தலைப்பு

வெள்ளி, 31 மார்ச், 2023

சுவாமி மனத்தூய்மை (சித்த சுத்தி) என்றால் என்ன?


இது தவறு! மனம் எப்போதும் தூய்மையாகவே இருக்கிறது! எனவே மனத்தூய்மை என்பது ஏது? 

மனம் என்கிற பாத்திரம் எப்போதுமே பரிசுத்தமானது தான்! 

உதாரணத்திற்கு: 

உங்கள் கைக்குட்டையை நீங்கள் உபயோகப்படுத்தும் முன் அது தூய்மையாக வெண்மையாகவே இருக்கிறது! 

அதனைப் பயன்படுத்தும் போதுதான் அழுக்கேறி நிறம் மாறிவிடுகிறது! ஆனால் அதை சலவைத் தொழிலாளியிடம் கொடுத்தால் அவர் அதைத் துவைத்து அழுக்கைப் போக்கி, மீண்டும் வெண்மையாக தூய்மையாக மாற்றி உங்களிடம் தருகிறார்!

இதனால் கைக்குட்டைக்கு வெண்மை புதிதாகவா வந்தது? இல்லை!

நீங்கள் அதில் ஏற்றிய அழுக்கு நீக்கப்பட்டபின் அதன் இயல்பான வெண்மையும் தூய்மையும் மீண்டும் தெரிகிறது! 


உங்கள் மனம் உங்களது கைக்குட்டையைப் (kerchief) போன்றதுதான்! ஆசைகள் என்ற அழுக்கு படியப்படிய அதன் தூய்மை மறைக்கப்படுகிறது! 

ஆசைகள் என்ற அழுக்கை நீக்கினால் பரிசுத்தமாகி (நிர்மலமாகி) விடுகிறது! 

மனத்தூய்மை (சித்த சுத்தி) என்றால் ஆசைகளைக் கட்டுப்படுத்தி நல்ல எண்ணங்களை, நற்சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதாகும்!


(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம் : 43)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக