தலைப்பு

சனி, 5 டிசம்பர், 2020

வடை பெற்றபோது அதனிலிருந்து விடை பெற்ற சாயி லீலா விநோத தங்கக் காதணி!


அலகிலா விளையாட்டுடையார் என மகாகவி கம்பர் பாடியது இறைவன் சத்ய சாயிக்கே 100 சதவிகிதம் பொருந்தும்! 

அவரின் திருவிளையாடல் மேடையே இந்த தரணி. மேடையும் கட்டி அதில் லீலா விநோதங்களையும் அரங்கேற்றி அதில் பார்வையாளர்களாய் மனிதர்களையும் உருவாக்கி தன் தெய்வீக நாடகத்தை நடத்துவது சுவாமியே. அதில் எண்ணற்ற விநோத காட்சிகள். வாண வேடிக்கையை வானத்தை விட்டுவிட்டு பூமியிலேயே நிகழ்த்தும் அவரின் அதி அற்புதம் கற்பனைக்கு எட்டாதது.. அவை அனைத்தும் அவரின் பேரன்பின் பிரவாகம். மனிதா நீ எதையும் நிகழ்த்தவில்லை என மௌனமாய் சத்தியம் பேசும் மகிமா நாடகம். தன்னை மனிதன் வெறும் சாட்சி பாவமாக உணர்வதற்காக.. கருவியாக அவனை வைத்தும் இறைவன் சத்யசாயி அரங்கேற்ற வல்லவர். அவரால் புரிய முடியாத லீலைகள் எதுவுமில்லை.. ஆற்ற முடியாத அற்புதம் ஏதுமில்லை.. நெருப்பில் கங்கும்.. சுடரும்.. தீப்பந்தமும் ஒரே தணலையே வெளிப்படுத்துவது போல் சுவாமியின் அற்புதங்கள் சிறிது/பெரிது ஏதுமில்லை.. யாவும் அவரின் பேரன்பின் பொழிவுகளே.. அப்படி சுவாமியின் ஆதி பக்தர் / முதல் டிரஸ்டி / சுவாமி சொல்படி உலகத்திலேயே ஷிர்டி சுவாமி பற்றிய முதன்முதலாக திரைப்படம் எடுத்த தயாரிப்பாளர் உயர்திரு இந்துலால் ஷா அவர்களின் குடும்பத்தில் ஓர் சம்பவப் பொழிவாய் சுவாமி ஆற்றிய அற்புதம் இதோ...


1967ல் பாம்பே விஜயத்தின் போது பகவான், சாந்தக்ரூஸில் இந்துலால் ஷாவின் வீட்டில் தங்கியிருந்தார். ஒரு நாள் தன் குழுவினருடன் பாபா காலை சிற்றுண்டி உண்டு கொண்டிருந்தார். திருமதி. சரளா ஷா சூடான வடைகளை எல்லாருக்கும் பரிமாறினார். பாபா தர்சனாவைக் கூப்பிட்டு, “ஒரு வடையைக் கொடுத்து பார் உன் அம்மா எனக்கு என்ன பரிமாறி இருக்கிறார் என்று!” – இவ்வாறு கூறி வடையை இரண்டாக பிரித்து, ஒவ்வொரு பாதி 5 ஒரு காதணி வீதம், ஜோடி காதணிகள் பள பள வென இருந்தன!! புன்னகையுடன் பாபா எழுந்து, அவற்றை தனியே எடுத்து அனைவருக்கும் காண்பித்து, பிறகு தானே தர்ஷனிக்கு அணிவித்தார்!!!

ஆதாரம்: Sathyam Sivam Sundharam Vol. 5 P – 304

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம். 

🌻அற்புதங்களை எல்லாம் ஆராய்வதை விடுத்து அனுபவிக்க வேண்டும். காரணம் விஞ்ஞானத்தையே ஆராய வேண்டும்.. விஞ்ஞானத்தையும் தனக்குள்ளே அடக்கி வைத்திருக்கும் சத்யசாயி மெய்ஞானத்தை அனுபவிக்கவே வேண்டும். உள்ளங்கையில் தேனை வைத்துக் கொண்டு அது எந்த மலையிலிருந்து எந்தக் கூடிலிருந்து யார் கொண்டு வந்தது என வானைப் பார்க்கிறோமா? தேனை ருசி பார்ப்பதற்கு தேன்-மூலம் அறிய வேண்டியதில்லை. பூமி நிகழ்வுகளையும்... நம் வாழ்க்கை நிகழ்வுகள் யாவையும் இங்கு நிகழ்த்துவது சத்யசாயி ஆதிமூலமே!!! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக