தலைப்பு

வியாழன், 8 ஏப்ரல், 2021

சந்தூர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ராஜமாதா சுசீலா தேவி அவர்களின் அனுபவங்கள்!


ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சந்தூர் மாநிலம் இந்தியாவின் ஒரு சுதேச மாநிலமாக இருந்தது, சந்தூரு அதன் தலைநகராக இருந்தது.  தற்போது ​​இது கர்நாடகா மாநிலத்தில் பெல்லாரி மாவட்டத்தில் ஒரு நகரமாக உள்ளது.... 


பாபா 1948 ஜூன் 17 அன்று சந்தூருக்கு விஜயம் செய்தார். பாபாவின் ஆணையின் பெயரில் குடும்ப விக்கிரகங்கள் புதிய அரண்மனைக்கு கொண்டுவரப்பட்டன. பாபா தன்னுடைய கரங்களால் புதிய அரண்னையில் பிரதிஷ்டை செய்து, அவற்றை புனிதமாக்கினார். சந்தூர் ராஜா யஷ் வந்த் ராவ் கோர்பாடேே (மராட்டிய கோர்பாடே வம்சத்தைச் சேர்ந்தவர்) பாபாவை அரியனையில் அமர்ந்து அரசரையும் அதன் மக்களையும் ஆசீர்வதிக்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டார்.

 21 வயது இளம் சாயி பகவானை, சந்தூர் அரண்மனையில் மகாராஜா மற்றும் மகாராணி வரவேற்கின்றனர்.  

மொட்டை மாடியில், அன்று இரவு, பாபா ராணியை அழைத்து, ஒரு துண்டைக் கொண்டு வரச் சொன்னார். பாபாவின் கை கிருஷ்ணரின் எரியும் சூடான மற்றும் கனமான சிலையை சிருஷ்டித்து  வெளிப்படுத்தினார். அது மிகவும் சூடாக இருந்தது, பாபா அதை தனது வெறும் கைகளால் எப்படிப் பிடித்தார் என்று ராணி ஆச்சரியப்பட்டார். சிலை ஏழு அங்குல உயரம் கொண்டது. பாபா மறுநாள் இந்த சிலையை நிறுவி அதற்கு பூஜை செய்வதன் மூலம் அதை மேலும் புனிதப்படுத்தினார். 

ஒரு மாதத்திற்குப் பிறகு, இந்திய யூனியனுடன் இணைப்பு செயல் முறை ஆரம்பமானது. ஸ்வாமி அவர்களை அமைதியாக இருக்கும்படி ஆலோசனை கூறினார். அவர்களுக்கு இணைப்பில் போது உற்சாகம் அளித்தார். மேலும்
மஹாராஜாவிடம் ஒரு மேங்கனீஸ் தொழிற்சாலை ஆரம்பிக்கும்படி ஆலோசனை வழங்கினார். (பொதுவாக மேங்கனீஸ் தொழிற்சாலை ஆரம்பிக்க பலர் தயங்கிய காலம் அது). இந்த தொழிற்சாலை ராஜ குடும்பத்திற்கு வருமானம் அளிப்பதாகவும், சந்தூர்  மாநிலம் இதனால் பிரசித்தி அடையும் என்று ஸ்வாமி கூறினார்.


ஆம், ஸ்வாமியின் கணிப்பு பிற்காலத்தில் அப்படியே பலித்தது, ஸ்வாமி சொன்னது போல் அறுபது ஆண்டுகளுக்கு பின்னும் சாந்தூர் பல சுரங்கங்களுக்கும், ஸ்டீல் தொழிற்சாலைகளுக்கும் பிறப்பிடமாக உள்ளது:

  • SMIORE - சந்தூர் மேங்கனீஸ் மற்றும் இரும்பு தாது நிறுவனம்.
  • டோனிமலை சுரங்கம், இது தேசீய கனிமங்கள் வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமானது.
  • சுப்பராயனஹல்லி சுரங்கம், நந்தி ஹல்லி பகுதியில் மைசூர் கனிமங்களுக்கு சொந்தமானது.
  • தர்மபூர் இரும்புத் தாது சுரங்கம். 
  • ஜெய்சிங்பூர் இரும்புத் தாது சுரங்கம். 
  • JSW ஸ்டீல்ஸ்
  • VSL இரும்பு தாது சுரங்கம்
  • ஜாபிர் ஷெரிஃப் இரும்பு தாது சுரங்கம். 

👑 இதுகுறித்து ராஜமாதா சுசீலா தேவி அவர்களின் அனுபவங்களை கேட்போம்.. 

நாங்கள் பகவான் முன்னிலையிைல் வந்தது 1948ல். அன்று முதல் எங்களை வழி நடத்துபவர் பகவான். அவரிடம் நாங்கள் பலவற்றை கற்று இருக்கிறோம். அவருடைய காலடியில் அமர்ந்து இருக்கும் போது ஒருவரிடம் பல மாற்றங்கள் நிகழும் என்பது உறுதி.


இந்தியா 1947ல் சுதந்திரம் அடைந்தது. அப்போது நாங்கள் சந்தூர் மாநிலத்தித்தை அரசாண்டு கொண்டிருந்தோம். புதிய இந்திய அரசாங்கம் எல்லா மாநிலங்களும் இந்திய யூனியனுடன் இணைய  வேண்டும் என முடிவு எடுத்தது. சாந்தூர் மாநிலமும் அதன் அடிப்படையில் இணைந்து, இந்தியாவுடன் ஒன்றானது. இருண்ட வருங்காலமாக எங்களுக்கு அது தோற்றம் அளித்தது. வேலை எதுவும் பார்க்காமல் வாழ்வது எப்படி என்ற கேள்வி எங்கள் முன் மிகப் பெரியதாக எழுந்தது. குழந்தைகளின் எதிர்காலம் பற்றி திட்டமிட வேண்டும். சிறிய குழந்தைகள் புதியவற்றை கற்றுக்கொள்ள முடியும். புதிய வாழ்க்கையை அவர்கள் அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் எங்களைப் போன்ற மூத்த சந்ததியினருக்கு புதிய வாழ்கை முறையில், ராஜ வாழ்க்கை வாழ்ந்தவர்க்கு சரிசெய்து (adjust) கொள்ளுதைல் மிகவும் கடினம்.

இந்திய மாநிலங்களிைன் மஹாராஜாக்கள் எவரும் வாணிபத்தில் ஈடுபடுவதில்லை. மாநிலங்கள் ஒன்றிணைக்கப் பட்டவுடன் நாங்கள் ஏதாவது செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது, எனது கணவர் மஹராஜா யஷ்வந்த் ராவ் கோர்பாதே வழி காட்டுதலுக்கும் ஆசி பெறுவதற்கும் பகவானை சந்திக்க சென்றார். அந்த காலக்கட்டத்தில் ஸ்வாமி 21 வயது இளம் பையன். எங்களுடைய சொந்த ஊரில் ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்குமாறும், அந்த இடத்தை விட்டு செல்லக் கூடாது என்றும் பகவான் கூறினார். அவ்வாறே ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்கப்படுவது பற்றி யோசிக்க ஆரம்பித்தார்.


தொழிற்சாலையை நடத்துவதற்கும் ஒரு மாநிலத்தை ஆட்சி செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது. ஒரு தொழிற்சாலையை நடத்த நடைமுறை அறிவு தேவை. பகவானின் ஆணை என்பதால், எனது கணவர் சுரங்கம் மற்றும் உலோகம் பற்றிய தொழிற்சாலை சாந்தூரில் ஆரம்பிக்க முடிவு செய்தார். இதற்கான விண்ணப்பமும் இந்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. சந்தூரில் சுரங்க குத்தகைக்கு அதிக போட்டி இருந்தது, (மங்கனீஸ் மற்றும் இரும்பு தாதுக்கள் சந்தூர் பள்ளத்தாக்கில் இருந்ததே இந்த போட்டிக்கு காரணம்)

பண்டிட் ஜவஹர்லால் நேரு

ஒரு நாள் எனது கணவர் டெல்லி சென்று பண்டிட் ஜவஹர்லால் நேருவை சந்தித்தார். சூழ்நிலையை விவரித்து அவரின் உதவியை நாடினார். சாந்தூர் மாநில மக்களின் வாழ்வாதாரத்திற்கு வேலை வாய்ப்புகள் அளித்து காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டார். பண்டிட் நேரு என் கணவரின் கோரிக்கையை கேட்டு, சார்ந்த துறையில் அதற்கான ஆணைகள் வழங்க கூறினார். சார்ந்த துறை பல இடர்பாடுகளை தந்தது. இறுதியிைல், 'நமது ராஜாக்கள் (ராஹிஸ்) வேலை பார்க்க விரும்புகின்றனர். அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்' என்று நேரு கூறினார். பகவானின் வழிகாட்டுதலாலும், நேருவின் உதவியாலும் எல்லா சம்பிரதாயங்களும்
சுமூகமாக முடிந்தன. நாங்கள் சுரங்கம் மற்றும் உலோக தொழிற்சாலை நிறுவ முடிந்தது. பகவான் எங்கள் சுரங்கம் மற்றும் உலோக தொழிற்சாலைக்கு 1974ல் விஜயம் செய்து ஆசீர்வதித்தார்.


பகவான் எப்போதும் கூறுவார்...

வாழ்க்கை ஒரு சவால், அதை சந்தி
வாழ்க்கை ஒரு விளையாட்டு, அதை விளையாடு
வாழ்க்கை ஒரு கனவு, அதை அடை
வாழ்க்கை அன்பானது, அதை அனுபவி.

எனது கணவர் ஒரு சவாலாக ஏற்று வெற்றியும் பெற்றார். பகவான் ஒரு வார்த்தையிைல் கூறிய ஆலோசனை பல விஷயங்களை தெரிவிக்கின்றது. பகவான் முன்னிலையிைல் ஒருவரின் மனம் அமைதிப் படுவது பெரிய வரம் ஆகும். உலகம் அனைத்திலிருந்தும் மக்கள் பிரசாந்தி நிலையத்திற்கு பகவானை தரிசிக்க வருவதற்கு காரணம், அவர்களிடம் ஏற்படும் மாற்றம் ஆகும். அவர்களது வாழ்வில் சமாதானம் கிடைக்கிறது. இறைவன் மனிதர்களுக்கு உதவ வடிவம் எடுத்து வந்த போது நாம் பிறந்தது மிக அதிர்ஷ்டமாகும். பகவான் இருப்பதை முழுமையாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.







பிருந்தாவனத்தில் முதல் கோடை வகுப்பு நடைபெறும் போது, ஒரு பக்தர் மும்பையில் இருந்து அல்போன்ஸா மாம்பழம் கொண்டு வந்திருந்தார். பகவான் நின்று கொண்டு அங்கு வந்திருந்த பக்தர்களுக்கு பகிர்ந்து அளித்தார். பகவான் மீதம் இருந்த ஒரே ஒரு மாம்பழத்தை கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். ரயில்வே  கேட் மூடி இருந்ததால், நாங்கள் சற்று தாமதமாக வந்தோம். பகவான் எனது கணவரைப் பார்த்தவுடன், நேராக வந்து அந்த மாம்பழத்தை எனது கணவரிடம்  கொடுத்தார். பகவானின் கரங்களால் அந்த மாம்பழத்தை பெற்ற என் கணவர் அதிருஷ்டசாலி என பக்தர்கள் கூறினர்.


அடுத்த நாள் பகவான் தர்ம க்ஷேத்ரா ஆண்டு விழாவிற்காக மும்பை செல்ல
வேண்டும். பகவானின் தெய்வீக உரைக்குப் பின் நாங்கள் வீட்டிற்கு திரும்பினோம். எனது கணவர் என்னிடம் "பகவான் எனக்கு மாம்பழம் கொடுத்தார் பார்த்தாயா, உனக்கு கொடுக்கவிைல்லை" என்றார். நான் சொன்னேன்,"பகவான் கரங்களால், உங்களுக்கு மாம்பழம் கொடுத்தது பற்றி எனக்கு ரொம்ப சந்தோஷம், பகவான் செய்யும் எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு." பகவான் அளித்த மாம்பழத்தை  என்னிடம் பகிர்ந்து கொள்ள என் கணவர் விரும்பினார். ஆனால் நான்  சொன்னேன், "வேண்டாம், பகவான் உங்களுக்கு கொடுத்தது, நீங்கள் முழு மாம்பழத்தையும்  சாப்பிடுங்கள், அது உங்களுக்கு அளிக்கப்பட்டது, எனக்கல்ல."

முக முடக்கம் (FACIAL PARALYSIS)

அடுத்த நாள் காலை எனது கணவர் எழுந்து முகம் கழுவ பாத்ரூமுக்கு சென்றார். கண்ணாடியில் தனது முகம் கோணலாக இருந்தது கண்டு வியப்பு அடைந்தார். அவருக்கு முக முடக்கம் (FACIAL PARALYSIS) ஏற்பட்டிருந்தது. டாக்டர் வந்து அவரை சோதனை செய்தார். முழுமையாக குணம் அடைய எவ்வளவு நாட்கள் ஆகும் என்பதை கணிக்க முடியாது என்று கூறினார். அது மூன்று மாதம் அல்லது அதற்கு மேலும் ஆகலாம். டாக்டர் சிகிச்சையை ஆரம்பித்தார். வெளியே செல்ல வேண்டாம் என்றும் எப்போதும் சூடான அறையில் இருக்க வேண்டும் என்றும் ஆலோசனை  சொன்னார்.

இரண்டு நாட்கள் மும்பை விஜயம் முடிந்து, ஸ்வாமி பெங்களூர் திரும்பினார். மூடிய  காரில், டாக்டரின் ஆலோசனைக்கு எதிராக எனது கணவரை ஒயிட் பீல்ட் கூட்டிச் சென்றேன். வெகு தொலைவில் பகவான் எனது கணவரைப் பார்த்துவிட்டார். அருகில் வந்து, என் கணவரிடம் "உனது முகத்திற்கு என்ன ஆயிற்று??" என்று கேட்டார். அதற்கு என் கணவர் "முக முடக்கம் வந்துள்ளதாக டாக்டர் கூறினார்" என்றார். பகவான் சிரித்துக் கொண்டு, முக முடக்கம் வந்த கன்னத்தில் செல்லமாக அறைந்தார்.. உடனே முகம் இயல்பு நிலைக்கு வந்து விட்டது. பகவானின் தெய்வீக உரை கேட்ட பின் நாங்கள் எங்கள் வீட்டிற்கு திரும்பினோம். அடுத்த நாள் காலை வழக்கமான மருத்துவர் பரிசோதனைக்கு வந்தார். எனது கணவரின் முகம் இயல்பாக (நார்மலாக) இருந்தது. பகவானின் திரு உருவ படத்தை நமஸ்கரிப்பதை தவிர, டாக்டர் சொல்ல எந்த வார்த்தையும் இல்லை. அவர் கை கூப்பி பகவானை பிரார்தித்து ஸ்ரீ சத்ய சாய் தவிர யாராலும் இது போன்ற அதிசயங்களை நடத்த முடியாது என கூறினார்.


எனது இளைய மருமகள் ஒரு குழந்தையை எதிர் நோக்கி இருந்தாள். முதல் மாதம் கர்ப்பம் ஆனதில் இருந்தே அவள் இயல்பாக இல்லை. அவளை பரிசோதனை செய்த டாக்டர் கர்ப்பம் தங்காது என்று அபிப்பிராயம் சொன்னார். எனது மருமகள் பகவானிடம் சென்று விபூதி வாங்கி வருமாறு என்னிடம் கூறினாள். நான் பகவானிடம் சென்று, அவள் உடல் நலம் பற்றி கூறினேன். பகவான் கவலைப் பட வேண்டாம் என்று கூறினார். நான் வீட்டிற்கு வந்து, அவளுக்கு பகவான் விபூதியை கொடுத்து, ஸ்வாமி கவலை பட வேண்டாம் என்று சொன்னதை அவளிடம் கூறினேன். எப்போதும் அவள் படுக்கையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தாள். 9வது மாத ஆரம்பத்தில் அவளுக்கு பையன் பிறன்தான். இது பகவானின் கருணை தவிர வேறு எதுவும் இல்லை. குழந்தை பத்திரமாக பிறந்தான். ஸ்வாமி அவனுக்கு கௌதம் என்று நாமகரணம் செய்து வைய்தார். இப்போது அவனுக்கு 14 வயது.


பகவானின் ஆசியால் குணப்படுத்த முடியாத வியாதிகள் குணம் அடைகின்றன. என் கணவருக்கு குடல் புற்று நோய் வந்திருந்தது. அது வீரியம் மிக்கதாக (malignant) இருந்தது. டாக்டர்கள் அதை புற்று நோய் (cancer) எனக் கூறினர். எனது கணவரும் நானும் புட்டபர்த்தி சென்றோம். ஸ்வாமி எனது கணவரைக் கண்டவுடன், "எதற்க்காக வந்திருக்கிறாய்?" என்று கேட்டார். அதற்கு என் கணவர், "பகவான், டாக்டர்கள் நான் ஆப்பரேஷன் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள்" பகவான் என் கணவரை ஆசீர்வதித்து, போய் வா என்றார். என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. நான் பகவானிடம் அது கேன்சர் என்று சொன்னேன். பகவோன் என்னைப் பார்த்து கூறினார், "பகவான் கேன்சரை கேன்சல் செய்து விட்டார். போ, உனது கணவருக்கு ஒன்றும் ஆகாது". பகவான் எங்களுக்கு விபூதி கொடுத்தார், பின்பு நாங்கள் பெங்களூர் திரும்பினோம்.

ஆப்பரேஷனுக்கு தேதி குறித்தாயிற்று. எல்லா மகன்களுக்கும் மகள்களுக்கும் தகவல் கூறியாகி விட்டது. அவர்கள் அனைவரும் அவர்களுடைய தகப்பனாரின் ஆப்பரேஷனுக்கு வந்து விட்டனர். அனைவருக்கும் எனது கணவருக்கு வந்திருப்பது புற்று நோய் கட்டி என்பது தெரியும். எனது மூத்த மகள் நிர்மலா தேவி ஆப்பரேஷன் நடக்கும் போது, ஆப்பரேஷன் தியேட்டர் வாசலில் காத்திருந்தாள். அவளுடைய தங்கையிடம், "அம்மா ரொம்ப அமைதியாக  சமாதானமாக இருக்கிறார், அவருக்கு இந்த ஆப்பரேஷனின் கனம் தெரியுமா?" அதற்கு எனது இளைய மகள் விஜய தேவி ரானே கூறுவாள், "அம்மாவிற்கு பகவானின் மீது முழு நம்பிக்கை உள்ளது. எனவே தான் இவ்வளவு அமைதியாக இருக்கிறார். அவள் இது கேன்சர் என்று தெரியாத முட்டாள் அல்ல. தாதா (மூத்த அண்ணன்) அம்மாவிடம் எதையும் மறைக்கவில்லை"

ஆப்பரேஷன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. என் கணவர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்தார், கேன்சரின் சுவடே இல்லாமல் மேலும் 11 வருடங்கள் உயிருடன் இருந்தார். பகவான் பாபா அவருடைய கேன்சரை கேன்சல் செய்தார். இதிலிருந்து நாங்கள் கற்றுக் கொண்டது


பகவானின் மீது உறுதியோன முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதே ஆகும். நாம் சேறு உள்ள தண்ணீரில் உள்ள தாமரை போல் வாழ வேண்டும்.

பகவான் கூறுவார்:

"தாமரை சேறால் தீட்டாகி விடவில்லை.,
தண்ணீரால் நனைந்து விடுவதில்லை,
ஆனால் ஒரு நிமிடம் கூட சேறும் தண்ணீரும் இல்லாமல் உயிர்வாழ முடியாது.
நாம் குவித்து வைத்த கர்மாக்கள் (ஸம்ஸ்காரங்கள்) சேறு போன்றது. நிகழ் கால வாழ்க்கை தண்ணீர் போன்றது."


பகவான் தாமரை போல் வாழ சொல்லிக் கொடுக்கிறார். பகவான் நம்மை அன்புடன் வழி நடத்துகிறார். நமக்கு அன்பை சொல்லிக் கொடுக்கிறார். அன்பாக பேசுகிறார்.

அவர் கூறுகிறார்:

"அன்பு மூலமாகத் தான் இறைவனின் பார்வை கிடைக்கும்.. கண்ணாடியிைல் ஒரு குறிப்பிட்ட ராசாயன கலவையை அடுத்த பக்கத்தில் பூசினால் மட்டுமே உனது உருவத்தை பார்க்க முடியும். அது போல கடவுளின் பார்வை கிடைக்க வேண்டும் என்றால், உனது ஹ்ருதயத்தில் அன்பு எனும் ராசாயனத்தை பூசு. உனது ஹ்ருதயத்தை அன்பால் நிரப்பு. அப்போது பொறாமை, கோபம், வெறுப்பு போன்ற தீய இயல்புகளுக்கு இடம் இருக்காது."

சுலபமான வழியில், மிக தெளிவாக ஸ்வாமி நமக்கு சொல்லிக் கொடுக்கிறார். அன்பை அறிந்து கொள்ள தவறினால், சேறை விட ஒன்றுமில்லாமல் போய்  விடுவோம், நாம் தாமரையாக ஆக முடியாது. இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் கல்வி கொடுக்கவும், நல்ல குடிமக்களை உருவாக்கவும் ஸ்ரீ சத்ய சாய் உயர் கல்வி நிறுவனம் ஸ்வாமியால் ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் பகவான் பிறந்த நாளை ஒட்டி இந்த நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா நடைபெறும். புரவலர் உரை ஸ்வாமி நிகழ்த்துவார். பகவானின் உரையில் உள்ள உபதேசங்கள் ஆசிரியர்களுக்கும் அனைவருக்கும் ஒரு புதிய பாடமாக இருக்கும். அது உலகளாவிய அளவில் பரவும் தன்மை உடையது. உலகின் பல மூலைகளில் இருந்தும் ஆயிரக் கணக்கோன மக்கள் பிராசாந்தி நிலையத்தில் கூடுவர்.


சத்ய சாய் உயர் கல்வி நிறுவனம் ஆயிரக் கணக்கான மாணவ மாணவியருக்கு கல்வி அளிக்கிறது. அவர்கள் வெற்றிகரமாக வாழ்க்கையை அமைக்க, அவர்கள் தாமரைகளாக செதுக்கப் படுகின்றனர். சத்யம், தர்மம்,சாந்தி, பிரேமை, கடைபிடிப்பதன் மூலமாக தார்மீக ஆன்மீக வழிகளில் மேம்பாடு அடைவது பற்றி ஸ்வாமி எப்போதும் சொல்கிறார். அப்போதுதான் நாம் உறுதியாக சமாதானத்தையும் உடைய பேரின்ப நிலையை அடைய முடியும். அப்போது நமது ஆன்மா ஸ்வாமியின் தாமரை பாதத்தை அடையும்.

Content : Sathya Sai with Students 
Source: Sai Vandana 1990

தமிழாக்கம்: Prof. N.P. ஹரிஹரன்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக