தலைப்பு

ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

ஸ்ரீ சத்ய சாயி உயர்கல்வி நிறுவனமும் ஸ்வீடன் பல்கலைக்கழகமும் இணைந்து ஆராய்ச்சி உடன்படிக்கை!


உப்சாலா பல்கலைக்கழகம் (Uppsala University), சுவீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமிலிருந்து 70 கி.மீ. வடக்கில் உள்ள உப்சாலா என்னும் பல்கலைக்கழக நகரத்தில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகமானது, ஐரோப்பாவின் மிகவும் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1477ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகமானது சுவீடனில் உள்ள மிகப்பழமையான பல்கலைக்கழகமாகும்.


ஸ்ரீ சத்ய சாயி உயர்கல்வி நிறுவனம் - கல்வி என்பது எவ்வாறு கற்பிக்கப்பட வேண்டும் என்ற பகவானின் வழிகாட்டுதல்படி இயங்கும் ஒரு ஒப்புயர்வற்ற கல்வி நிறுவனம். கல்வியின் பயன்பாடு மனிதகுல சேவையோடு இணைக்கப் பட வேண்டும் என்ற சீரிய முயற்சியில் , இந்த நிறுவனம் பல திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. 

Uppsala University, Sweden 

இந்தவகையில் ஸ்வீடன் நாட்டின் பழமையான, புகழ்வாய்ந்த உப்சலா பல்கலைக் கழகத்துடன் இணந்து ஆராய்ச்சி மேற்கொள்ள ஒரு ஒப்பந்தம் இன்று(09-04-2021) கையொப்பமாகி உள்ளது.

இயற்கையோடு இசைந்து உருவாக்கப்படும் பொருட்கள் ( Bio-materials) பற்றிய ஆராய்ச்சி மூலம் பற்கள் மற்றும் எலும்புகள் மாற்றுத் துறையில் மேம்பாட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். 

இதற்கான விழா நிகழ்ச்சியில் ஸ்வீடனுக்கான இந்திய தூதர் மேதகு தன்மயா தலைமை தாங்கினார். ஸ்ரீசத்ய சாயி மேல்கல்வி நிறுவன துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர். C.B. சஞ்சீவி முன்னிலையில், பேராசிரியர் சாயி கிரிதர்(பதிவாளர்) மற்றும் ஆஸா காஸ்மேன் (உப்பலா பல்கலைக் கழகம்) ஆகியோரால் கையொப்பமிடப்பட்டது. மனிதகுல மேம்பாட்டிற்காகத்தான் கல்வி மற்றும் ஆராய்ச்சிகள் உதவ வேண்டும், தனிமனித உயர்வுக்காக அல்ல என்ற உயர் கோட்பாட்டுடன் இயங்கும் நம் ஸ்வாமியின் கல்வி நிறுவனத்தை பெருமையுடன் நினைப்போம். அதில் பணி ஆற்றுகிற சாயி சகோதர / சகோதரிகளுக்கு நம் பணிவான வணக்கத்தை சமர்ப்பிப்போம்.


ஆதாரம்: Administrative Office, SSSIHL தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக