தலைப்பு

செவ்வாய், 20 ஏப்ரல், 2021

ஸ்ரீ சத்ய சாயி யுகம் பிளாக் (இரண்டாம் ஆண்டு நிறைவு )உங்கள் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்..

'ஸ்ரீ சத்ய சாயி யுகம் ப்ளாக்' தொடங்கி இன்றுடன்  இரண்டு வருடம்  நிறைவு பெற்றுள்ளது. இந்த இரண்டு வருடத்தில் இதுவரை 87 நாடுகளிலிருந்து நம்முடைய பதிவுகளை பார்த்து வந்திருக்கிறார்கள்.  இதுவரை நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைப் பக்கங்களை இந்த பிளாக் பெற்றிருக்கிறது.  இதற்கு  முக்கியக் காரணம் நம் அன்பு சுவாமியின் பரிபூரண சங்கல்பமே


ப்ளாக் ஆரம்பிப்பது பெரிய விஷயமே இல்லை ஆனால் அதை தினந்தோறும் பதிவேற்றம் செய்து புதுப்பித்தல் என்பது சுவாமியின் சங்கல்பம் இல்லாமல் ... அவரின் வழிகாட்டுதல்கள் இல்லாமல் நிகழ வாய்ப்பே இல்லை.. ஆகவே இறைவன் சத்ய சாயியே இதற்கான அச்சாணி/ ஆணிவேர் யாவுமே. ஒரு பத்திரிகையைப் போல இந்த பிளாக்கை சுவாமியின் அளப்பெரும் கருணையினாலேயே நம்மால் நடத்த முடிகிறது.  அதனால் தான் துல்லியமான ஆதாரங்களோடு இதுவரை 450க்கும் மேற்பட்ட  சுயமான அனுபவ எழுத்துப் பதிவுகளையும்... 500க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகளையும் வெளியிட முடிந்திருக்கிறது. இரண்டாவது காரணம் நம்முடைய மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் பதிவுகளை டைப் செய்து அனுப்பிய அன்பர்கள். அவர்கள் 20 வயது தொடங்கி 78 வயதுவரை நம்முடைய குழுவில் சேவையாற்றி இருக்கிறார்கள்... அவர்களுக்கும்... மேலும் மூன்றாவது காரணமாக இந்தப் பதிவுகளை கொண்டு சேர்த்த உங்களுக்கும் எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஆரம்பத்தில் ஒரு வாட்ஸ்அப் குரூப் தொடங்கி இன்று 12 வாட்ஸ்அப் குரூப்பாக மாறி இருக்கிறது.  இந்த சத்ய சாயி யுகம் வாட்ஸ்அப் குரூப்பை பொறுத்தவரை எந்த ஒரு செய்தியும் நாங்கள் ஆதாரமில்லாமல் பகிர்ந்தது கிடையாது. ஒரு முறைக்கு இரண்டு முறை  க்ராஸ் செக் (பதிவுகளை ஆழ்ந்த மேற்பார்வையும்.. ஆதாரப் பின்னணியையும் தீர விசாரித்த பிறகே) செய்த பின்னரே பகிர்கிறோம்.. இதில் எள்முனை அளவிற்கும் கூட போட்டி மனப்பான்மையோ/ சுய லாப நோக்கமோ/ தற்பெருமையோ/ அதிகார ஆதிக்கமோ எதுவுமே இல்லை... சேவை மனப்பான்மையோடு மட்டுமே நாம் அனைவரும் இந்த பிளாக்கை நடத்தி வருகிறோம். 

ஆங்கிலம் தெரியாத/ சுலபமாக புத்தகமின்றி இருக்கின்ற இடத்திலேயே கையடக்கமாக வாசிப்பதற்காகவே சுவாமி பக்தர்களுக்கு ஏராளமாக கொட்டிக் கிடக்கின்ற ஆங்கில மூலப் பதிவுகளையும்... பல பக்தர்களின் இதயத்தில் பொதிந்திருக்கும் ஆச்சர்யமான சுவாமி அனுபவங்களையும் முதன்முறையாக வெளியே அனைவரும் அறிந்து பரவசப்பட வைப்பதற்கும்... இறைவன் சத்யசாயியிடம் தூய்மையான பக்தியையும்... பூரண சரணாகதியையும் மேம்படுத்துவதற்காக மட்டுமே அன்றி வேறெதற்காகவுமே இந்த பிளாக்கை நாம் நடத்தவில்லை. ஆகவே ஊர் கூடி ஒற்றுமையோடு தேர் இழுத்து நம் தெய்வமான சத்ய சாயியின் மகிமையையும் ...அவதார மேன்மையையும் ஒவ்வொரு இதயங்களிலும்  நாம் ஆழமாகப் பதிவு செய்ய வேண்டிய ஒவ்வொரு பக்தராகிய நமது தலையாய கடமை.. இதுவரை தந்தது போல் உங்களின் தொடர் ஆதரவையும் ... பங்களிப்பையும்... வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்.


🌻 சத்யசாயி பிரபஞ்ச இறைவன். நாம் அனைவரும் அவரது பக்தர்கள். அனைத்து உலகத்தின் அனைத்து ஜீவராசிகளுக்கும் அவர் சொந்தம். இது நம்முடைய பிளாக்... இதன் வளர்ச்சிக்கு நாம் அனைவருமே பொறுப்பாளிகள். ஆக உங்கள் ஆதரவுக் கரங்கள் வேண்டியபடி மிகப்பணிவன்புடன் பரஸ்பர நன்றி கூறிக் கொண்டு வணங்குகிறோம்!! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக