தலைப்பு

வெள்ளி, 24 மார்ச், 2023

அனைத்தையும் படைத்தவன் இறைவன் என்கிற போது.. சுகங்களை மட்டும் படைத்தால் போதாதா? ஏன் துக்கங்களை படைக்க வேண்டும்?

துக்கமில்லாமல் சுகம் இல்லை! 

"ந சுகாத் லப்யதே சுகம்"

சுகத்திலிருந்து சுகம் வராது! 

துக்கத்தை அனுபவித்தால் தான் சுகத்தை உணர முடியும்! 

சுகத்தின் மதிப்பை துக்கத்தை அனுபவித்தால் அன்றி அறிய மாட்டீர்கள்!

உதாரணத்திற்கு: Air Conditioned குளிர்சாதன அறையின் குளிரை எவ்வாறு உணர்வீர்கள்? கொஞ்சம் வெளியே அலைந்து விட்டு வந்தால் தான்! 

மரணபயம் இல்லாவிடில் தாயாய் இருந்தாலும் கூட குழந்தையை நேசிக்க மாட்டாள்! 

ஆரஞ்சு பழத்தின் கசப்பான தோலே இனிப்பான ஆரஞ்சு சுளையை பாதுகாக்கிறது! ஆக...அப்பழம் இனிப்பும் கசப்பும் சேர்ந்தே படைக்கப்பட்டிருக்கிறது! 


ஒரு சமயம் இன்பத்தை அளிக்கும் ஒரு பொருள் மற்றொரு சமயம் துன்பத்தை அளிக்கிறது! எதுவுமே எப்போதுமே இன்பத்தை மட்டுமே அளித்துக் கொண்டே இருப்பதில்லை! 

கம்பளி (Woolen coat) குளிர்காலத்தில் இன்பத்தையும், வெய்யில் காலத்தில் துன்பத்தையும் கொடுக்கிறது!


இடம்,காலம் இவற்றைப் பொறுத்தே சுகதுக்கங்கள் அமைகின்றன... சுகம் எப்போதும் நிலைத்து நிற்காது! துக்கமும் அவ்வாறே! 


Pleasure is An Interval between Two Pains


துன்பத்தில் துவண்டு போனால் துன்பம் மேலும் அதிகரிக்கும்! அந்த துன்ப நேரத்தில் சுகமான நேரங்களை நினைவு கூறுங்கள்... துக்கம் குறையும்! 

துன்பங்களை இறைவன் உங்களுக்கு அளிக்கும் பரீட்சையாக எண்ணி எதிர் கொள்ளுங்கள்! இப்படிப்ப துன்ப சோதனைகளுக்கு பக்தனாகப்பட்டவன் வாழ்த்து கூறி வரவேற்க வேண்டும்! பரீட்சை இல்லாவிடில் மாணவன் எவ்வாறு மேல் வகுப்புக்குப் போக முடியும்?! 

பர்ட்சை வேண்டாமென்று பல ஆண்டுகள் ஒரே வகுப்பில் உட்கார்ந்திருப்பானா?


அதுபோல் சோதனை இடாமல் மருத்துவர் எவ்வாறு ஒருவரது நோயை அறிய முடியும்? 

தங்கத்தை ஆபரணமாக மாற்ற வேண்டுமானால் எவ்வளவு உருக்க வேண்டும்! எல்லாம் ஆன பிறகு எவ்வளவு அழகான தங்க ஆபரணம் தயாராகும்! 


கரும்பில் இருந்து சக்கரை எடுப்பது சுகமான அனுபவமா? கரும்பு ஆலையில் என்னென்ன அவதிப்படுகிறது கரும்பு! 

மண்ணாக இருந்த பொழுது காலடியில் நீங்கள் மிதிக்கிறீர்கள்... அதை குழைத்து பிசைந்து தட்டி எரித்து மண்பாண்டமாக மாற்றுகிற போது... காலால் மிதித்த நீங்கள் தலைமேல் அந்த மண் பாண்டத்தை சுமக்கிறீர்கள்! 

எதனால்?

நன்றாக எரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டதால் தான்! 


எனவே துன்பங்களை கண்டு துவளக்கூடாது! துன்பம் வேண்டாம் என்று நினைக்கக் கூடாது! குந்திதேவி கூட துன்பங்களையே வேண்டினாள்! 


"ஹே கிருஷ்ணா! உன்னைப் பற்றிய எண்ணமும் உன்னுடைய தரிசனமும் கஷ்ட காலங்களிலேயே எங்களுக்குக் கிடைக்கிறது! எங்களுக்கு இந்த ராஜ்ய சுகபோகங்கள் எதற்கு? துன்பங்களையே எங்களுக்குத் தருவாயாக!" என்றே பிரார்த்தனை செய்தாள்!


(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம் : 98)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக