தலைப்பு

வியாழன், 9 மே, 2019

ஓ சாயி! எல்லோருடைய இதயத்துள்ளும் வாஸம் செய்பவனே!

50. ஓம் ஸ்ரீ சாயி ஸர்வஹ்ருத் வாஸினே நம
ஸர்வ – எல்லா, 
ஹ்ருத் – ஹ்ருதயத்தில், 
வாஸினே – வஸிப்பவருக்கு

கிழக்கு கோதாவரி ஜில்லாவைச் சேர்ந்த ஒரு பண்டிதர் பணமுடையால் பெரிதும் வருந்தினார். உதவி கேட்டு பாபாவுக்கு எழுதலாம் என்று மனைவி கூறியபோது அவர் அதற்கு அனுமதி தரவில்லை. இரண்டு நாட்களுக்கு பிறகு, பிரஸாந்தி நிலையத்திலிருந்த பாபாவிடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது.
அதைக்கண்டு மிகவும் வியப்புற்றார். “நீ ஏன் உன் மனைவி கூறியதை மறுத்தாய்? எனக்கு தெரியாதா? அவள் எழுதினால் தான் உன் நிலை எனக்குத் தெரியவருமா? நான் எல்லோருடைய இதயத்திலும் வஸிப்பவன் அல்லவா” இதோ கூறுகிறேன் கேள்! கீதை, பிரஸங்கம் மூலம் பணம், சிறு பொருள் திரட்டலாம் என்று நீ ராமச்சந்திரபுரம் சென்றாய்; ஆனால் பண இழப்புடன் வீடு திரும்பினாய். கற்றதெல்லாம் வீண்! அனுபவத்திற்கு மதிப்பில்லை என்று உன்னை நீ நொந்து கொள்ளுகிறாய். இதெல்லம் எனக்கு தெரியாதா? இந்த உலகத்தையே ரட்சிக்கும் எனக்கு உன்னையும் உன் குடும்பத்தையும்காப்பாற்ற முடியாதா? உனக்கு சில நீதிகளை புகட்டவே இவ்வாறு செய்தேன். வாழ்க்கையில் உயரும் போதும், இன்பமாக கழியும் போதும் மனிதன் தனது முயற்சி என்கிறான். தெய்வத்தை மறந்து விடுகிறான். ஆனால் தோல்வியுறும் போது நம்பிக்கை இழந்து சிந்திக்க ஆரம்பிக்கிறான். இதை முதலில் உணர்ந்து கொள்” என்று பகவான் அதில் எழுதி இருந்தார்!

ஓ சாயி! எல்லோருடைய இதயத்துள்ளும் வாஸம் செய்பவனே!
உமக்கு எனது வணக்கம்.

ஆதாரம்: பக்தியில் கோத்த நல்முத்துக்கள் புத்தகம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக