தலைப்பு

ஞாயிறு, 6 டிசம்பர், 2020

சீர்காழி சிவசிதம்பரம் அவர்களின் சத்யசாயி அனுபவங்கள்!


சாய்ராம்! சுவாமியின் நீண்டநாள் பக்தரும், காலம் சென்ற இசைமாமணி, பத்மஸ்ரீ திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் புதல்வரும், திரு கபாலீஸ்வரர் கோயில் மற்றும் வடபழனி முருகன் கோவில் முன்னாள் அறங்காவலருமான  சாய் சகோதரர் Dr. சீர்காழி சிவசிதம்பரம் அவர்களின் ஆத்மார்த்த அனுபவங்கள்

Dr. சிவசிதம்பரம் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் சீர்காழி கோவிந்தராஜன்  அவர்களின் புதல்வர் ஆவார். இவரது தந்தையார் திரு கோவிந்தராஜன் திரைத்துறையிலும் இசைத் துறையிலும் முன்னணியில் இருந்த போது உறவினரின் பேச்சைக் கேட்டு சொந்தப்படம் எடுக்க முயன்று கடனாளி ஆனார்.   கவலையிலிருந்த கோவிந்தராஜனை அவரது நண்பர் பகவான் பாபாவிடம் அழைத்துச் சென்றார் அன்பு மிகுந்த பகவான்   கோவிந்தராஜனின் கடனைத் தீர்த்து கவலையைப் போக்கி ஆட்கொண்ட அற்புதகதையை தெரிந்து கொள்ளவும், 

மேலும் சென்னை வந்திருந்த சுவாமியை குடும்பத்துடன் கோவிந்தராஜன் தரிசித்த போது கோவிந்தராஜன் எதுவும் கூறாமலே அவர் மனதில் இருந்த மகன் திருமணம் பற்றிய  எண்ணங்களை சுவாமி எப்படி அப்படியே கூறினார் என்பதை தெரிந்து கொள்ளவும 

மேலும் சிவசிதம்பரம் தேர்வில் ஒரு பாடத்தில்  தோல்வி அடைய இருந்த நிலையில் சுவாமியின் ஒரு ஆசீர்வாதம்  தேர்வில்  அவரை எப்படி தேர்ச்சி பெற  வைத்தது என்பதை தெரிந்து கொள்ளவும்

ஒருமுறை சுவாமி முன்னிலையில் கச்சேரி செய்த கோவிந்தராஜன் அவர்களுக்கும் சக பக்கவாத்திய கலைஞர்கள் 6 பேருக்கும் தங்க டாலர் சுவாமி சிருஷ்டி செய்து தருகிறார்   அதில் இருவரின் தங்க டாலர்கள் அப்படியே பிரகாசத்துடன் இருக்க மற்ற 5 பேரின் டாலர்கள் நிறம் மாறிப்போனது. ஏன் அப்படியானது? என்பதை தெரிந்து கொள்ளவும் 

மேலும் திரு சிவசிதம்பரம் கபாலீஸ்வரர் கோவில் வடபழனி கோவில் அறங்காவலராக இருந்த போது  சாயி நிறுவனத்தில் தாம் கற்ற சேவை பணிகள் தனக்கு மிக நல்ல பெயரை பெற்று தந்தது என கூறுகிறார் அதை பற்றி தெரிந்து கொள்ளவும்
 
வாருங்கள் உள்ளே! 
👇👇


மொத்தம்  ஒரே பாகம்

Source :ரேடியோ சாய்
ஒளிபரப்பு செய்யப்பட்ட வருடம்: மே 2010



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக