67. ஓம் ஸ்ரீ சாயி ப்ரியாய நம:
ப்ரியன் – விரும்பப்படுபவன்
செல்வது என முடிவு செய்து, பிரசாந்தி நிலையத்துக்கு வந்தனர். சில நாட்கள் அங்கே தங்கினார்கள். பாபாவின் பிரத்யேகமான பேட்டி கிடைக்கவில்லை. ஊருக்கு திரும்ப முடிவு செய்தனர். பாபா மாடி வராந்த வழியாக போய்க் கொண்டிருந்த போது, கீழே நின்றவாறு ஊருக்கு போக அனுமதி தருமாறு மனதார பிராத்தித்தனர். பாபா, திரு. கஸ்தூரியை அழைத்து அவரது கையில் கொஞ்சம் விபூதி பொட்டலங்களை அளித்து “கீழே ஒரு தாயும், மகளும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை அவர்களிடம் கொடுத்துவிடு. அது மட்டுமல்ல. அவர்கள் எனக்குத் தருவதற்காக ஒரு துண்டுத்துணி கொண்டு வந்திருக்கிறார்கள். அதை நான் அவர்களுக்கு அளித்த பிரஸாதமாக எடுத்துக் கொள்ளச் சொல்” என்று கூறினார். விபூதியை கொடுத்துவிட்டு இந்தச் செய்தியை அவர்களிடம் தெரிவித்தபோது அவர்கள் வியப்பினால் பேச்சிழந்து போனார்கள். ஆம்! ஷிர்டிக்குச் செல்பவர்கள் ஒரு புதிய துணியை வாங்கிப் போய் சமாதியின் மேல் விரிப்பது வழக்கம். இவர்களும் ஒரு புதிய துணியை வாங்கி பெட்டியின் அடியில் வைத்திருந்தனர். பாபாவே இதை ஏற்றுக் கொண்டபின் ஷிர்டிக்கு போகவேண்டிய அவசியமில்லை. எங்களுக்கு இதை பிரசாதமாகவும் அளித்தது எத்தனை பெரிய பாக்கியம்! என்று மனம் மகிழ்ந்து சென்றனர்.
ஓ சாயி! எல்லோராலும் விரும்பப்படுபவரே!
உமக்கு எனது வணக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக