66. ஓம் ஸ்ரீ சாயி ப்ரேம ப்ரதாய நம:
ப்ரேம – ப்ரேமை,
ப்ரதாய – கொடுப்பவருக்கு
பெத்த வெங்கம்மராஜுவின் சகோதரி! அந்த அம்மையாரின் மீது பாபாவுக்கு விசேஷமான அன்பு உண்டு. ஏனெனில் அவர் அவ்வளவு சாதுவான ஆத்மா! மிக்க கஷ்டத்திலிருப்பவர். இறைவனைக் காண ஆவல் கொண்டுள்ளவர். அவளது விருப்பத்திற்கு இணங்க ஒரு நாள் பாபா அவளிடம் “இன்று சாயந்திரம் உனக்கு என்னுடைய முந்தைய மேனியைக் காண்பிக்கிறேன்” என்று கூறினார்.
அவளது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எப்போது சூரியன் அஸ்தமிக்கப்போகிறான்? மாலை வரும்? என்று பிரார்த்தனை பண்ணிக் கொண்டே இருந்தாள். மாலை வந்தது. பாபா அந்த அம்மையாரை, அவரது கண்களை தன் கரத்தால் மூடிக்கொண்டே உள்புறம் இருக்கும் ஓர் அறைக்கு அழைத்துச் சென்றார். அறைக்குள் சென்றவுடன் ஒரு மூலையைச் சுட்டிக்காட்டி அங்கே பார்க்குமாறு கூறினார். கண்களை மூடிக்கொண்டவுடன் நெற்றி நிறைய விபூதி அணிந்துகொண்டு ஷிர்டி பாபா தரைமேல் உட்கார்ந்திருக்கும் காட்சியை அந்த அம்மையார் கண்டார்! பாபாவின் முன்னால் ஊதுபத்தி புகைந்து கொண்டிருந்தது. அவருடைய மேனி ஜகஜ்ஜோதியாக பிரகாசித்துக் கொண்டிருந்ததாம். அந்த அம்மையாரின் மேல் என்னே அன்பு ஸ்வாமிக்கு!

ஓ சாயி! பிரேமையை அளிப்பவரே!
உமக்கு எனது வணக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக