தலைப்பு

செவ்வாய், 8 டிசம்பர், 2020

சந்தேக ராமனாய் இருந்து சாயி ராம பக்தனானது! - M.K காவ் IAS(Retd)

M.K. Kaw was an Indian bureaucrat and author who served as Secretary, Civil Aviation and Secretary, Ministry of Human Resource Development. An officer of the 1964 batch of the Indian Administrative Service, he served in numerous positions in the government of Himachal Pradesh and the Government of India.

மகராஜ் கிஷன் காவ்( M.K.Kaw) இந்திய அரசின் உயர் பதவிகள் பல வகித்த ஒரு I.A.S.அதிகாரி. பகவானின் பிரத்யட்சத்தில்  நம்பிக்கை அற்றவராக இருந்த அவர், பின்னர் முழுவதுமாக  மனம் மாறி பகவானின் அன்புத் தொண்டரானார். பதவி ஓய்வுக்குப் பின், ஸ்ரீ சத்யசாயி அகில உலக மனிதவள மேம்பாட்டுக் கழகத்தின் தலைமைப் பொறுப்பை  ஏற்றார். பல சிறந்த புத்தகங்களையும் அவர் எழுதி வெளியுட்டுள்ளார்.



🌷முன்னம் அவர் நாமம் கேட்டேன்:

முதன் முதலில் நான் பாபாவைப் பற்றி கேட்டு அறிந்தது என் மாமாவிடம் தான். தனக்கு பிள்ளை இல்லாத குறையால் , அவர் பர்த்தி சென்று பாபாவை தரிசித்தார். பாபா அவருக்கு விபூதி பிரசாதம் அளித்ததும், தம் குறை தீருமென  நினைத்து ஊர் திரும்பினார். ஆனால் அவ்வாறு நிகழவில்லை. அவர் இது பற்றி கூறியதாவது பகவானால் கொடுக்க இயலாத வரமோ, தீர்க்க இயலாத பிணியோ இல்லை. ஆயினும் நம் கர்ம வினைத் தொடர்பான இன்னல்களில் அவர் அடிக்கடி தலையிடுவதில்லை. சில சமயம் பக்தர்களின் ஆழ்ந்த அன்பும் பக்தியும் , பகவானை ஈர்த்து பலரின் கர்ம வினைகளைக் களைந்து, அவர்களை மீட்கிறார். 

🌷பாபாவின் முதல் தரிசனம்.... 15 நொடிகளில் முடிந்தது:



1973 ல் நான் சோலான் மாவட்டத்தின் 
கலெக்டராக பொறுப்பேற்றிருந்தேன். பாபா அப்போது சிம்லா சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியில்தான் சோலான் நகரமும் இருந்தது. என் மனைவியும் வேறு சிலரும் பஸ் நிலயத்தில் அமர்ந்து சிலபஜன் பாடல்களை இசைத்துக் கொண்டிருக்க , நான் போலீஸ் கண்காணிப்பாளருடன் கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தேன். திடீரென ஒரு பைலட் ஜீப் சாலையில் தென்பட , அதன்பின் ஒரு காரின் பின் இருக்கையில் ஆரஞ்சு வண்ண ஆடையுடன் பாபா அமரந்திருக்கக் கண்டேன். கூட்டம் காரை சூழ்ந்தது. கதவைத் திறந்து பாபா இறங்கினார். பாத நமஸ்காரம் செய்ய முயன்ற மக்களிடமிருந்து தம்மை விடுவித்து 15தே நொடிகளில் மின்னலென காரின் உட்புறம் சென்று அமர்ந்துவிட்டார். கார் வேகம் எடுத்து அவ்விடத்தை விரைவில் கடந்து சென்றது. பஜனை முடிந்து அருகே வந்த என் மனைவியை பார்த்து ஏளனமாக கூறினேன். " பார். பக்தர்களாகிய உங்களுக்கு பாபா தரிசனம் கிட்டவில்லை. ஆனால் பாவிகளாகிய எங்களுக்கு கிடைத்துவிட்டது. "இதைக்கேட்ட என் மனைவி சிரித்தார். வீடு சென்றதும் என் ஆடர்லி கூறிய செய்தி என்னை வியப்பில் ஆழ்த்தியது. பாபாவின் தரிசனம் காண அவர் எனது இரண்டு வயது மகனை கூட்டிச் சென்றபோது, பாபா காரைவிட்டு இறங்கி , என் மகன் தலைமீது கைவைத்து ஆசீர்வதிச் சென்றாராம். பாபாவின்  இந்ததனிப் பெரும் கருணையை நினைத்து வியப்பில் ஆழ்ந்தோம். 

🌷விபூதியால் கேன்சர் கேன்சல்... I.P.S. அதிகாரியின் அனுபவம்:


இதன் பின்னர்  பல சமயங்களில் பாபாவின் லீலைகளைப் பற்றி கேட்கும் வாய்ப்பு பெற்றேன். என் மேலதிகாரி ஒரு பாபா பக்தர். அவர் மூலம் பாபா பற்றிய  பல அரிய செய்திகளை அறிய நேர்ந்தது. பின்னர் ஒருநாள் டெல்லியில் என் மேலதிகாரி வீட்டில் சாயி பஜன் நடைபெற்றபோது , ஒரு I.P.S. அதிகாரியை சந்தித்தேன். அவர் கூறிய பாபாவின் கருணா லீலையை கேட்டு வியந்து மனம் உருகினேன். அந்த அதிகாரிக்கு கேன்சர் நோய் உறுதிபடுத்தப்பட்ட வேளை, அவர் பாபா சிருஷ்டித்த விபூதியை உட்கொண்டு, தமது கொடிய நோய் தீர்க்கப்பெற்றார். நம்ப இயலாத இந்த லீலையை, அவர் வாயிலாகவே கேட்டபின் வேறு ஆதாரம் என்ன வேண்டும் என மனம் தெளிந்தேன். 🌷அமிர்த உற்பத்தி செய்யும்.. பாபாவின் அற்புத லாக்கெட்:

அதே மேலதிகாரி ஒரு சமயம் வேலை நிமித்தமாக பெங்களூர் சென்றிருந்தார். அருகில் சென்னப்பட்டினம் என்ற ஊரில் ஒரு பாபா ஒரு பக்தருக்கு அன்புடன்  அளித்த லாக்கெட்டிலிருந்து அமிர்தம் இடையறாத தாரை தாரையாக பெருகுவதைப் பார்த்திருக்கிறார். பெருகும் அமிர்தம் அண்டாக்களையும் குடங்களையும் நிரப்பிவிட்டு, விடாப்பிடியாய் சொட்டிக்கொண்டே இருந்ததாம். அந்த லாக்கெட்டை தன் கையில் வைத்தபோது , அமிர்தம் அந்த அதிகாரியின் உள்ளங்கையை நிரப்பிவிட்டதாம். அவர் எனக்கும் ஒரு சிறிய பாக்கெட்டில் அமிர்தம் கொண்டுவந்து கொடுத்தார். இதுவரை இருந்த எனது சந்தேகமும் அவநம்பிக்கையும் மெல்ல விலக தொடங்கியது. பின்னர் ஹோவர்ட் மர்பெட் அவர்கள் எழுதிய "SAI BABA - MAN OF MIRACLES" புத்தகத்தை படித்தேன். பாபாவின் லீலா விநோதங்களும், அவரது அவதார நோக்கமும் புரிபட, என் நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்தது. 🌷பகவான் விழுக்கல்வியின் மேன்மை:

அனைத்து சமயங்களின் அடிப்படை போதனை ஒன்றே. அவைகளின் தத்துவங்களை விஞ்ஞான ரீதியாக      சோதிக்க இயலும். அவை அழிவில்லாதவை. நிரூபிக்கப்பட்ட உண்மைகள். ஆகவே பள்ளிகளில் அவற்றை போதிக்கவேண்டும் என "தெய்வீக விஞ்ஞானம்" என்ற எனது புத்தகத்தில் கூறியிருந்தேன். 1985ஆண்டு சிம்லாவில் அரசு கல்வித் துறை செயலாளராக இருந்தபோது இக் கோட்பாடுகளை இன்னும் சிறந்த முறையில் ஸ்ரீ சத்யசாயி விழுக்கல்வி திட்டம் மாணவர்களிடையே கொண்டு சேர்க்கும் என்பதை உணர்ந்தேன்..  இதன்படி ஹிமாச்சல் மாநிலத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் ஸ்ரீ சத்யசாயி விழுக்கல்வி திட்டம் அமலாக்கப்பட்டது. 1985ஜூன் மாதத்தில் புட்டபர்த்தியில் நடைபெற்ற விழுக்கல்வி மாநாட்டில் பங்கு பெற்று  பயிற்சியும் பெற ஹிமாசல் மாநிலத்திலிருந்து 100 ஆசிரியர்கள் அனுப்பப்பட்டனர். இம் மாநாட்டை இந்திய அரசின் கல்வி மந்திரி திரு. K.C.பந்த் அவர்கள் துவக்கிவைத்தார். பகவான் இந்த மாநாட்டில் ஒரு சிறுவனுக்குரிய உற்சாகத்துடனும் , அன்னையின் கருணையுடனும் உலா வந்தார். என் அருகில் வந்த பகவான் "எப்போது நீ வந்தாய்" எனக்கேட்க நான் பிரமித்து வாயடைக்க நின்றேன். அதன்பிறகு ஒரு சொல்ல இயலாத மனக்கிளர்ச்சியுடன் நான் கண்ணீர் பெருக நின்றேன். .

🌷பகவானின் பாசப் பரிவு:


பின்னர் என்னை நேர்முகத்திற்கு அழைத்த பகவான், எனது அலைபாயும் மனதைப்பற்றி குறிப்பிட்டு , காயத்ரி மந்திரம் ஜெபிக்குமாறு கூறி, ஒரு மோதிரத்தை  ஸ்ருஷ்டித்துக் கொடுத்தார். பின்னர் எங்கள் அனைவருக்கும் விருந்தளித்த ஸ்வாமி, பார்த்து பார்த்து பந்தி விஜாரணை செய்தது மறக்க இயலாத நிகழ்வாக இருந்தது. 

🌷 உனக்கு முன்னும், பின்னும் பக்கவாட்டிலும் நான் இருக்கிறேன்:

மாநாட்டின் ஒரு கலந்துரையாடலுக்கு நான் தலைமை வகிக்க , பேச்சாளர்கள் மேடையில் ஏறி பேசத் துவங்கினர். ஆனால் பார்வையாளர்களின் கவனமோ மேடை நடுவில் அமர்ந்திருந்த என் திசையை நோக்கி ஆனால் என்னைத் தாண்டி இருந்தது. தலையைத் திருப்பி பார்த்தால்.. என் நாற்காலியின் பின்புறத்தைப் பிடித்தபடி ஸ்வாமி நின்று கொண்டிருந்தார்.

🌷கண்ணுக்கு கண்ணாண... கண்ணணே கடவுள் பாபா:

1987 ஜூலை மாதம். எனது இடது கண்  இரத்தப்போக்கு ஏற்பட்டு, பார்வை மிக மோசமடைந்தது. உடலின் மற்ற அவய செயல்பாடுகள் நன்கு இருந்தது. ஆனால் கண்ணின் நிலைமை எவ்வாறு சீரழிந்தது என கண் மருத்துவதுவ வல்லுனர்களுக்கு விளங்கவில்லை. ஆனால் பகவானின் அற்புதத்தால், ஒரு லேசர் சிகிச்சை மூலம், இழந்த பார்வை சரியானது. பகவானின் கருணை என்று ஏன் சொல்கிறேன் என்றால், இது போன்ற கண் குறைபாடுகளுக்கு லேசர் சிகிச்சை பயனளிப்பதில்லை. எனக்கு மட்டும் இது எப்படி சாத்தியமாயிற்று? எல்லாம் பகவானின் அருளன்றோ?
 
🌷நம் அனைவரின் ஆதியும்.... அந்தமும் அறிந்தவர் பாபா:

1988ல் நான், என் தாய் தந்தையர், என் மனைவி,  மகன், மகள் ஆகிய மொத்த குடும்பத்தினரும் பர்த்தி சென்று பாபா தரிசனம் செய்தோம். எங்கள் அனைவரையும் அழைத்த ஸ்வாமி, ஒவ்வொருவரின் குணாதிசயங்கள், கனவுகள், பலம் , பலவீனம் போன்ற அனைத்தையும் கூறி பிரமிப்பில் ஆழ்த்தினார். எங்கள் குடும்பத்தினர் அனைவரும் பாபாவிடம் காட்டும் பக்தி  பல வகையானது/ இதய பூர்வமானது. பகவான் பாபாவின் கருணாலீலைகள் பல எங்கள் வாழ்வில் நிகழ்ந்துள்ளன. அவைகளை விரிக்கின் இப்பதிவு பெருகும்.  🌷பாபாவின் பக்தியால்... நான் பெற்ற சக்தி: இறுதிமாக திரு.M.K. காவ் கூறுவதாவது.... பாபாவின் அன்புப் பாதுகாப்புக்குள் நானும், என் குடும்பமும் வந்த பின்னர் அடைந்த பேறு அளவிடர்கறியது. 27 வருட புகைப் பழக்கத்தை நிறுத்தியது, குடும்பத்தினர் அனைவரும் புலால் தவிர்த்தது போன்ற புற ஒழுக்கம் மட்டுமல்ல, மன அமைதி, உள்நோக்கும் மனோபாவம், அனைத்து நிகழ்வுகளையும் பாபாவிடம் சமர்பித்து ஆறுதல் பெறுவது போன்ற அக ஒழுக்கத்தைையும் கற்றோம். இப்போது பகவானைப் பற்றிய புத்தகங்களை நிறைய படிக்கிறேன்.உலகில் நிகழும் சச்சரவுகள், இயற்கை உற்பாதங்கள் இவைகளைப் பற்றிய என் மனோபாவங்கள் மாறிவிட்டன. அவை கர்மாவின் எதிர் விளைவு என புரிந்து கொண்டேன். பகவான் தமது அளவிட முடியாத சக்தியால், கருணையால் நம்மை வழிநடத்தும்போது, நம் போன்ற சாதாரண மனிதர்கள் அவரைச் சரண் அடைந்து, அவர் காட்டும் வழியில் நடப்பதுதான் சாலச் சிறந்தது.

ஆதாரம் : Sai Vandana (65th Birthday Offering - 1990)
தமிழாக்கம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 

🌻 அன்பிற்குரிய சாயி உடன் பிறப்புகளே.திரு. காவ் கூறிய பாபாவின் திருக்காப்பு அவருக்கு மட்டுமல்ல. நமக்கும் இந்த அகிலத்தில்  அனைவருக்கும் தான். பாபாவை வணங்கி அவர் வழி நடப்போம். 🌻      

ஜெய் சாயிராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக