தலைப்பு

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

ஸ்ரீமதி. M. S. சுப்புலட்சுமி அம்மாவின் மகளான ராதா விஸ்வநாதன் அவர்களின் சாயி அனுபவங்கள்!


ராதா விஸ்வநாதன் (11 டிசம்பர் 1934 - 2 ஜனவரி 2018) ஒரு இந்திய கர்நாடக இசைப் பாடகர் மற்றும் பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். M.S அம்மாவின் இசைப் பயணத்தில் 50 ஆண்டுகால இசை மேடைகளைப் பகிர்ந்து கொண்டவர்.

எம்.எஸ் அம்மாவைப் போலவே திருமதி ராதா விஸ்வநாதன் அவர்களும் இறைவன் ஸ்ரீ சத்யசாயி மேல் அத்யந்த பக்தி வைத்திருக்கும் ஆத்மார்த்த பக்தர். எம்.எஸ் அம்மாவின் கச்சேரிகளில் முக்கியமான உறுப்பினராகத் திகழ்ந்த ராதா அம்மா.. 6 வயதில்  'சகுந்தலை' திரைப்படத்தில் அறிமுகமாகி பரதனாக நடித்தார். பின்னர், தமிழ் மற்றும் ஹிந்தியில் உருவான 'மீரா' திரைப்படத்தில் குழந்தை மீராவாகவும் நடித்திருந்தார். எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவுக்கு ராதா விஸ்வநாதன் சீடராகவும் விளங்கினார்.

எம்.எஸ் அம்மாவுடன் இணைந்து அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பிலிப்பின்ஸ் உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இசை கச்சேரிகளை நடத்தியுள்ளார். தனது வாழ்க்கையையே கர்நாடக இசைக்காக அர்ப்பணித்திருந்த ராதா விஸ்வநாதனுக்கு 'சங்கீத ரத்னா', 'கலா சந்திரிகா' உள்ளிட்ட ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 


இந்த ஆடியோ பதிவில் இவர்கள் காஞ்சிப்பெரியவர் மூலமாக சுவாமியை முதன்முதலில் எவ்வாறு அறிந்துகொண்டார்கள் என்றும்.. மேலும் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது சுவாமி குணப்படுத்தியது போன்ற பல சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்து உள்ளார்கள். அன்பர்களே அனைவரும் தவறாமல் கேட்டு ஆனந்தம் அடையுங்கள்.
👇 👇


Source: ரேடியோ சாய் 
(RST 169)
ஒலிபரப்பப்பட்ட மாதம்/வருடம்: ஆகஸ்ட் 2013

எம்எஸ் அம்மாவும் ராதா அம்மாவும் இணைந்து சாயி இறைவனுக்காக மீரா பஜனை பாடும் அரிய காணொளி.. 
M. S. சுப்புலட்சுமி அம்மாவின் சத்ய சாயி அனுபவங்கள்!

பாகம் 1: https://bit.ly/2RTu5Dk
பாகம் 2: https://bit.ly/2zfn9Kf
பாகம் 3: https://bit.ly/3bn5z5a

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக