தலைப்பு

புதன், 11 ஆகஸ்ட், 2021

அமெரிக்காவில் பக்தர் தொலைத்த மோதிரத்தை பிருந்தாவனத்தில் மீட்டு கொடுத்த பாபா!

இறைவனுக்கு ஆயிரம் சிரங்கள், ஆயிரம் கண்கள், ஆயிரம் பாதங்கள் என்று வேதங்கள் இயம்புகின்றன. நாம் மறைந்திருந்து செய்யும் செயல்கள் , மற்றவர்கள் அறியாமல் போகலாம், ஆனால் மாயவனாம் சாயி கிருஷ்ணர் அறியாமல் போவாரோ?

🌼  இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்த ஜஸ்டிஸ் P.N. பகவதி அவர்கள் சத்திய சாயி பகவானின் முன்னிலையில் த்ரையீ பிரருந்தாவன வளாகத்தில் மாணவர்களிடையே உரையாற்றிய போது நடந்த சுவாரஸ்ய சம்பவம்.. 


அமெரிக்காவில் சாயி பக்தர்களுடனான தமது அனுபவத்தை அவர் மாணவர்களிடம் பகிர்ந்தபின் கூறினார். 

"பகவான் பாபா இங்கு இந்த ஊஞ்சலில் மட்டும்தான் அமர்ந்திருக்கிறார் என்பது நமது மன மாயத் தோற்றமே. அவர் இல்லாத இடமே இவ்வுலகில் இல்லை என்பதை நான் உணர்வுபூர்வமாக அறிவேன்."

இதைக்கூறி முடித்த பகவதி அவர்கள் தமது கரங்களை கூப்பி , தலை தாழ்த்தி பாபாவை வணங்கினார். அவரது விரலில் , தான் கொடுத்த மோதிரம் காணப்படாததைக் கண்டு, ஸ்வாமி கேட்டார் "பகவதி நான் கொடுத்த மோதிரம் என்னவாயிற்று,. ? 

"ஸ்வாமி, அது அமெரிக்காவில் ஓட்டல் குளியலறையில் தவறவிட்டு விட்டேன் என வருத்தத்துடன் பகவதி கூறினார்.

அதைக் கேட்டு புன்னகைத்த பகவான் , எனக்குத் தெரியும் என்று கூறினார்.

Former Chief Justice of India P.N. Bhagwati with Sri Sathya Sai
(The ring seen in his left hand)


பிறகு பாபா தமது அங்கையை சுழற்றி , ஒரு மோதிரத்தை வரவழைத்து , பகவதியின் விரலில் போட்டார். அங்கு கூடி இருந்தவர்கள் மனதில் அது பகவதி அவர்கள் தொலைத்த மோதிரமா அல்லது வேறு ஒரு புதிய மோதிரமா என்ற எண்ணம் எழுந்தது. பாபாவுக்கு தெரியாதா மற்றவர்கள் மன ஓட்டம் ? ஆகவே பாபா, பகவதி அவர்களிடம் "தொலைந்துபோன உன் மோதிரம் இதுதானே" என்று வினவ அதற்கு அவர் "ஆம் ஸ்வாமி என்று மகிழ்வுடன் பதிலளித்தார். அப்போது பகவதி அவர்களை உற்று நோக்கிய பாபா கூறினார். "பகவதி என் கரங்களும், காலடித் தடங்களும் எங்கும் உள்ளன. அவ்வாறே என் கண்களும் , செவிகளும்."

ஆதாரம்: Vidyagiri: Divine Vision (2006)

தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 


🌻 எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் இங்கு மட்டும்தான் உள்ளார் என எண்ணலாமா. இவ்வுலகத்தின் ஒவ்வொரு அணுவிலும் , ஒவ்வொரு ஆத்மாவிலும் ஒளிர்வது பரிபூர்ண சச்சிதானந்த பரப்பிரும்ம சாயியே அன்றோ. 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக