உங்களிடம் Wrist Watch இருக்கும்! அதை கூர்ந்து கவனியுங்கள்! ஒன்று விநாடியையும், மற்றொன்று நிமிடத்தையும், மூன்றாவது மணியையும் குறிக்கும்!
விநாடி முள்ளின் 60 முறை நகர்வே நிமிட முள்ளின் ஒரு நகர்வு!
நிமிட முள்ளின் 60முறை நகர்வே நேர முள்ளின் ஒரு நகர்வு!
இதில்...
விநாடி முள் - கர்மநெறி
நிமிட முள் - பக்தி நெறி
மணி முள் - ஞான நெறி
இன்னொரு உதாரணம் :
ரயில் பயணம் மூன்று விதமாகவும் அமையலாம்!
Passenger Train ஒரு விதம்!
Through Coach இன்னொரு விதம்!
Through Train மூன்றாவது விதம்!
Passenger Coach - இது வழியில் உள்ள எல்லா வழித்தடங்களிலும் நிற்கும்...
இது போல் கர்ம நெறி
Through Coach - நீங்கள் அமர்ந்துள்ள ரயில் பெட்டியை மட்டும் வேறொரு ரயிலோடு இணைத்து விட்டால்... இடம் மாறாமல் நீங்கள் போக வேண்டிய இடத்திற்கு கொண்டு சேர்த்துவிடும்...
இது போல் பக்தி நெறி
Through Train - எங்கேயும் நிற்காமல் நீங்கள் சென்று சேர வேண்டிய இடத்திற்கு நேராக உங்களை இட்டுச் செல்வது...
இது போல் ஞான நெறி
(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம் : 20)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக