தலைப்பு

செவ்வாய், 7 மே, 2019

“ஒன்றுமில்லை” என்றார் சுவாமி, நன்றாகிவிட்டது!


டாக்டர் வசுந்தரா கூறுகிறார்:

தட்டம்மை (மீசில்ஸ்) உடன் நிமோனியாவும் தாக்கவே, நுரையீரல்கள் பாதிக்கப்பட்டு மரணத்தை நெருங்கியது ஒரு குழந்தை. இடைவிடாத பிரார்த்தனைக்கு சுவாமியின் ஒரே  பதில், “கவலைப்படாதே!”

டாக்டர்கள் பெற்றோரை அழைத்து  நிலைமையின் தீவிரத்தையும் வெண்டிலேட்டர் வேண்டி, வேறு பெரிய ஆஸ்பத்திரிக்கு மாற்றவேண்டியதன் அவசியத்தையும் சொன்னார்கள். பெற்றோரோ சுவாமியின் ஆஸ்பத்திரியை விட மறுத்தனர்.

புதுவருட முதல்நாள் இரவு.குழந்தை மரணத்தின் விளிம்பில்.டாக்டர்கள் கை யை விரித்துவிட்டனர். அப்பொழுது டாக்டர் வசுந்தரா தர்ஷனில் இருந்தார். சுவாமி நான் ஆஸ்பிடலுக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு வார்டுகளின் வழியாகக் குழந்தையிடம் வந்தார். குழந்தையின் மார்பைத் தடவிவிட்டு, “ஒன்றுமில்லை, நன்றாகிவிடுவான்... நன்றாகிவிடுவான்” என்றார்.

குழந்தை நன்றாகிவிட்டது என்று சொல்லவும் வேண்டுமா!

“இப்படித்தான் நான் வேதபாடசாலை மாணவனாக இருந்தபொழுது சுவாமி என்னை ஒருமுறை  சாவிலிருந்து காப்பாற்றினார். ஆனால் என் குழந்தையையும் இப்படிக் காப்பாற்றுவார் எனக் கனவிலும் நினைக்கவில்லை” என்று கதறினார் தந்தை.

ஆதாரம்: Arogyapradayini, Page 36

மொழிபெயர்ப்பு: திருமதி. பானுமதி, சாலிகிராமம், சென்னை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக