தலைப்பு

செவ்வாய், 21 மே, 2019

உனது நேரம் இன்னும் வரவில்லை!


ரயில், பஸ் அல்லது விமானம் மூலமாக புட்டபர்த்திக்கு வந்து விட்டதாக நாம் எப்போதும் எண்ணுகிறோம்! நமது இந்த பேரதிஷ்டத்தை உணர வைக்கும் ஓர் சம்பவத்தை இங்கு காணலாம்.

இந்தூரில் (மத்திய இரதேசம்) திரு. மண்டலே என்ற சாயி சமிதி கன்வீனர் இருந்தார். ஒவ்வொரு வியாழக்கிழமையும் அவரது இல்லத்தில் சாயி பஜன் நடைபெறும். சில வாரங்களாக பஜனைக்கு வரும் பக்தர்களின் என்ணிக்கை அதிகரிப்பதையும், அவர்களில் பலர் புதியவர்களாக இருப்பதையும் அவர் கவனித்தார். அவர்களிடம் சென்று ”நீங்கள் பகவானின் புதிய பக்தர்களா?” என்று வினவினார். அதற்கு அவர்கள் ”இல்லை, ரயில் நிலையத்தில் உள்ள ஒரு சன்யாசி ‘உங்களுக்கு மன அமைதி வேண்டுமெனில் வியாழக்கிழமை இந்த இல்லத்திற்கு சென்றால் கிடைக்கும்’ என்றார்”. இதனை கேட்ட திரு. மண்டலே ஆச்சரியமடைந்தார். தானே நேரில் சென்று இதனை உறுதி செய்ய முடிவெடுத்தார். அங்கு சென்று அந்த சன்யசியை நெறுங்கும் போது அந்த சன்யாசி “நில்! என் அருகில் வராதே. வர வேண்டுமெனில் இரண்டு நிபந்தனைகள் உண்டு. 1. நீ என் காலில் விழ கூடாது, 2. நான் உன் காலில் விழுவேன்! என்றார்”. இதனைக் கேட்ட திரு. மண்டலே அதிர்ந்தார்! பிறகு அந்த சன்யாசி கூறினார்,” பகவான் வட இந்திய விஜயத்தின் போது ஸ்வாமி சிவானந்தரின் ஆஸ்ரமதிற்கு சென்றார். நான் ஸ்வாமி சிவானந்தரின் சிஷ்யன், அவரே எனது வழிகாட்டி, எனது குரு, எனது ஆசான் எல்லாம். பகவான் ஆஸ்ரமத்திற்கு வந்தபோது, எனது குரு ஓடிச் சென்று அவரை வணங்கி அவருடன் ஒரு நாள் முழுவதும் செலவிட்டார்.
”மறுநாள், நாங்கள் குருவிடம், “யார் இந்த யுவன்?” என வினவினோம் (பகவான் அப்போது இளவயதுடையவாரக இருந்தார்)

ஸ்வாமி சிவானந்தர் பிரகடனம் செய்தார்: “இவரே ஜகத் குரு!”

அதன் பின் அந்த இரயில் நிலைய சன்யாசி கூறினார் “நான் எபோதெல்லாம் எனது மூன்றாம் கண் பகுதியில் மனதை ஒருமுனை (தியானம்) செய்கிறேனோ அப்போதெல்லாம் அவரை காண்கிறேன்”.

ஆயின் அவர் ஒருபோதும் புட்டபர்த்திக்கு வர எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஒரு நாள், மெட்ராஸ்க்கு பயணம் செய்துகொண்டிருந்த போது, பகவானின் புகைப்படம் ஒன்றை கண்டு அவரைப் பற்றி விசாரித்தார். பகவான் அந்திரப் பிரதேசத்தில் உள்ள புட்டபர்த்தியில் இருக்கிறார் என்று சிலர் அவரிடம் உரைத்தனர். இதைக் கேட்ட சன்யாசி குதூகளித்தார்.

”புட்டபர்த்திக்கு போவது எப்படி” என்று அவர்களிடம் வினவினார் சன்யாசி. அவர்கள், “மிகவும் எளிது. தர்மாவரம் செல்லும் வண்டியை பிடியுங்கள். அங்கிருந்து புட்டபர்த்திக்கு பஸ் பிடியுங்கள்” என்றனர்.
சன்யாசி கூறினார் ”நான் தர்மாவரம் வண்டி பிடித்து தர்மாவரம் சென்ற போது இரவு வெகு நேரமாகிவிட்டது. எனவே அங்கேயே இரவு உறங்கி காலை எழுந்து புட்டபர்த்திக்கு பஸ் பிடித்து செல்ல முடிவு செய்தேன்”
“ஆனால் மறு நாள் காலை வெகு தொலைவில் உள்ள இமாலய குகையில் விழித்தேன்!”
“மேலும் நான் ஒரு குரலைக் கேட்டேன், அக்குரல் கூறியது, ‘பங்காரு, உனது நேரம் இன்னும் வரவில்லை. நீ காத்திருக்க வேண்டும்.”
“ஐயா, நீங்கள் நினைக்கும் போதெல்லாம் போய்வரும் புனித பூமியான புட்டபர்த்தியில் என்னால் கால் பதிக்கக் கூட முடியவில்லை. நீங்களோ பகவானின் தரிசனம், ஸ்பரிசனம் மற்றும் சம்பாசனத்திற்கு வாய்ப்பு பெற்றிருக்கிறீர்கள். இப்போது கூறுங்கள் நான் உங்கள் காலில் விழ வேண்டுமா அல்லது நீங்கள் எனது காலில் விழ வேண்டுமா?”

அன்பு சகோதர சகோதரிகளே, பகவானை காணும் மிகப் பெறும் பாக்கியம் பெற்ற நாம் அதனை எப்பொழுதும் மறக்க கூடாது. சாதுக்களும் முனிவர்களும் பல காலங்கள் வேண்டியும் அவர்கள் பகவானின் கண நேர தரிசனமே பெற முடிகிறது. நாமோ அளவிட முடியா காலம் அவரின் தரிசனத்தை பெறுகிறோம். இந்த பொன்னான வாய்ப்பை உணரும் தருணம் இதுவே!!!

(நன்றி - திரு.அரவிந்த் பாலசுப்ரமணியன், புட்டபர்த்தி)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக