"இன்று மனிதன் ஆனந்தத்தை அனுபவிக்க வீர தீர முயற்சிகளை மேற்கொள்கிறான். அவன் மேற்கொள்ளும் அனைத்து செயல்களும் ஆனந்திக்கவே. ஆனால், ஆனந்தம் வெளிபொருட்களில் காண இயலாது. ஆனந்தம் என்பது உள்முகமானது, நுட்பமானது. அனைத்து உணர்வுகளும் அப்படிப்பட்ட ஆனந்தத்தில் இருந்து வெளிப்பட வேண்டும். உலகாயத இன்பங்கள் யாவும் உள்ளுறை ஆனந்தத்தின் பிரதிபலிப்பு மட்டுமே.
ஆத்மாவை பற்றிய விழிப்புணர்வினால் மட்டும் ஒருவன் உண்மையான ஆனந்தத்தை அனுபவிக்க முடியுமா? நெருப்பின் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். நெருப்பினை பொறுத்தே புகை இருக்கும். புகையை பொறுத்து மேகமும், மேகத்தை பொறுத்து மழையும் இருக்கும். மழையை பொறுத்து தானியங்கள் விளையும், தானியங்களை பொறுத்து உணவு அமையும். உட்கொள்ளும் உணவினை பொறுத்தே சிந்தனை அமையும்.
இந்த நெருப்பு என்பது என்ன? நெருப்பில் இருந்து வரும் புகையும், அந்த நெருப்பும் மனிதன் வாழ்க்கையில் மேற்கொள்ளும் செயல்களில் உள்ள திறனின் விளைவாகும்.
ஸ்தூல உடலானது எப்போதும் செயலில் (கர்மா) ஈடுபட்டிருக்கும். சிந்திப்பதும் கேட்பதும் கர்மா, கரங்களால் செய்யும் காரியங்களும் கர்மா. மனிதனின் உடல் முழுவதும் கர்மாவில் ஈடுபட்டிருக்கும்.
செயல்கள் செய்யவே இருக்கும் மனித உடலுக்கு அனைத்து வகையிலும் தூய்மையான உணவே கொடுக்கப்பட வேண்டும்.
எது தூய்மையான உணவு வகை? அது சாத்வீகமாக இருக்க வேண்டும். மிதமாக இருக்க வேண்டும். சரியான வழியில் சம்பாதித்திருக்க வேண்டும். மேலும், அது இறைவனுக்கு அர்பணித்ததாக இருக்க வேண்டும். அப்போது மட்டுமே, சாத்வீக - புனித உணர்வுகள் தோன்றும். உட்கொள்ளும் உணவானது நல்வழியில் சம்பாதித்ததின் மூலம் கிடைத்திருக்க வேண்டும். நேர்வழியில் கிடைக்காத உணவானது, நம்மில் கீழான உணர்வுகளையே உருவாக்கும்.
உணவானது எவ்வாறு தீய வழியில் நம்மை செலுத்தும்? இவ்வுணவு உடலில் இரத்தமாகவும், தசைகளாகவும் உருவெடுக்கின்றன. இதே உணவு மனமாக மாறுகிறது. உட்கொள்ளும் உணவினை பொறுத்தே மனதின் தன்மை அமைந்திருக்கும். சிலர் இராஜசிக மற்றும் தாமசீகமான உணவை உட்கொள்கின்றனர். தீய வழியில் கிடைத்த உணவினையும் உண்கின்றனர். போகட்டும், இறைவனுக்கு அர்பணிக்கிறார்களா? இல்லை, செய்வதில்லை. மிதமான அளவிலாவது எடுத்துக்கொள்கிறார்களா? இல்லை. அவர்கள், வயிற்றில் நீர் அருந்தக் கூட இடமில்லாத அளவிற்க்கு அதிகமான உணவை உண்கின்றனர்.
மனித வாழ்வின் அடிப்படை, நாம் உண்ணும் உணவு மற்றும் நீரின் அடிப்படையில் அமையும் மனமே. இவ்வாறு, வாழ்வு முழுவதும் இவ்விரண்டினை சார்ந்துள்ளது. நாம் பருகும் நீரே பிரணனான மாறுகிறது. இவ்வாறாக உணவே உடலாகவும், மனமாகவும் உருக்கொள்கிறது. எப்போது நாம் பிராணனை உள்ளடக்கிய உடல் (அன்னமய, பிராணமய கோஷங்கள்) மற்றும் மனத்தினை நல்ல முறையிலும், ஆரோக்கியமாகவும் பராமரிக்கிறோமோ அப்போதுதான் நாம் விஞ்ஞானமய கோஷத்தை (ஞானம்) அடைய முடியும்."
- பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா
ஆதாரம்: Source: Consume only Satwic Food, Chapter 2, My Dear Students Volume 2

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக