தலைப்பு

சனி, 12 டிசம்பர், 2020

பள்ளி ஆசிரியையின் புற்று நோயை குணமாக்க பறந்து வந்தது சாயி விபூதி!


எத்தனை அலைந்து திரிந்தாலும் இறுதியில் இறைவன் ஸ்ரீ சத்யசாயி பாதத்திலேயே எவரும் வந்து சேர வேண்டும். பல ஜென்மம் எடுத்த போதும் இறுதி இலக்கு இறைவன் ஸ்ரீ சத்யசாயி பாதமே. சுவாமி புத்தகம் படித்து அவரின் மகிமையை சோதித்துப் பார்க்க புற்றுநோய் கொண்ட ஒருவரை சுவாமியிடம் அனுப்பிய ஒருவருக்கும்.. அந்த புற்று நோயாளிக்கும் நேர்ந்த பரவச அனுபவங்கள் இந்தப் பதிவில் இதோ...


ஒருமுறை பகவானின் புனே விஜயத்தின் பொழுது, ஸ்ரீ கஸ்தூரி அவர்கள் நேஷனல் டிஃபன்ஸ்(Defence) அகாடமியில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. கார்னல். எஸ். போன்ஸ்லே தான் நிகழ்ச்சியின் வரவேற்பாளரும், சேர்மனும் ஆவார். தனது உரையில் போன்ஸ்லே அவர்கள், பாபாவின் தெய்வீகத்தை பற்றி தான் அறிந்ததை வெளிப்படுத்தினார்! 

Colonel. Shivaji D Bhonsle
21 February, 1975.

அப்போது கார்னல். எஸ். போன்ஸ்லே அவர்கள் குல்லு பள்ளத்தாக்கில் (Kullu Vally) பொறுப்பாளராக இருந்தார். அங்கே நடத்தப்பட்டு வந்த ஆர்மி(ராணுவ) பள்ளி ஆசிரியை ஒருவர் திடீரென வேலைக்கு வரவில்லை! ஊரிலும் இல்லை! திரும்பி வந்த பிறகு காரணம் கேட்டதில், தனக்கு புற்றுநோய் வந்திருப்பதாகவும், உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், எனவும் கூறி வருந்தினார். அப்பொழுதுதான் போன்ஸ்லே, Man of Miracles புத்தகத்தை படித்திருந்தார். அது பகவானின் லீலைகளை விளக்கும் புத்தகம். ஹோவாட் மூர்ஃபெட் எழுதியது! 


அதில் கேன்சரை சுவாமி குணமாக்கியது பற்றி போட்டிருந்தது! போன்ஸ்லே அவர்கள், "பாபாவினால் இப்படி செய்திருக்க முடியுமா, புத்தகம் எழுதியவரை எந்த அளவுக்கு நம்பலாம்?" என்று சற்றுச் சந்தேகத்துடன், இதை நிரூபித்துக்காட்ட முடிகிறதா பார்ப்போம் என்ற முயற்சியில், புட்டபர்த்தி சென்று பாபாவை தரிசிக்க சொல்லி சொன்னார். அந்த டீச்சரும், அவரது சகோதரியும் பாம்பே சென்று அங்கிருந்து புட்டபர்த்தி வந்தனர். ஆனால், அப்பொழுது தான் பாபா மெட்ராஸ் சென்றுள்ளார் என்றனர். கஷ்டப்பட்டு மெட்ராஸ் சென்றனர். சென்ட்ரலில் டாக்சி டிரைவருக்கு பாபா தங்கியுள்ள இடம் தெரியுமாதலால் கொண்டுவிட்டார். ஆனால் அங்கிருந்து பாபா சிந்தி ஹாலுக்கு உரையாற்ற சென்றுவிட்டதாக கூறினார்கள்!! மீண்டும் டாக்ஸியில் சிந்தி ஹாலுக்கு சென்றால் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு வண்டிகள் நிற்கின்றன. மீதி தூரத்தை நடந்தே கடந்து சென்றனர்! அங்குலம் அங்குலமாக நடந்துசென்று பார்த்தால் உள்ளே பாத நமஸ்காரம் எல்லாம் சாத்தியமே இல்லை என்று தெரிந்தது. ஆரஞ்சு வண்ணத்தில் சிறியதாக உருவம் மட்டுமே தெரிந்தது! இவரை, பாபாவின் பாதங்களை தொட்டால் கேன்சர் தீரும் என்று போன்ஸ்லே கூறியிருந்தார். இவர்கள் சலிப்பு மேலிட," சத்யம் தர்மம் பிரேமை பற்றி இவ்வளவு பெரிய கூட்டத்தில் பேசுகிறீர்களே-2000 மைல் கடந்து உங்களை நம்பி வந்தோமே! எங்கள் கஷ்டம் புரியவில்லையா? என வாய்விட்டு புலம்பினர் போன்ஸ்லேயிடமும், சுவாமியிடமும் கோபம் வந்தது!


அதே நிமிடம் ஒரு கருத்த உருவம் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்து. "சண்டிகார்" என கத்திக்கொண்டு இவர்களை நோக்கி வர, இவர்களை சண்டிகார் ஹாஸ்பிடலில் இருந்து வருபவர்கள் நீங்களா? எனக் கேட்டு, விபூதி பொட்டலங்களை கொடுத்து, அவர்கள் ட்யூட்டிக்குத் திரும்பலாம் எனவும், இன்னும் சில விபூதி பொட்டலங்கள் சிவாஜிக்கும் கொடுக்குமாறு கூறினார். விபூதியை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று சிவாஜி சொல்வார் என பாபா கூறியதாக கூறி சென்றுவிட்டார்.

சண்டிகரை அடைந்ததும், டீச்சரை சோதித்த டாக்டர்கள், அறுவை சிகிச்சை தேவையில்லை என்றனர்! டீச்சர் எல்லாவற்றையும், கர்னல். போன்ஸ்லேயிடம் கூறி, "ஆனால் சிவாஜி யார் என்று தெரியவில்லை என்றார். போன்ஸ்லே தன் பெயர்தான் "சிவாஜி போன்ஸ்லே என்றும், ஒரு சிலருக்கே அது தெரியும்" என்றும் கூறினார்!

ஆதாரம்: Loving God, P 357 to 359

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம்.  


🌻 மனிதன் ரகசியமாக வைத்திருப்பதாக சிலவற்றை நினைக்கிறான் / நிகழ்த்துகிறான். ஆனால் இறைவன் சத்ய சாயிக்கு யாவும் தெரியும். எவர் ஒருவரின் அந்தரங்கமும் சுவாமியின் தகுந்த கண்காணிப்பிலேயே இருந்து கொண்டிருக்கிறது. அவரிடமிருந்து தப்பிக்க எந்த தரணியில் உள்ள எவராலும் இயலாது. இந்த சத்தியத்தின் புரிந்துணர்வில் தான் இதயத்தின் பக்தி வாசல் இன்னும் அகலமாய் திறந்து கொள்கிறது!!! 🌻 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக