தலைப்பு

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

பகவான் பாபாவின் டெலிபோன் எண் வேண்டுமா?

மூன்று இலக்கங்கள் கொண்ட பாபாவின் டெலிபோன் எண்ணுக்கு நீங்கள் அழைப்புவிடுத்தால், பாபா உடனே ஆஜராகி அருள் புரிவார். வாருங்கள் டயல் செய்வோம்.


உங்களுக்கே தெரிந்த எண்தான். ஒவ்வொரு பஜனுக்கு முன்னும் நீங்கள் பாபாவை அழைக்கும் அழைப்புதான்.

ஆம் மூன்று முறை நீங்கள் ஓதும் ஓம்கார அழைப்புதான். இது பற்றி ஸ்வாமி கூறுவதென்ன.

 நீங்கள் இதய சுத்தியுடன் மும்முறை ஓம்காரம் ஓதுவது , என் டெலிபோன் எண்ணுக்கு டயல் செய்வது போன்றது.

முதலாம் ஓம்காரத்தில் எங்கிருந்தாலும் நான் எழுந்து தயாராகிவிடுகிறேன்.

இரண்டாம் ஓங்காரத்தில் நீங்கள் இருக்கும் இடம் நோக்கி புறப்படுகிறேன். 

மூன்றாம் ஓங்காரத்தில் , நீங்கள் அளித்துள்ள இருக்கையில் அமர்ந்து விடுகிறேன்.


ஆதாரம்: Students with Sai: Conversations (1991-2000)

தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 


🌻 பிறகென்ன சாயி சகோதர சகோதரிகளே. பகவானை மனதார மும்முறை ஓங்காரம் டயல் செய்து அழையுங்கள். ஆசனத்தில் அமரும் பகவான் உங்கள் பஜன் மற்றும் சேவைப் பணிகளை ஆசீர்வதித்து மகிழுவார். இனி மும்முறை ஓங்காரத்தின்போது பகவானின் இந்த நகர்வுகளை மனதில் இறுத்தி பகவானைத் தரிசனம் செய்து மகிழ்வோமாக..

1 கருத்து: