தலைப்பு

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

இனிக்க இனிக்க இறைவன் -பேராசிரியர் அனில் குமார் காமராஜு


ஆத்ம பக்தர் அனில் குமார் அவர்களின் வாழ்வில் நடந்த நெகிழ்வான ஒரு சுவாமி அனுபவம். 

கொடைக்கானலில் ஒரு நாள்  பெப்பர் மென்ட்களையும்... சோக்கோ பார்'களையும்... இன்னும் இதர பிரசாதங்களையும் இறைவன் சத்ய சாயி தன் திருக் கைகளாலேயே மாணவர்களுக்கு பரிமாறிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென "யாரோ ஒருவன் மட்டும் நான் தருவதை எல்லாம் சாப்பிடாமல் தன் பைகளிலேயே அடைத்துக் கொண்டிருக்கிறான்.. மாணவர்களே...  இப்போதே சோதனை செய்ய வேண்டும் ஒவ்வொருவரும் பிறர் பைகளைத் தேடிப் பாருங்கள்"
என்று வருமான வரித்துறை அதிகாரி போல் இறைவன் சத்ய சாயி அதிரடியாக உத்தரவிடுகிறார்.

அப்போது அருகே இருக்கும் திரு.அனில் குமார் அவர்களோ "சுவாமி... ஏன் இந்த சங்கடம்.. ஆம்.. நான் தான் அதை சாப்பிடாமல் பைகளில் வைத்திருக்கிறேன்" என்று யாருக்கும் கேட்காதவாறு மெல்லிய குரலில் உண்மையை உடைக்கிறார்.

சுவாமியோ ஏன் அவ்வாறு செய்தாய் ? என விசாரிக்கிறார்.

அப்போது அவர்..

"சுவாமி எனக்கு நான்கு குழந்தைகள்... நீங்கள் தரும் அரிதான பிரசாதங்களை இங்கேயே சாப்பிட்டுவிட்டால் .. என்னிடம் ஏதேனும் எதிர்பார்க்கும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.. அதிலும் நீங்களே வழங்குகின்ற பிரசாதங்களை அவர்களுக்கு நான் தரும் போது அவர்கள் ஆனந்தத்தில் துள்ளுவார்கள்.. அதனால் தான் உள்ளேயே  வைத்திருக்கிறேன்"
என தன் நிலையை வெளிப்படுத்துகிறார்.

கருணையே வடிவான இறைவன் சத்ய சாயி திரு. அனில் குமார் அவர்களுக்கு அங்கேயே ஐந்து இனிப்புகள் வரவழைத்து வழங்குகிறார்.


அதை வழங்கிவிட்டு ..
"நான்கு உன் குழந்தைகளுக்கு... அதை அவர்கள் சாப்பிடும் போது எவ்வாறு நீ ஆனந்தப்படுவாயோ .. அதைப் போல் ஒன்றை நீ இங்கேயே சாப்பிட வேண்டும்.. அப்போதே நான் ஆனந்தப்படுவேன்"
என்கிறார்.

கண்ணீரால் விழி பெயர்ந்து போகிறது  சுவாமியின் மொழி பெயர்ப்பாளருக்கு...

அந்த நாட்களை எப்படி மறக்க முடியும்... சுவாமியை தவிர யாரும் என்னை இவ்வளவு நேசித்ததாக எனக்கு நினைவில்லை..
இந்தப் பேருணர்வே எல்லா சுவாமி பக்தர்க்கும்...
இந்தப்  பேரனுபவமே உலகம் முழுதும் வாழ்கிற கோடிக் கணக்கான சுவாமி பக்தர்க்கும்..

என சத்தியம் பேசுகிறார் ஆத்ம பக்தர் அனில் குமார்.

(ஆதாரம்:  As Related By Sri Anil Kumar -- S.S May 2006)

சத்தியமான உறவும்..
சத்தியமான நட்பும்..
சத்தியமான அன்பும் ..
இந்த உலகில் நமக்கு அள்ளி அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் ஒரே பேரன்பு பிரபஞ்சம் இறைவன் சத்ய சாயி ஒருவரே


தமிழாக்கம் : கவிஞர் வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக