தலைப்பு

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

நீயும் நானும் ஒன்றே (பத்தே வார்த்தைகளில் பகவான் பாபா விளக்கும் அத்வைதம்)

Don' t walk in front of ME (எனக்கு முன்னால் நடக்க வேண்டாம்)

Don't  walk behind ME (எனக்கு பின்னாலும் நடக்க வேண்டாம்

Still walk besides ME (என்னுடன் நட..) - பாபா 


உங்களைக் கடவுள் எனக் கூறிக் கொள்கிறீர்களே என ஒருவர் கேட்க பாபா கூறினார். "ஆம். நீயும் கூட கடவுள்தான். நான் அதை உணர்ந்து விட்டேன். நீ உணரவில்லை."

ஆத்ம சமத்துவத்தை, அத்வைத அற்புத நிலையை, பாபா எவ்வாறு எளிமையாக விளக்குகிறார். ஞானப் பழத்தை பிழிந்து ரசம் எடுத்து, தமது அற்புத திருவாக்கால், மிக எளிமையாக இயல்பான நடையில் அவர் கூறும் இவ்விளக்கம் இதுவரை யாரும் கூறவில்லை, இனி கூறப்போவதும் இல்லை.


எனக்கு முன்னால் நடக்காதே. நான் உன்னைத் தொடர விரும்பவில்லை.

எனக்கு பின்னால் நடக்காதே. நான் 

உனக்கு வழி காட்டியும் அல்ல.

என்னுடன் சமமாக நட. 

இதுவே ஆத்ம சமத்துவம். இதுவே நீயும் நானும் ஒன்று என்கிற நித்திய சத்தியம்.

இந்த சமத்துவம் என்கிற சமநிலை தான் யோகம் என்பது. 


🌻 ஸ்வாமி ஒரு சாதாரண வழிகாட்டியோ, சாமான்ய குருவோ அல்ல. தமது தெய்வீக நிலைக்கு நம் அனைவரையும் உயர்த்த வந்த பரம்பொருள் . கலியுகத்தை பொன்னுலகமாக மாற்ற வந்த பரிபூர்ண அவதாரம்.. அவருடன் கரம் கோர்ப்போம். வழிநடப்போம். 🌻


தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக