தலைப்பு

புதன், 1 மே, 2019

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரின் சாயி அனுபவங்கள்!

கிரிக்கெட் தெரிந்த ஒவ்வொருவரும் சுனில் கவாஸ்கரை தெரியாமல் இருந்திருக்க மாட்டார்கள்.  ஏனெனில் அவர் இந்திய அணிக்காக  செய்த சாதனைகள் அப்படி.  அப்படிப்பட்ட சுனில் கவாஸ்கரின் வாழ்க்கையில் சுவாமி  எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். அப்படி அவர் வாழ்வில் நடந்த ஒரு அற்புதம் உங்களுக்காக..

சுனில் கவாஸ்கர், பிரபல கிரிகெட் வீரர், பகவானை தரிசிப்பதற்காக 1982-ல் ஒருமுறை புட்டபர்த்திக்கு வந்திருந்தார். பகவான் அவருக்கு அன்று மாலையே இண்டர்வ்யூ வழங்கி ஆசிர்வதிர்த்தார்.

பின் அவரை அழைத்துக் கொண்டு, சத்ய சாயி கல்லூரி மாணவர்களின் விடுதியில் அமைந்துள்ள பிரார்த்தனைக் கூடத்திற்கு சென்றார். மாணவர்கள் அரங்கில் நிறைந்திருந்தனர். பகவனுக்கு அருகில் தயக்கத்துடன் இருக்கையில் அமர்ந்திருந்த சுனிலிடம், பகவான், “இன்று பக்ரீத், இவ்விழாவின் முக்கியத்துவத்தைப் பற்றி மாணவர்களுக்கு சிறு உரை நிகழ்த்தவும்” என்று உத்தரவிட்டார். 

சுனில் பகவானின் முன்னிலையில் உரை நிகழ்த்துவதைப் பற்றி சிறிதும் எண்ணிப்பார்த்ததில்லை, மேலும் அவருக்கு இஸ்லாம், குரான், பக்ரீத் பற்றி சிறிதளவு கூட தெரியாது. எனவே அவரது இயலாமையை பற்றி பகவானிடம் முறையிட்டார் சுனில். ஆனால் பகவானோ, “கவலைப்படாதே, நீ வெறுமனே மைக்கின் முன் சென்று நில், மற்றவை தானே நடக்கும்” என்றார். பகவானின் கட்டளைக்கு கீழ்படிந்தார் சுனில். கிட்டத்தட்ட 10 முதல் 12 நிமிடங்கள் இஸ்லாம் மற்றும் பக்ரீத் பற்றி உரை நிகழ்த்தினார். பேச்சின் முடிவில் பலத்த கைத்தட்டல் எழுந்தது. தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்த சுனிலை பார்த்து பகவான், “நீ பேசுவாய் என்று நான் கூறினேனே, பார்த்தாயா நீ பேசிவிட்டாய்” என்றார்.

இன்று வரை சுனிலுக்கு தான் அன்று என்ன பேசினோம் என்பது தெரியாது. “பகவானின் கட்டளைக்கு கீழ்படிந்தது ஒன்றே நான் செய்தது. என் மூலமாக பகவானே உரையாற்றினார் என்பதே உண்மை” என்று கூறும் சுனில், அவருக்கு இது ஒரு அற்புதமான அனுபவம் என்று கூறி மகிழ்கிறார்.

ஆதாரம்: சத்யம் சிவம் சுந்தரம், பாகம் 5

வீடியோ: https://youtu.be/SpD2Xs3m9C4

சுனில் கவாஸ்கரின் வாழ்வில் சுவாமி முதல் முதலாக எப்படி வந்தார் என்று அவர் ரேடியோ சாயிக்கு அளித்த நேர்காணல் இதோ.. (மன்னிக்கவும் பதிவு ஆங்கிலத்தில் உள்ளது)
👇👇


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக