தலைப்பு

புதன், 18 ஆகஸ்ட், 2021

இரயில்வே துறையில் அனைவராலும் பாராட்டப்படுபவருமான EX - MP பெரியவர் TV. ஆனந்தன் அவர்களின் சத்ய சாயி அனுபவங்கள்!

சாய்ராம்! சுவாமியின் பழம்பெரும் பக்தரும், தென்னக ரயில்வேயில் தொழிற்சங்க தலைவராக பல்லாண்டுகள் பணியாற்றிய வரும், ராஜ்ய சபா முன்னாள் எம்பியுமான காலம் சென்ற சாய் சகோதரர் மரியாதைக்குரிய திரு T. V. ஆனந்தன் அவர்களின் ஆத்மார்த்த அனுபவங்கள்...


சாய்ராம்! மரியாதைக்குரிய T. V. ஆனந்தன் அவர்கள் தென்னக ரயில்வேயில் பெரம்பூரில் தொழிற்சங்க தலைவராக பல்லாண்டுகள் பணியாற்றியவர். அங்கு ஸ்டோர் கீப்பர் ஆக பணியாற்றி வந்த ஒரு சாயி பக்தர் இவருக்கு அறிமுகம் ஆனவர். அவர் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டார் சனிக்கிழமை மாலை ஸ்டோரை பூட்டிவிட்டு சீல் வைத்து சாவியை செக்யூரிட்டி வசம் கொடுத்துவிட்டு சென்றவர் திங்கட்கிழமை வந்து பார்த்தபோது சீல் உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது. 83 bronze அச்சு உருளைகளை காணவில்லை ஸ்டோர் கீப்பர் ஆன சாய் அன்பர் பலிகடா ஆக்கப்பட்டார். நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதை அறிந்த T. V. ஆனந்தன், சாயி அன்பரிடம் உங்கள் சார்பாக நான் நிர்வாகத்திடம் பேசுகிறேன் என்றார். அதற்கு அவர் பொறுங்கள், நான் புட்டபர்த்தி சென்று பகவானை பார்த்துவிட்டு அவரது ஆலோசனை பெற்று வருகிறேன் என்று புட்டபர்த்தி சென்று விட்டார்.

புட்டபர்த்தியில் இருந்து திரும்பி வந்த அந்த ஸ்டோர் கீப்பர் அங்கு நடந்தவற்றை ஆனந்தனிடம் தெரிவித்தார். அதைக்கேட்ட ஆனந்தன் சுவாமியின் பக்தர் ஆனார். புட்டபர்த்தியில் என்ன நடந்தது? ஆனந்தன் எப்படி பக்தர் ஆனார்? என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளவும்

T. V. ஆனந்தன் தீவிரமான முருக பக்தர். தொழிற்சங்க கூட்டத்தில் பேசும்போது முருகன் பாடலை பாடிவிட்டு பேச்சை ஆரம்பிப்பது இவரது வழக்கம். அப்படிப்பட்ட இவர் ஓம் சாயி ஸ்ரீ சத்ய சாயி சரவணபவ சாயி என்று எப்பொழுதும் கூற ஆரம்பித்தார். முருகனும் தானும் ஒன்றே என்பதை இவருக்கு சுவாமி உணர்த்தினார் அந்த அற்புத கதையை கேட்டு தெரிந்து கொள்ளவும்

மேலும் ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட இவருக்கு ஸ்வாமி எப்படி உதவினார் என்பது பற்றி இவர் கூறுவதை கேட்டு அறியவும்

மேலும் ஜெனிவாவில் நடைபெற்ற உலகத் தொழிலாளர் மாநாட்டில் இந்திய திருநாட்டின் சார்பாக இவர் கலந்து கொண்டு உரையாற்ற சென்றார் முதல் நாள் கடுமையான ஜுரம் மறுநாள் உரையாற்ற முடியாமல் போய் விடுமோ என்று பயந்த இவர் சுவாமியை வேண்டினார் சுவாமி இவரது வேண்டுதலுக்கு செவி சாய்த்தாரா? என்பதை பற்றி இவர் கூறுவதை எல்லாம் கேட்டு மகிழ...

👇

சாய்ராம், இந்த ஆடியோ 40 வருடங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டது. அதனால் 🎧 பயன்படுத்தி கேட்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்...


Source: Radiosai (RST009)











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக