தலைப்பு

திங்கள், 14 டிசம்பர், 2020

சுவாமி நேரில் தான் விபூதி தரவேண்டும் என அவசியமே இல்லை - டாக்டர். கிஷன் காடியா

சுவாமி விபூதி மழையாய் இன்றளவும் பல இல்லங்களில் பொழிகிறார். பணம் / புகழ் எதிர்பார்க்காத குடும்பத்தினருக்கே குறிப்பாக இந்த அற்புத லீலைகள் நிகழ்கிறது என்பதே உண்மை.  சுவாமி மகிமைக்கு விலையே இல்லை.. அதைப் போலவே சுவாமி பொழிந்த விபூதியும் இப்போது படங்களில் பொழியும் விபூதியும் ஒரே விபூதியே... அதை பல ஆண்டுகளுக்கு முன்பே சுவாமி உணர்த்தியிருக்கிறார். தானாய் நிரம்பிய விபூதி லீலையும்... சந்தேக ராமன்களாய் இருந்த கிஷன் காடியா மற்றும் அவரின் நண்பர்கள் சத்யசாயி ராமனின் பக்தர்களாய் மாறிய அக மாற்றமும் இதோ...


இர்வின் மருத்துவமனையோடு இணைந்திருந்த குஜராத் ஜாம் நகரில் M.P.ஷா மெடிக்கல் காலேஜில் டாக்டர் காடியா அவர்கள் முதுகலை பட்டப்படிப்பான M.D.படித்துக் கொண்டிருந்தார். மாலை நேரங்களில், கல்லூரி மாணவர்களிடம் பாபாவைப் பற்றிய செய்திகளைப் பற்றி பேசுவார். அதேபோல் வந்தஃபாலி என்ற இடத்தில் இருந்த சீரடி கோவிலிலும் பேசுவார்.


டாக்டர் காடியாவின் உரையை கேட்ட அங்கேயே படித்து வந்த கிஷன் காடியாவும் அவரது நண்பர்களும், "இவை அனைத்தும் கற்பனை கதைகள்" என்று கூறினர். இப்படியே ஆரம்பத்தில் மனம் சந்தேகப்படுகிறது. தானே எதை எதையோ கற்பனை செய்து கொள்கிறது‌.
கிஷன் காடியா, டாக்டர் காடியாவின் சகோதரன் முறையிலான உறவினரும் ஆவார்.டாக்டர் காடியா அவர்கள் அனைவரையும், ஒரு தடவை பிரசாந்தி நிலையம் சென்று வந்தால் தான் கூறுவது உண்மை என உணர்வீர்கள் என்றார்.

கிஷன் மற்றும் நான்கு நண்பர்களும் பிரசாந்தி நிலையம் சென்று வர தீர்மானித்தனர். டாக்டர் காடியா ஒரு சிறு வெள்ளி டப்பா ஒன்று வாங்கி உடன் எடுத்துச் செல்லுமாறு கிஷனிடம் கூறினார். வீட்டிற்கு சென்றதும் அதில் விபூதியை நிறைத்துக் கொடுக்க நினைத்து டப்பியை திறந்தால் அதில் விபூதி நிறைந்து இருந்தது. டாக்டர்  காடியாவையே கிஷன் சந்தேகப்படுகிறார். அந்த கடைக்காரர் சாயிபாபா பக்தராக இருக்கலாம்.. உன் நண்பராக இருக்கலாம்.. ஆகவே தான் விபூதி அடைத்து தந்திருக்கிறார் என சந்தேகச் சொல் விடுக்கிறார். கடையில் சென்று கேட்டால், அந்த சிறிய டப்பா மூக்குபொடி அடைக்க உபயோகிப்பது; தான் விபூதி எல்லாம் அதில் போடவில்லை ,வேண்டுமானால் வேறு டப்பா மாற்றி தருவதாக கூறினர். சாயிபாபா பற்றி தங்களுக்கு தெரியுமா என காடியா கேட்க.. தெரியாது என்கிறார் அந்த கடைக்காரர்.

பிறகு தனது சகோதரரான காடியாவை கிஷன், "எப்படி இது நடந்தது?" என கேட்க, ப்ரசாந்தியில் பாபா இதற்கு விடை கூறுவார் என்றார். கிஷனும் நண்பர்களும் தங்கள் முதல் அனுபவத்தைப் பெற, ப்ரசாந்தி வந்து அடைந்தனர்.பாபா உடனே இன்டர்வியூ கொடுத்தார். கருணையோடு ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அவர்கள் எந்தந்த இடத்திலிருந்து வருகிறார்களோ அந்த இடத்தையும் சுட்டிக் காட்டி அழைக்கிறார்!


ஷா என்ற பையனை அழைத்து, "உனக்கு பிறந்தது முதல் ஒரு  காதில் பிரச்சனை! அதனால் தான் அது கேட்பதில்லை...அடுத்த வாரம் காதில் அறுவை சிகிச்சை செய்யப்போவதாக டாக்டர் கூறினார்கள் இல்லையா? என்றார்.ஷா கண்களில் நீர் ததும்ப, ஆமாம் என்றார். தனக்கு இந்தப் பிரச்சனை இல்லாதிருந்தால் தான் ஒரு முழு டாக்டராக ... ஸ்டெஸ்தஸ்கோப் இருகாதுகளிலும் பொருத்தி நன்கு வைத்தியம் பார்க்கலாமே என்ற உணர்வு ஷாவுக்கு ஆழ்மனதில் இருக்கவே செய்தது.  பாபாவோ 'கவலைப்படாதே ஸ்வாமி உன் காதை  குணமாக்கி விடுகிறேன்' என தன் விரலால் பிரச்சனைக்கு உள்ள அந்தக் காதை தோடுக்கிறார். கேட்காது என்றிருந்த காது அந்த நொடியே கேட்க ஆரம்பித்தது.. சிலிர்த்துப் போயினர் கிஷனும் அவரது நண்பர்களும்..
பிறகு ஆறு பையன்களுக்கு விபூதி கொடுக்கிறார். 
கிஷன் ,"தனக்கு ஏன் தரவில்லை" எனக் கேட்க. உனக்கு ஜாம் நகரிலேயே கொடுத்து விட்டேனே" என்கிறார் சுவாமி. 
அதிர்ந்து போகிறார் கிஷன். 
கிஷனை தனியாக அழைத்து..
"வேறு எதாவது சந்தேகம்?' எனக் கேட்க.
'இல்லை சுவாமி' என்கிறார்.
உனக்கு omniscient / omnipresence/ omnipotent பற்றி விளக்குகிறேன் என அறிவித்து...
சுவாமியோ 'உன் தாயாருக்கு கம்பாலாவில் ஹார்ட் அட்டாக் வந்துள்ளதுு'... என்கிறார். அதற்கு கிஷனோ.. 'இருக்கவே முடியாது.. சென்றவாரம் கூட நலம் என்றே கடிதம் வந்தது என மறுபதில் கூற.. சுவாமியோ 'நான் சென்ற வாரம் பற்றி தெரிவிக்கவில்லை.. இன்றைய நிலையை சொல்கிறேன்' எனச் சொல்ல..
கிஷன் உடனே கண்கலங்கி "சுவாமி நீங்கள் கடவுள்.. நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்' என்கிறார். சந்தேக ராமனான டாக்டர் கிஷன் காடியா அந்த நொடியே சத்யசாயி ராம பக்தனாகிறார்.
'கவலைப்படாதே ஸ்வாமி நான் குணமாக்கி விடுகிறேன்" என்கிறார் கருணாமூர்த்தியான கடவுள். பதட்டமும் பயமும் கொண்ட கிஷன். தனது சந்தேகம் எல்லாம் தீர்ந்து விட, பாபாவை_ தன் தாயாரை காத்தருளுமாறு வேண்டியதும் சுவாமி இணங்க நிம்மதி பெருமூச்சுவிடுகிறார். மிக மிக கருணையும் இரக்கமும் கொண்ட கடவுளே சுவாமி என உணர்கிறார்!


இன்டர்வியூக்கு பிறகு அவர்களை மும்பை போக ஸ்வாமி அனுமதிக்கிறார். மும்பையில் இருந்து தன் தகப்பனாருடன் பேசிய கிஷன், தாயார் தேறி வருவதாக அறிகிறான. டாக்டர் காடியா பேசிய  பாபாவைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் உண்மை என உணர்ந்தனர்-கிஷனும் அவரது  நண்பர்களும்... தாங்களே பகவானை சோதித்து அனுபவங்களால் இறுதியில் சுவாமியே சாட்சாத் கடவுள் என உணர்ந்து கொண்டனர்!!!
                                     

ஆதாரம்: Sai Smaran- P.154 

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம்.  


🌻 சந்தேகப்படுவது ஆரம்ப நிலை.. அது அறியாமையால் வருவதே! சரணாகதி என்பது பேரின்ப நிலை.. அது ஞானத்தால் வருவதே! வாழ்க்கை என்பது நாம் நினைப்பது போல் வேறெதுவுமே அல்ல.. அறியாமையிலிருந்து ஞானத்திற்கு சுவாமி விரல் பிடித்து அழைத்துச் செல்லும் உள்முகப் பயணமே ஒவ்வொருவர் வாழ்க்கையும்.. வாழ்க்கையே வாழ்க்கைக்கான இலக்கும்!🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக