குகையில் தவம் இயற்றி வரும் வெவ்வேறு யோக சாதனை முறை மகான்களிடம் இறைவன் ஸ்ரீ சத்யசாயி பற்றி கருத்து கேட்டபோது அவர்கள் சொன்ன ஒரே பதில் மனித குலத்திற்கு ஆச்சர்யம் தரக்கூடிய... அந்த அற்புத சம்பவம் சுவாரஸ்யமாக இதோ...
ஒவ்வொரு மகான்களும் அவர்களின் வசிப்பிட பெயர்களும் இங்கே வரிசைப்படுத்தப்படுகின்றன... இன்னொரு பின்குறிப்பாக.. ஒவ்வொரு மகானையும் வடநாட்டில் பக்தி சிரத்தையோடு பாபா (தந்தை) என்றே அழைப்பர்...
1. பெயர் :டாட் வாலே பாபா (கோணி சாக்கு கட்டிக் கொண்ட பாபா)
இடம்: பூத்நாத் குகை , சொர்காஸ்ரமம், ரிஷிகேஷ்.
2.பெயர் : குதடீ வாலே பாபா
இடம் : லட்சுமண் ஜூலா , ரிஷிகேஷ்
3.பெயர் : ஸச்சா பாபா
இடம் : ஸச்சா தாம், உத்தர்காண்ட்
4.பெயர் : ஜகத்குரு நாரதானந்த் பாபா
இடம் : நௌமிசாரண்யம், லக்நவ் , உத்தரப்பிரதேசம்
5.பெயர் : தேவரஹா பாபா
இடம் : மணிகர்ணிகா , குலு மணாலி , ஹிமாச்சல் பிரதேசம்.
6.பெயர் : அவதூதர் ஆகாச காமி ஔகடீ பாபா
இடம் : மௌண்ட் அபூ , ராஜஸ்தான்
மற்றும்
நல்குகை , பாண்டு குகைக்கு சம்பந்தப்பட்ட யோகிகளும் பாபாக்களும் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி பற்றி கூறிய ஞான மொழிகள் மிகவும் ஆழமானவை!
மேலும் ஆர்.டி வித்யார்த்தி எனும் பூர்வாசிரம பெயர் கொண்ட சுவாமி யோகானந்த் பயாலஜி துறையில் நிறைய புத்தகங்களை எழுதி இருப்பவர், ராஜேந்திர பிரசாத் அவர்களோடு பள்ளிக்கூடத்தில் பயின்றவர் , 32 முறைக்கு மேல் கைலாச மானசரோவரின் யாத்திரை செய்திருப்பவர், கலப்படம் இல்லாத சொக்கத் தங்கத்தில் சிவலிங்கம் உருவாக்கியவர், 3 முறை தன் உடம்பிற்கு காயகல்பம் செய்து கொண்டவர்! இவரை 1974 அன்று மத்திய பிரதேச பீனா நகரில் விஷ்ணு பிரசாத் சர்மாவின் வீட்டில் சஞ்ஜெய் சந்திக்கிறார்... இவர் ஊடாக மேலே பட்டியலிட்ட குகை மகான்களிடம் ஸ்ரீ சத்ய சாயி பற்றி கேட்ட போது அவர்கள் அனைவரும் ஒரே அர்த்தம் தரக்கூடிய ஒரே பதிலைத் தான் தெரிவிக்கிறார்கள்...
"ஸ்ரீ சத்யசாயி பாபா எங்கள் புத்தி, சாமர்த்தியத்திற்கு எட்டாத அவதாரமாவார்! அவரை புரிந்து கொள்ளவும் , பரிசீலிக்கவும் அந்த தேவதைகளுக்கே சம்பவம் இல்லை! நாங்கள் கேவலம் பூலோக மானவ ஜீவிகளாவோம் (மனிதர்களாவோம்)! அவரது மகிமையையும், யசஸ்சையும் , லீலைகளையும் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?! ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்கள் பரமாத்மாவுக்கு பரமாத்மா ஆகிறார்! அவரே தேவாதி தேவன்! அவருடைய பாதங்களுக்கு இங்கிருந்தே சாஷ்டாங்க தண்டப் பிரணாமங்கள் (வந்தனங்கள்)!" என்று அங்கிருந்தே அந்த மகான்கள் வணங்கினார்கள்!
(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம் : 22 | ஆசிரியர் : சன்யாசினி மீரா சஞ்ஜெயானந்த்)
குகை யோகிகளே தங்களை கேவலம் மனிதர்கள் என்கிறார்கள்! அப்போது உண்மையில் சர்வ சாதாரண மனிதர்கள்?
எங்கே மனித அகந்தை கரைகிறதோ அங்கே தெய்வ அற்புதம் விரைகிறது! அகந்தை கண்களுக்கு பாபா கூட சாதாரணமே!
அகப்பார்வை தரும் அற்புதத்தின் கண்களுக்கு சாதாரணமானதில் கூட பாபா மயமே!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக