தலைப்பு

வியாழன், 17 டிசம்பர், 2020

ஒரு நர்ஸ் வடிவத்தில் தோன்றி வெட்டப்பட வேண்டிய கால்களை மெதுவாகத் தடவியே குணமாக்கிய சாயி கருணை!

இறைவன் சத்ய சாயியை வழிபடுவது இந்தப் பிறவிக்கு மட்டுமல்ல .. கடந்த மற்றும் நிகழப் போகும் பிறவிகளை அறுக்கச் செய்யும் அருமருந்து.. சுவாமி தன் பக்தர்களை இன்னலிலிருந்து/ இக்கட்டிலிருந்து எவ்வாறெல்லாம் காப்பாற்றி குணமாக்குகிறார் என்பதற்கான ஆச்சர்ய சம்பவங்களில் இதோ இந்த பேரனுபவமும் ஒன்றே...!


குஜராத்தைச் சேர்ந்த சுவாமியின் நீண்டநாள் பக்தரான ராடூடால் அவர்களின் மாமாவான ஸ்ரீ குலாம் தாஸ் புட்டபர்த்தி சென்றார். அவருக்கு ராடூடால் அவர்கள் கூறியதிலிருந்து ஸ்வாமியை பார்க்க வேண்டும் என்றும் ஸ்ரீ க்ருஷ்ண பகவான் தனக்குப் பிரத்க்ஷனமாக வேண்டும் என்றும் விரும்பினார். அதை  பாபாவிடம் கோரிக்கையாக வைக்க நினைத்தார். புட்டபர்த்தி சென்று, நேர்காணலும் கிடைக்கப் பெற்றார் ஸ்வாமியிடம் தானும் தன் குடும்பத்தாரும் நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துங்கள் என்றார். பகவானும் ஆசீர்வதித்தார். ’திருப்தியா’ என வேறு கேட்டார்.


வெளியே வந்த பிறகு அடடா க்ருஷ்ண தரிசனம் வேண்டும் என்று கேட்காமல் விட்டுவிட்டோமே என நினைத்துக் கொண்டு Limbdi-(லீம்புடி) என்ற தனது ஊருக்கு வந்து சேர்ந்தார். அவரது மனைவி கார் விபத்தில் சிக்கி இருப்பதாகவும், காலை முழங்காலுக்கு கீழே எடுத்துவிட வேண்டும் எனவும் கேள்விப்பட்டு அதிர்ச்சியுற்றார். ஹாஸ்பிட்டலில் இருந்து, வீட்டுக்குச் சென்று விட்டு வருவதாகவும், அதற்குள் மருத்துவமனையில் ஆக வேண்டியதை கவனிக்குமாறு கூறிச் சென்றார். 

              
வீட்டில் சுவாமி படத்தின் முன் நின்று ”என் குடும்பத்தை காப்பாற்றுவதாக சொன்னீர்களே! இதுதான் உங்கள் வாக்கை காப்பாற்றும் விதமா? எனப் புலம்பினார்! நீங்கள் உண்மையாகவே கடவுளானால், என் மனைவியின் கால் இழக்குமாறு நிகழ்வதை தடுத்திருக்க வேண்டும்”! எனச் சாடினார்.
          
அதேநேரம் மருத்துவமனையில், சுருட்டை முடியோடு ஒரு நர்ஸ் வந்து குலாப் தாஸின் மனைவியின் அடிபட்ட காலை மெதுவாக தடவி, இங்கு வலியா என கேட்டவாறு மெல்ல தன் இரு கைகளால் மெல்ல தொட, திடீரென்று காலில் வலி குறைந்ததோடு ஒரு சாதாரணமாக மடக்கி நீட்ட முடிந்தது! இதை உடனே மற்றவர்களுக்குத் தெரிவிக்க உரத்த குரலில் கூப்பிட்டார், அவர்கள் வருவதற்குள் நர்ஸ் மறைந்து விட்டார். டாக்டர்கள் நடந்ததை கேள்வியுற்று, அப்படி ஒரு நர்ஸ் அங்கு இல்லையே என வியந்தனர்! இந்த நல்ல செய்தியை அங்கு வந்த குலாம்தாஸ் அறிந்து, வந்தது பகவானே என உணர்ந்தார்.
             

மீண்டும் வீட்டிற்கு சென்று, ”நான் உங்களை எவ்வளவு குறைவாக மதிப்பிட்டு விட்டேன் பகவான்! மன்னியுங்கள்! எங்களோடு இருங்கள்! எங்களின் பூரண சரணாகதியை  ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று மனதார பிரார்த்தனை செய்தார். 

சுவாமி எப்போதும் சொல்வார்... ஃபோட்டோவை வெறும் படமாக நினைக்காமல் சாஷாத்காரமாக  நினைத்தால் கடவுள் உங்கள் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! என்பார். அது எவ்வளவு சரியாக இருக்கிறது பாருங்கள்!!!

ஆதாரம்: Sai Smaran – P 221

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம்.


🌻 சுவாமியால் எந்த வடிவத்திலும் தோன்ற முடியும் என்பதை பக்தர்கள் அந்த பரம சத்தியத்தை முதலில் உணர வேண்டும். அவர் எடுத்த / எடுக்கும் அவதார வடிவங்களையும் அவரே... அவர் மட்டுமே தேர்வு செய்கிறார்.. ஆபத்திலிருந்து உதவ எடுக்கும் வடிவங்களையும் அவரே.. அவர் மட்டுமே  தேர்வு செய்கிறார். மாணவர்கள் ஆசிரியர்களைப் பார்த்து இந்த இந்த கேள்விதான் நீங்கள் தேர்வுத் தாளில் கேட்க வேண்டும் என கோரிக்கை விடுக்க உரிமை இல்லை. அதைப் போலவே முழுமையான ஏற்கும் தன்மையும் / சரணாகதி பேருணர்வுமே நிதர்சன ஆன்மீகம் எல்லாம்... எண்ணங்களை கடக்கும் போதே கேள்விகளைக் கடக்க முடியும்.. கேள்விகளைக் கடக்கும் போதே இறைவன் சத்ய சாயியை முழுமையாக அனுபவிக்க முடியும்!! 🌻



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக