ்வாறெல்லாம் தீர்த்து வைத்தார் சுவாமி என்பதை உணர்த்தும் ஓர் அனுபவப்பூர்வ பதிவு இதோ...

திங்கள், 28 டிசம்பர், 2020

பாபாவை தரிசிக்க விழைந்த கைதிகள்... சிறைக்கே சென்று தரிசனம் கொடுத்த பாபா!

சிறைக்கும் கடவுளர்களுக்கும் யுக யுகமாய் தொடர்பு உண்டு போலும். திரேதா யுகத்தில் சீதா தேவியை சிறைமீட்ட ராமன், துவாபர யுகத்தில்  சிறையிலேயே பிறந்த கிருஷ்ணன்,  தேவர்களை சிறைமீட்ட குன்றுரை குமரன். இந்த வகையில் சர்வ தேவதா ஸ்வரூபமான நமது பாபா எவ்வாறு கருணயோடு  சிறைக்கே சென்று கைதிகளை ஆசீர்வதித்தார் என்பதையும்  காண்போம்... 

ஞாயிறு, 27 டிசம்பர், 2020

உலகப் பிரசித்தி பெற்ற கண் மருத்துவரின் கவலை தீர்த்த சாயி கண்ணன்!

 

Dr. S.S Badrinath - President & Chairman Emeritus – Medical Research Foundation & 
Founder – The Sankara Nethralaya Group, one of India's largest charitable eye hospitals.

பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயி என்பவர் மகத்துவத்தின் மருத்துவம்.. அவரே கணம்தோறும் ஆற்றுகிறார் மருத்துவத்தின் மகத்துவம் என்பதை பிரபல கண்மருத்துவர் பத்ரிநாத் உணர்ந்த மகிமைப் பதிவு இதோ... 

சனி, 26 டிசம்பர், 2020

ஆப்பிரிக்காவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட தன் வீட்டிலிருந்து சுவாமி கருணையால் உயிர் தப்பியது T.K.K பகவத் குடும்பம்!


அதிர்ஷ்ட வசமாய் உயிர் தப்பினேன் என மனிதர்கள் சொல்கிற வார்த்தையில் அவர்களுக்கே புரியாத ஒரு சத்தியம் மறைந்திருக்கிறது. அதிர்ஷ்டவசம் என்பதே இறைவன் சத்யசாயி கருணை வசம் தான். இறைவன் அருள் இல்லாமல் மனிதனால் எந்த செய்கையும் ஆற்ற முடியாது .. அவனுள் உயிர் ஆற்றலாய் இருந்து காரியங்களைச் செய்பவர் இறைவன் சத்ய சாயி என்பதை உணர்த்தும் உன்னதமான அனுபவப் பதிவு இதோ... 

வெள்ளி, 25 டிசம்பர், 2020

மயங்கி விழுந்த பக்தைக்கு சுடச் சுட பிளாஸ்கில் பால் கொண்டு வந்த பாசத் தாய் பர்த்தி சாய்!


தன் பக்தர்களை கண் போல் காப்பாற்றி வருபவர் சுவாமி... பக்தர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் ஓடி வந்து களைபவர்.. எல்லா ரூபமும் அவர் ரூபமே என்ற படியால் நமக்கு நெருங்கியவர்களின் ரூபம் எடுத்தும் நமக்கு ஓடோடி வந்து உதவுபவர் சுவாமி.. இதற்கான சிறந்த உதாரண அனுபவம் இதோ...

வியாழன், 24 டிசம்பர், 2020

பாபா விஞ்ஞான எல்லைகளைக் கடந்த அற்புதம் | பிரபல இந்திய விஞ்ஞானி டாக்டர். சூரி பகவந்தம்


சோதித்து தெளிவது விஞ்ஞானம்... 
(பக்தரை) சோதித்து தெளிய வைப்பது மெய்ஞானம்... 


டாக்டர்  பகவந்தம் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி ஆவார். டாக்டர் சர்.சி.வி ராமன்  (நோபல் பரிசு பெற்றவர்) அவர்களால் போற்றி பாராட்டைப் பெற்றவர்.பல சிறந்த பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். அகில இந்திய விஞ்ஞான கழகத்தின் இயக்குனராக மற்றும் இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு விஞ்ஞான ஆலோசகராகவும் பணி ஆற்றியவர். பாபாவின் அண்மையில் வசிப்பதற்காக பிற்காலத்தில் பிரசாந்திலையத்திலேயே ஒரு அறையில் தங்கினார். சாதாரண வசதிகளைக் கொண்ட அந்த அறையில் இரண்டு படுக்கை விரிப்புகளும் சில தலையணைகளும் மட்டும் தான் இருந்தன. இந்த அறையில் சில சமயம் அவரது மகன் திரு. பாலகிருஷ்ணா ( Asst. Director, National Giophysical Research Institute)அவர்களும் தங்குவதுண்டு.

புதன், 23 டிசம்பர், 2020

ஆஷாவின் பார்வையற்ற கண்களை பாபா தொட்ட உடன் பளீச் என வந்தது பார்வை!

பார்வையற்றவர்களுக்கு பார்வையாகிறார் பகவான் சத்ய சாயி.. பார்வை பார்த்து அவர்களுக்கு பார்வை தந்து அவர்களின் பார்வையில் நிறைந்துவிடுகிறார் பரம்பொருள் சாயி.. அத்தகைய அனுபவம் மெய்சிலிர்க்கும் படி இதோ..‌

செவ்வாய், 22 டிசம்பர், 2020

மும்பை பெருவெள்ளத்தில் இருந்து தன் பக்தரின் குடும்பத்தை காப்பாற்றி கரை சேர்த்த சாயி கிருபை!



தன்னை சரணாகதி அடைந்தவர்களை பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயி கைவிடுவதே இல்லை.. அவரின் கருணை அவசரப்படுவதும் இல்லை.. தாமதப்படுவதும் இல்லை.. மிக மிக சரியான நேரத்தில் நிகழக் கூடியது என்பதே சர்வ சத்தியம். அந்த சத்தியத்தின் ஒரு ஒளிக்கீற்று இந்த அனுபவம்.. சுவாமி தன் கரங்களை தேன்த்துளியாய் நீட்டி எவ்வாறு ஒரு பக்தரின் குடும்பத்தையே காப்பாற்றி கரை சேர்த்து வாழ்வை இனிக்க வைத்தார் என்பதற்கான மெய்சிலிர்க்கும் அனுபவம் இதோ...

திங்கள், 21 டிசம்பர், 2020

ஷிர்டி பாபாவை நேரில் தரிசித்து பக்தி செலுத்திய சுந்தரம்மா அவர்களின் சத்யசாயி அனுபவங்கள்!

105 வயதான திருமதி.பால திரிபுர சுந்தரி (சுந்தரம்மா) அவர்களுக்கு, ஷீரடி சாயி,சத்ய சாயி என இரண்டு அவதாரப்புருஷர்களையும் வணங்கும் பாக்கியம் கிடைத்திருந்தது!! 2004ம் வருடம் அக்டோபர் மாதம், தசராவின் போது, தனது 106 வயதை நிறைவு செய்யும் அவர், தன்னுடைய ஆத்மார்த்தமான  அனுபவங்களை, விவரிக்கிறார்... 

ஞாயிறு, 20 டிசம்பர், 2020

மருத்துவத்தையே மகத்துவமாக்கிய சாயி லீலா சிகிச்சைகள் - டாக்டர் Bollmann வியக்கிறார்!

இறைவன் பேராற்றல் கர்ம நோய்களையும் நிவர்த்தி செய்கிறது. நமக்கு வேண்டிய பேரமைதியை பூர்த்தி செய்கிறது. அத்தகைய பெருங்கருணையை தேடி வந்த மருத்துவர் அனுபவித்து உணர்ந்த அற்புதங்கள் பல இதோ...

சனி, 19 டிசம்பர், 2020

விதி விளையாடிய விளையாட்டில்... ஜெயித்தது பாபாவின் கருணை!



பேராசிரியர் U.S ராவ் அவர்கள் , ஸ்ரீ சத்யசாயி மேல் நிலைக் கல்வி கழகத்தில், வணிகவியல் துறையின் தலைவராக 13  ஆண்டுகள் ( 1988-2011) பதவி வகித்தவர். பிரசாந்தி நிலைய கல்லூரி வளாகத்தின் இயக்குனராகவும் இருந்துள்ளார்... 

வெள்ளி, 18 டிசம்பர், 2020

சுவாமி கொடுத்த கவருக்குள் பாம்பு இருக்குமோ என பயந்த மாணவனுக்கு காத்திருந்தது அதிசயம்!!!


இறைவன் சத்யசாயியின் கருணை அளப்பரியது.. அதிசயம் நிறைந்தது.. பேரன்பு நிரம்பியது. அவர் பேரன்பு வடிவம் என்பதற்கு அவரின் சொல்/செயல்/அசைவே சாட்சி. பலர் ஆன்மீகப் போர்வையில் பிறர் மேல் பொறாமைப்பட்டு வசைபாடுகிறார்கள். சுவாமி ஒருவரை குறித்தும் / ஒன்றை குறித்தும் வசைபாடியதே இல்லை.. நம்மையும் வசைபாடச் சொன்னதில்லை. காரணம் கடவுள் அவரே என்பதால் தான் அத்தகைய பேரன்பு! எல்லோரும் அவரின் குழந்தைகளே என்ற சாயி வாத்ஸல்யம். அத்தகைய பேரன்பு தன் பிரியமான மாணவனிடம் ஆற்றிய பெருங்கருணை இதோ...

வியாழன், 17 டிசம்பர், 2020

ஒரு நர்ஸ் வடிவத்தில் தோன்றி வெட்டப்பட வேண்டிய கால்களை மெதுவாகத் தடவியே குணமாக்கிய சாயி கருணை!

இறைவன் சத்ய சாயியை வழிபடுவது இந்தப் பிறவிக்கு மட்டுமல்ல .. கடந்த மற்றும் நிகழப் போகும் பிறவிகளை அறுக்கச் செய்யும் அருமருந்து.. சுவாமி தன் பக்தர்களை இன்னலிலிருந்து/ இக்கட்டிலிருந்து எவ்வாறெல்லாம் காப்பாற்றி குணமாக்குகிறார் என்பதற்கான ஆச்சர்ய சம்பவங்களில் இதோ இந்த பேரனுபவமும் ஒன்றே...!

புதன், 16 டிசம்பர், 2020

பிறவி ஊமைப் பெண்ணை கரூரில் பேச வைத்த பரமபிதா சத்யசாயி!


கடவுள் எதிரே நடந்தால் வனாந்தரம் பிருந்தாவனமாகிறது. வறண்ட இதயம் வற்றாத கங்கையாகிறது. ஊமை பேசுகிறது. பார்வையில்லாதவர்க்கு முகப் பார்வையும்.. பார்வையுள்ளோர்க்கு அகப் பார்வையுமே கிடைத்துவிடுகிறது! அத்தகைய பேரதிசயம் எல்லாம் சர்வசாதாரணமாக கடவுள் சத்ய சாயியால் மட்டுமே நிகழ்கிறது.. இந்த நிகழ்வு இன்னமும் தொடர்கிறது.. அந்த அற்புத வெளிச்சங்களின் ஓர் சிறு சூரியக் கீற்று இதோ... 

செவ்வாய், 15 டிசம்பர், 2020

பிறந்தநாள் பரிசாக சுவாமியிடம் மரணத்தையே விரும்பிக் கேட்ட அபூர்வ பக்தை ராஜமாதா!


சுவாமியோடு வாழ்வது என்பது சுவாமியின் சொல்லை நடைமுறைப்படுத்துவதே. வழிபட்டு விட்டால் மட்டும் அதிலேயே சுவாமி திருப்தி அடைவதில்லை. அது ஆன்மீக வாழ்வும் அல்ல... எந்த ஆத்மார்த்த பக்தரும் சுவாமி பக்தராகிவிட்டால் வாழ்க்கை மட்டுமல்ல அவர்களின் மரணமும் மிக அமைதியோடு.. மிக அழகாக.. எப்படி ஒரு வெள்ளரிப் பழம் கொடிக்கும் தனக்கும் வலிக்காமல் கீழே விழுவது போல் நிகழும்.. அப்படி பூரண சாயியிடம் பூரணப்பட்ட ஒரு பக்தையின் கடைசி நிமிடங்கள் இதோ... 

திங்கள், 14 டிசம்பர், 2020

சுவாமி நேரில் தான் விபூதி தரவேண்டும் என அவசியமே இல்லை - டாக்டர். கிஷன் காடியா

சுவாமி விபூதி மழையாய் இன்றளவும் பல இல்லங்களில் பொழிகிறார். பணம் / புகழ் எதிர்பார்க்காத குடும்பத்தினருக்கே குறிப்பாக இந்த அற்புத லீலைகள் நிகழ்கிறது என்பதே உண்மை.  சுவாமி மகிமைக்கு விலையே இல்லை.. அதைப் போலவே சுவாமி பொழிந்த விபூதியும் இப்போது படங்களில் பொழியும் விபூதியும் ஒரே விபூதியே... அதை பல ஆண்டுகளுக்கு முன்பே சுவாமி உணர்த்தியிருக்கிறார். தானாய் நிரம்பிய விபூதி லீலையும்... சந்தேக ராமன்களாய் இருந்த கிஷன் காடியா மற்றும் அவரின் நண்பர்கள் சத்யசாயி ராமனின் பக்தர்களாய் மாறிய அக மாற்றமும் இதோ...

ஞாயிறு, 13 டிசம்பர், 2020

துப்பாக்கி முனையிலிருந்து சுவாமியின் கருணையால் உயிர் தப்பிய டாக்டர் கிஷன் காடியா!


உயிர் தருவதும்.. உயிரை மீட்டு தருவதும் .. மனித உயிரில் உறைந்திருப்பதும் சுவாமியே.. ஒரு விஷயம் சுவாமி சொல்கிறார் எனில் அது நிகழ்ந்தே தீரும். அவரின் சொல்படி நடக்கும் ஜீவன்கள் பாதுகாக்கப்படும் என்ற உன்னத சத்தியத்தை உணர்த்தும் பதிவு இதோ... 

சனி, 12 டிசம்பர், 2020

பள்ளி ஆசிரியையின் புற்று நோயை குணமாக்க பறந்து வந்தது சாயி விபூதி!


எத்தனை அலைந்து திரிந்தாலும் இறுதியில் இறைவன் ஸ்ரீ சத்யசாயி பாதத்திலேயே எவரும் வந்து சேர வேண்டும். பல ஜென்மம் எடுத்த போதும் இறுதி இலக்கு இறைவன் ஸ்ரீ சத்யசாயி பாதமே. சுவாமி புத்தகம் படித்து அவரின் மகிமையை சோதித்துப் பார்க்க புற்றுநோய் கொண்ட ஒருவரை சுவாமியிடம் அனுப்பிய ஒருவருக்கும்.. அந்த புற்று நோயாளிக்கும் நேர்ந்த பரவச அனுபவங்கள் இந்தப் பதிவில் இதோ...

வெள்ளி, 11 டிசம்பர், 2020

மருத்துவரால் வெட்டி எடுக்கப்பட வேண்டிய கால் மகத்துவ சாயியால் குணமாக்கப்பட்டது!

விபரீதமான சூழ்நிலையிலும் விரைந்து வந்து அருள் பாலிக்கக் கூடியது சுவாமியின் பெருங்கருணை... எந்த ஒரு ஆபத்துமின்றி பக்தரை தன் அருட் அரவணைப்பால் காப்பாற்றி தனது பக்தரின் திட நம்பிக்கையையும் ... ஆழமான பக்தியையும் பெருகச் செய்பவர் சுவாமி எனும் சத்தியமான அனுபவம் இதோ இந்த மெய் சிலிர்க்கும் பதிவில்...

வியாழன், 10 டிசம்பர், 2020

பாண்டியன் வங்கி ஸ்தாபகர் SNK சுந்தரத்தின் சகோதரருக்கு சுவாமி அளித்த சிகிச்சை!

தனியார் வங்கியான பாண்டியன் வங்கியை 1946'ல் துவக்கியவர் தான் மதுரை தொழிலதிபர் திரு SNK சுந்தரம் அவர்கள். இந்த வங்கியே முதன்முதலாக பெண் ஊழியரைக் கொண்ட வங்கியாக.. பெண்களும் சேமிக்க உதவும் வகையில் தன் சேவையை திறம்பட செயல்படுத்தியது. பிற்காலத்தில் (1963) அது கனரா வங்கியோடு இணைக்கப்பட்டது. அதை தோற்றுவித்த சுந்தரம் அவர்களின் சகோதரருக்கு சுவாமி ஆற்றிய கருணை சிகிச்சை இந்தப் பதிவில்...

செவ்வாய், 8 டிசம்பர், 2020

ஞாயிறு, 6 டிசம்பர், 2020

சீர்காழி சிவசிதம்பரம் அவர்களின் சத்யசாயி அனுபவங்கள்!


சாய்ராம்! சுவாமியின் நீண்டநாள் பக்தரும், காலம் சென்ற இசைமாமணி, பத்மஸ்ரீ திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் புதல்வரும், திரு கபாலீஸ்வரர் கோயில் மற்றும் வடபழனி முருகன் கோவில் முன்னாள் அறங்காவலருமான  சாய் சகோதரர் Dr. சீர்காழி சிவசிதம்பரம் அவர்களின் ஆத்மார்த்த அனுபவங்கள்

சனி, 5 டிசம்பர், 2020

வெள்ளி, 4 டிசம்பர், 2020

"நீ எவ்வளவு செலவு செய்கிறாய்?" - ஜெய்சங்கர் சுந்தரம் (Alumni, SSSIHL)


HDFC வங்கியில் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் ஆகிய நாங்கள் ஒரு குழுவினராக 2004 டிசம்பரில் பிரசாந்தி நிலையத்திற்கு வந்திருந்த சமயம், சுவாமி அவர்கள் எங்களிடம் சமயத்திற்திற்கு ஏற்றவாறு மூன்று கேள்விகளை முன்வைத்தார்.

நாம் உண்ணும் உணவு எப்படி இருக்க வேண்டும்?


நாம் உண்ணும் உணவு எப்படி இருக்க வேண்டும்? என்பதை பற்றி நம் அன்பு பகவான் கூறியுள்ளவற்றை தெரிந்து கொள்வோமா..

வியாழன், 3 டிசம்பர், 2020

இறந்த குழந்தையை உயிர்ப்பித்த சாயி லீலா விநோதம்!


இறந்த குழந்தையால் மனம் ஒடிந்த தாய் , பாபாவை வசைபாட, அதை தம்மைத் துதிக்கும் இசையாக ஏற்ற பகவான், குழந்தையை உயிர்ப்பிக்க, மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற தாய், தன் உணர்ச்சிப் பெருக்கில் பகவானைத் துதித்த உண்மை சம்பவம்...

புதன், 2 டிசம்பர், 2020

திரு. ராமானந்தன் அவர்களின் 'திக்திக்' சாயி அனுபவங்கள்!


ஸ்ரீ சத்ய சாயி பகவானின் மீது முழுமையான நம்பிக்கை இருந்தால் அவர் எந்த சூழ்நிலையில் இருந்தும், எந்த பிரச்சினைகளில் இருந்தும் நம்மை காப்பாற்றுவார் என்பதற்கு இந்த கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த திரு ராமானந்தன் அவர்களின் அனுபவம் நமக்கு எல்லாம் ஒரு உதாரணம். 

செவ்வாய், 1 டிசம்பர், 2020

நம் சுவாமியை யாராவது ஏதாவது தவறாகப் பேசினால் கோபம் வருகிறதே? மன அமைதி போகிறது ? என்ன செய்வது?


இந்த விஷயத்தில் இரு வகையாக கோபம் வரும் . ஒன்று சுவாமியை யாராவது தவறாகப் பேசுவது.. மற்றொன்று நமக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு அதற்க்காக சுவாமியிடமே நாம் கோபம் கொள்வது. இரண்டுமே தவறு.

1-50 | ஸ்ரீ சத்யசாயி தெய்வீக நிகழ்வுகள்!


இறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது இதோ..