தலைப்பு

வெள்ளி, 17 மே, 2019

ஊமைச் சிறுவனை பேச வைத்த சாயி பகவான்!


58. ஓம் ஸ்ரீ ஸாயி அபரூப ஸக்தினே நம:

அபரூப – கண்ணுக்கு தெரியாத, ஸக்தினே – ஆற்றலை உடையவருக்கு

”யாருடைய க்ருபையானது ஊமையைப் பேசவைக்கிறதோ, முடவனை மலையைத் தாண்டவைக்கிறதோ, அந்த மாதவனை வணங்குகிறேன்.”
- ஸ்ரீமத் பகவத்கீதை
திருச்சிராபள்ளிக்கு அருகில் பகவான் பாபாவின் அருள் பிரசங்கம்
நடைபெற்றது. பக்தர்கள் நிறைய கூடி இருந்தனர். பகவானின் தெய்வீகத் தன்மையை சந்தேகிக்கும் ஒருவரும் அங்கு இருந்தார்! மேடை மேல் இருந்த பகவான் இதை அறிந்தார். அந்த மனிதரின் அருகே நின்றிருந்த ஒரு செவிட்டு ஊமை பையனை அழைத்து மைக்கிற்கு எதிரே நிற்குமாறு பணித்தார்!
ஸ்வாமி அந்த பையனைக் கேட்டார். “உன் பெயர் என்ன?” என்று. அடுத்த நொடியிலே ஆயிரக்கணக்கானவர்கள் கேட்க வாய்திறந்து பதில் கூறினான் அத செவிட்டு ஊமை பையன். அந்த மனிதர் வெட்கத்தால் தலை குனிந்தார். யாரால் இதை செய்ய முடியும்?! மாதவனால் மட்டுமே முடியும்.

ஓ ஸாயி! கண்ணுக்கு தெரியாத சக்தியை உடையவனே!

உமக்கு எனது வனக்கம்.

ஆதாரம் : பக்தியில் கோர்த்த நல்முத்துக்கள் புத்தகம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக