தலைப்பு

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

இறந்து போன டாக்டர் காடியாவை மீண்டும் உயிர்ப்பித்த சத்ய சாயி பேரற்புதம்!


ஆயுளைக் கூட்டிக் குறைப்பதும்.. விதியை தலைகீழாக மாற்றி அமைப்பதும் மகான்களால் அல்ல இறைவனாலேயே முடியும்.. ஆகையால் இறைவன் ஸ்ரீ சத்யசாயி பரம்பொருளால் ஆயுள் நீள்வதும் .. அந்த ஆன்மாக்கள் தொடர்ந்து சுவாமியின் சேவையாற்ற சுவாமியே வாய்ப்பு தருவதுமான சிலிர்க்க வைக்கும் பேரற்புதங்கள் பல.. அதில் ஓர் திவ்ய துளி இதோ..


Dr. காடியாவிடம் ஸ்ரீ மன்னா சிங் எனும் தீவிர ஸாயி பக்தர் தனது ரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தார். மன்னா சிங் மிகவும் நோயுற்று, அதிக ஜுரத்துடன் படுத்துவிட்டார். இதில் தான் எடுக்க வேண்டிய BP மாத்திரைகளையும் எடுக்கவில்லை. 5வது நாள் கை கால்கள் அசைவற்று ஆருஷாவிலிருந்து 50 மைல் தள்ளி உள்ள Machame ஆஸ்பத்திரியில்(Tanzania) அனுமதிக்கப்பட்டார் .

Machame Hospital, Tanzania

மன்னாசிங் தனக்கு உடனே Dr. காடியாவைப் பார்க்க வேண்டும் என்றும், தன் மகன் தர்ஷன் சிங்கிடம் சொல்லி Dr. காடியாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வருமாறு கூறினர். தர்ஷன் சிங் தனது மனைவி, தாயார் ஆகியோருடன், டாக்டர் அவர் மனைவி நந்தா ஆகியோரை அழைத்து தனது ஃபோர்டு காரில் செல்கிறார். எல்லோரும் ஆருஷாவிலிருந்து 5 மைல்கள் தான் வந்திருப்பர்.

அதற்குள் திடீரென பெரிய விபத்திற்கு கார் உள்ளாகி விட்டது. வலது புறம் அமர்ந்திருந்த Dr. காடியாவிற்கு இடது கால் dash board ல் மாட்டிக் கொண்டு, வலது கால் முட்டிக்குக் கீழ் 4 இடத்தில் எலும்பு உடைந்து, ரத்தப் போக்கு ஏற்பட்டு விட்டது. மயக்க மடைந்த அவரிடம் நாடி, இதயதுடிப்புகள் அடங்கிவிட்டன! குழுமியிருந்த கூட்டம் இவர் இறந்து விட்டார் என்றே கருதியது,  ஆனால் ஒரு ஓம் சொல்லும் நேரத்தில் Dr. காடியாவின் ஆன்மா ப்ரசாந்தி நிலையம் இன்டர்வ்யூ அறைக்கு சென்று ஸ்வாமியின் முன் நின்றது! ஸ்வாமி, தனது வலது விரலைக் காட்டி ,இரு முறை பதட்டமாக “எழுந்திரு! இல்லையேல் உனது வலது கால் போய் விடும்” என்றார். இப்படிப்பட்ட ஒரு விபத்திலும், ஸ்வாமியால் கொடுக்கப்பட்ட நந்தாவின் மங்கலசூத்திரம் தப்பியது!.

Dr. காடியாவின் இந்த அனுபவத்தின் அதே தருணத்தில் இரண்டு ஆப்பிரிக்கர்கள் தகுந்த உபகரணங்களுடன் விபத்துக்கு உள்ளானவர்களை மீட்க வந்தனர். கூட்டத்தைப் பார்த்து,”கொஞ்சம் விலகுங்கள்! ஸ்வாஹிலி மொழியில் பேசினர். நந்தாவிற்கு( Mrs. காடியா) அடி ஒன்றும் இல்லை!  ஆயினும் தலைவலி! அவரை வண்டியிலிருந்து எடுத்து தள்ளி ஒரு பாறையில் அமர்ச் செய்து தலைவலியை போக்கச் செய்தார் ஒரு ஆப்பிரிகர்,  காரில் வந்தவர் அனைவருக்கும் ஒவ்வொரு இடத்தில் அடிப்படத்தான் செய்திருந்தது! இரண்டு ஆப்பிரிகர்களும் மிக அமைதியாக சூழ்நிலையைக் கையாண்டு Dr. காடியாவை மெல்ல வண்டியின் ஜன்னல் புறம் சிக்கி இருந்தவரைத் தூக்கி, அவரது தலையில் கை வைத்து அவருக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் செய்தனர்! அவர்கள் Dr. காடியாவின் வழக்கமான சிகிச்சை பெறும் நபர்கள் என எல்லாரும் நினைத்தனர்!.

இரு ஆப்பிரிகர்களும் காரை உடைத்து, பாகங்களை பிரித்து காதியாவின் கால்களை தூக்கி விடுவித்து அதே நேரம் காடியா அவர்கள் கண் திறந்து பார்த்து மிகுந்த வலியை உணர்ந்தார்! மிகுந்த முயற்சியுடன் வெளியே அவரை எடுத்து, அதே நேரம் அங்கு வந்த ஒரு ஆம்புலன்ஸில் ஸ்ட்ரெச்சர் மூலம் அவரை சோதித்த டாக்டர்கள் வலது காலை வெட்டி எடுத்து விட வேண்டும், ஏனெனில் மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றனர். காதியாவும்  ஒரு டாக்டர் என்பதை அறிந்த டாக்டர்கள் காலை வெட்டாமல் காப்பாற்ற நினைத்தனர். ப்ளாஸ்டர் மட்டும் போட்டு விட்டனர். 

மீண்டும் x-ray எடுத்துப்பார்த்த பொழுது எலும்புகள் சேரவில்லை! மீண்டும் இன்னொரு மருத்துவமனைக்கு மோஷி என்ற இடத்தில் இருந்த க்ரிஸ்டியன் மெடிக்கல் சென்டருக்கு அனுப்பப்பட்டார் . அங்கு 3 எலும்புகள் சேர்ந்தன!  4வது சேரவில்லை! நிறைய கோளாறுகள்! 11 மாதங்கள் ஆயிற்று சரியாவதற்கு!!!

1978ல் Dr.  காடியாவும், மனைவி நந்தாவும் யு.கேயில் முதல் தரமான டாக்டர்களை கலந்து ஆலோசித்தனர் அவர்கள் வலது காலை அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் . வலி நிவாரணி மாத்திரைகளையே ஆயுள் முழுவதும் சாப்பிடுங்கள் என்றனர். நந்தா பொறுமையிழந்து விட்டார். உலகிலேயே மிகச் சிறந்த மருத்துவரான ஸாயியைக் காண பங்களூரு ஒயிட் ஃபீல்டுக்கு  வந்தார். (1978 April) ஸ்வாமி அவர்களை நேர்காணலுக்கு அழைத்து,  என்றார் “எனக்கு புத்துயிர் கொடுத்த காரணம் என்ன”என ஆவலுடன் டாக்டர் வினவ “உன் உடல் வாயிலாக இன்னும் சேவையை வெளிக்கொணர்வதற்குத்தான்” என்றார் ஸ்வாமி!  டாக்டர் காடியா ஸ்வாமியிடம் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். U.K டாக்டர்கள் ஒன்றும் செய்ய முடியாது என எனக்குத் தெரியும். உங்களால் இனி தரையில் உட்கார முடியாது! கிட்டே வாருங்கள் எனக்கூறி, பிங்க் நிற விபூதியை வரவழைத்து, சிறிது சாப்பிட வைத்து, மீதியை முழுங்காலுக்கு கீழே தடவி விட்டார். சற்று தட்டினார் ஏதோ நொறுங்கும் சப்தம் கேட்டது !  திடீரென வலி மறைந்தது கால் சாதாரணமாக ஆகிவிட்டது!

ஸ்வாமி டாக்டரின் கைத்தடியையும் பிடுங்கி எறிந்து விட்டார். உனக்கு இனி இது தேவையில்லை! ஸ்வாமி நந்தாவிடம், “நான் ஆப்பிரிகன் வடிவில் உனது கைகளைப் பற்றி பாறையின் மேல் அமரச் செய்து, உன் கணவரை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறியது நினைவிருக்கிறதா என வினவ, நந்தா அழ ஆரம்பிது விட்டார்கள். ஏனெனில் இந்த சம்பவம் அவர்களுக்கு மட்டும் தெரியும்! எங்கிருந்தாலும் பக்தர்களைக் காப்பது சுவாமியின் அன்பால் சாத்தியம்!  அவர்கள் அந்த அறையை விட்டு வெளியேறும் போது, ”நீங்கள் இப்பொழுது சாதாரண ஆரோக்கியமான மனிதர்! ஆனால் தரையில் மட்டும் உட்காராதீர்கள், நாற்காலியிலேயே அமருங்கள் மற்றபடி சாதாரண மனிதரைப் போல் எல்லா வேலைகளையும் செய்யுங்கள்” என்றார். ஜாம் நகரில் மாமியாருடன் 1 மாதம் தங்கப் போவதாக டாக்டர் சொன்னதும், ஸ்வாமி, 10 நாட்கள் மட்டும் தங்கிவிட்டு ஒயிட் ஃபீல்டிற்கு வந்து, 1978 சம்மர் கோர்ஸில் 1 மாதம் பங்கெடுக்குமாறு கூறினார்!     

ஆதாரம்: Sai Smaran P 238

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி


🌻 சுவாமி நமக்கு தருகின்ற வாழ்க்கையை குற்றம் குறை கூறாமல் அப்படியே ஏற்று... அந்த வாழ்க்கையை சுவாமிக்கே அர்ப்பணம் செய்வதே இந்த பூமியில் வாழ்வதற்கான அர்த்தமும் ... அருளும்... வாழ்வையே சேவையாக்குவது இறைவன் சத்ய சாயி கிருபை இருந்தால் மட்டுமே வாய்க்கிறது என்பதும் இந்த அற்புதம் வழியாக நமக்கு புரிகிறது! 🌻


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக