தலைப்பு

சனி, 26 டிசம்பர், 2020

ஆப்பிரிக்காவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட தன் வீட்டிலிருந்து சுவாமி கருணையால் உயிர் தப்பியது T.K.K பகவத் குடும்பம்!


அதிர்ஷ்ட வசமாய் உயிர் தப்பினேன் என மனிதர்கள் சொல்கிற வார்த்தையில் அவர்களுக்கே புரியாத ஒரு சத்தியம் மறைந்திருக்கிறது. அதிர்ஷ்டவசம் என்பதே இறைவன் சத்யசாயி கருணை வசம் தான். இறைவன் அருள் இல்லாமல் மனிதனால் எந்த செய்கையும் ஆற்ற முடியாது .. அவனுள் உயிர் ஆற்றலாய் இருந்து காரியங்களைச் செய்பவர் இறைவன் சத்ய சாயி என்பதை உணர்த்தும் உன்னதமான அனுபவப் பதிவு இதோ... 


1997இல் ஸ்ரீ T.K.K பகவத் என்பவர் (சத்யசாயி சென்ட்ரல் ட்ரஸ்டின் தேசிய கவுன்சில் மேனேஜ்மென்டின் சங்கத்தினரும் கூட) வட மேற்கு ஆப்பிரிக்காவில் சியரா லியோன் என்னுமிடத்தில் உலக பொருளாதார மேம்பாட்டுத் துறையில் பணியாற்றி வந்தார். 


அவர் ஒப்புக் கொண்ட பணியின் காலக்கெடு முடிந்ததும், திரும்ப இந்தியாவிற்கு திரும்ப தயாரானார்.  ஆனால் அலுவலகத்தில் அவர் சிறப்பாக பணியாற்றியதால் பணி நீட்டிப்பை ஏற்குமாறு கூறினார்கள். விலகுவதா? தொடர்வதா? எனும் வினாக்குறி எழுந்தது.. பல பக்தர்கள் சுவாமியிடம் திருவுளச் சீட்டு போட்டு உத்தரவு வாங்குவது போல்
அவர் இரண்டு சீட்டுகளில் தொடரலாம், கூடாது என்பதற்கு Yes, No  என்று இரண்டு சீட்டுகளில் எழுதி சுவாமியின் படத்தின் முன்பாக வைத்து ஒன்றை எடுக்கச் சொல்லி பார்த்ததில் No என வரவும் அலுவலகத்தில் தெரிவித்துவிட்டார்.
சிலர் தங்களுக்கு சாதாகமான பதில் வரும் வரை  இரண்டு மூன்றுமுறை சீட்டை குலுக்கி போடுவர். அது தவறு..
ஒரே ஒரு முறை. அது என்ன பதிலோ.. அதையே சுவாமி சங்கல்பமாக நினைத்து பின்பற்ற வேண்டும்.
நமது ஆசைகளே சுவாமியின் சங்கல்பமாக அமைய வேண்டும் என நினைப்பது அறியாமை.. சுவாமியின் சங்கல்பம் எதுவாயினும் அது நமக்கு நன்மையே விளைவிக்கும் என உணர்ந்து கொள்வதே ஆத்ம ஞானம்!!
அத்தகைய வகையில் இவரும் வந்த ஒரே பதிலை அலுவலகத்தில் தெரிவிக்கிறார்.
            
ஆனால் அவர்கள் இன்னும் கொஞ்ச காலம் தொடரச் சொன்னதால் அதை  ஒப்புக்கொள்கிறார். ஆனால் அன்று இரவே கடும் ஜுரம் வந்து விட, மீண்டும் தான் தொடரப் போவதில்லை என்று தெரிவித்துவிடுகிறார். உடனே ஜுரமும் குணமாகிவிடுகிறது.

சுவாமி இப்படியே தடுத்தாட் கொள்வார்.. ஏன் அவ்வாறு சுவாமி நிகழ்த்துகிறார் என அப்போது புரியாமல் இருக்கலாம்.. ஆனால் சுவாமியின் ஒவ்வொரு நிகழ்வுக்கு உள்ளேயும் தன்மையான நன்மையே பொதிந்திருக்கிறது.

ஸ்வாமியின் கட்டளையை மீறியதனால் இப்படி நேர்ந்தது என புரிந்து கொண்டு, இந்தியா கிளம்ப உத்தேசித்து, ஏற்பாடுகளைச் செய்து கொண்டு இந்தியாவிற்கு குடும்பத்துடன் திரும்பிவிடுகிறார். எல்லோரும் வியக்கத்தக்க வகையில் மறுநாளே ஆப்பிரிக்காவில் மிகப் பெரிய கலவரம் நிகழ்ந்து, இவர்கள் இருந்த வீடு அங்கே இடிக்கப்படுகிறது, பெரிய ஆபத்திலிருந்து பகவானால் காப்பாற்றப்படுகிறார்.

ஆப்பிரிக்காவில் வேலையை தொடராதே என சொன்னதற்கும்.. சுவாமி காய்ச்சல் தந்து அதையே மீண்டும் உணர்த்தியதற்கும் பக்தரின் மொத்த குடும்ப பாதுகாப்பே அர்த்தமாகி இருந்தது என்பது பிற்பாடு புரிகிறது.
      
அது தான் சுவாமியின் செய்கை. அது தான் சுவாமியின் கருணை.. அது தான் சுவாமியின் காவல்...7 வருடங்களுக்கு முன்பு கேன்சரால் பாதிக்கப்பட்டார். அவரது பெற்றோர் இருவருமே கேன்சரில் இறந்ததால் மேலும் கவலை கொண்டார். ஆனால் ஸாயி கேன்சரை cancelled, cancelled,  cancelled என்று மூன்று முறை கூறி சரி செய்து விடுகிறார். 76 வயதிலும் இப்பொழுது நன்றாக உள்ளார்!!!

ஆதாரம்: Premanjali, Chapter 5, P 27,28

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம். 


🌻 சுவாமியின் அருட் காவலுக்கு வந்து விட்ட உண்மையான பக்தர்கள் அகந்தை கொள்வதில்லை.. அகந்தை இல்லாதவர்களுக்கு மட்டுமே அருட் காவல் சுவாமியால் செலுத்தப்படுகிறது. துரு பிடித்த பாத்திரத்தில் யாராவது பாலை ஊற்றி காய்ச்சுவார்களா? சுவாமி உண்மையான பக்தர்களையே சோதித்து பின் ஜொலிக்க வைப்பார். மனிதர்களோடு மனிதர்கள் நல்லவர்களைப் போல நடிக்கலாம்.. ஆனால் சுவாமிக்கே யார்? எப்படிப்பட்டவர்? என நன்கு தெரியும்.. பகவத் போன்ற பவித்ரமான பக்தர்களை இன்றளவும் சுவாமி கண்ணிமை போல காப்பாற்றி வருகிறார்!! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக