சாய்ராம்! இந்த உரையாடலில் Dr வள்ளுவன் ஜீவானந்தம் அவர்கள் முதன் முதலாக தான் சுவாமியை 1980களில் கொடைக்கானலில் சந்தித்ததாக கூறுகிறார் அந்த சந்திப்பில் சுவாமியின் பால் தனக்கு எந்தவிதமான பக்தியோ நம்பிக்கையோ ஏற்படவில்லை என்றே கூறுகிறார் இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான இவரது மனதை மாற்றி சுவாமி எவ்வாறு இவரை தன் பக்தர் ஆக்கினார் என்பதை பற்றி தெரிந்து கொள்ளவும்
சுவாமியின் பக்தரான பின்பு ஒருமுறை இவர் சுவாமியின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு இதய வால்வுகளையும் தையல் ஊசிகளையும் இலவசமாக வழங்க எண்ணுகிறார் விலை அதிகம் என்பதால் இவரிடம் போதுமான பணம் இல்லை. சுவாமி இவரது ஆசையை எப்படி நிறைவேற்றினார் என்பதை அறிந்து கொள்ளவும்
மேலும் ஒருமுறை இவர் சுவாமியை சந்தித்துவிட்டு சுவாமி வழங்கிய விபூதி, சில போட்டோக்கள்,சில நினைவுப்பரிசுகள் ஆகியவற்றுடன் பெங்களூரிலிருந்து USA திரும்புகிறார். பெங்களூரில் இருந்து விமானத்தில் ஏறும்போது பார்த்தால் சுவாமியின் விபூதி மற்றும் பரிசு பொருட்கள் அடங்கிய பையை காணவில்லை. துடித்துப் போய் விடுகிறார் சுவாமி அப்போது ஒரு நம்பமுடியாத அற்புதத்தை செய்கிறார். அது என்ன என்பதை தெரிந்து கொள்ளவும்
மேலும் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு சிக்கலான இதய அறுவைச் சிகிச்சை செய்யும்போது ரத்தகுழாய்ளை, ரத்த நாளங்களை கண்டறிய முடியவில்லை. நேரமோ ஓடிக்கொண்டிருக்கிறது நோயாளிக்கு மரணம் நெருங்கிவிட்ட போதில் பகவான் எப்படி உதவி அந்த சிகிச்சையை வெற்றிகரமாக மாற்றினார் என்பதைப் பற்றி இவர் கூறுவதையெல்லாம் கேட்டு இன்புற...
👇 👇
Source: ரேடியோ சாய்
ஒளிபரப்பு செய்யப்பட்ட வருடம் : ஏப்ரல் 2010
நன்றி: S.ரமேஷ், Ex convenor, Salem Samithi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக