தலைப்பு

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

இந்த லாக்டோன் காலகட்டத்திலும் நாராயண சேவை ஆற்ற முடியுமா... ??

இதுகுறித்து நம்முடைய ஸ்ரீ சத்ய சாயி யுகம் வாட்ஸ்அப் குழுவைச் சேர்ந்த சாயி சகோதரர் திரு S. ரமேஷ் அவர்கள் தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்...


சாய்ராம்! அன்பும், கருணையும் நிறைந்த பகவானின் மலர் பாதங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்! நான் சேலம் சமிதி கன்வீனராக இருந்தபோது, சேலத்துக்கு வருகை தந்த திரு சத்யஜித் அவர்களிடம், நாம் என்ன செய்தால் சுவாமி பெரிதும் மகிழ்ச்சி அடைவார்? அல்லது சுவாமி மகிழ்ச்சி அடைய நாம் என்ன செய்ய வேண்டும்? என்று ஒரே பொருள் தரும் இரண்டு வினாக்களை கேட்டேன்! அதற்கு அவர், சுவாமி, சேவை செய்தால் மகிழ்ச்சி அடைவார் ! அதிலும் நாராயண சேவை செய்தால் மிகவும் சந்தோஷம் அடைவார் என்றார்! சுவாமியின் ஆராதனை விழா மற்றும் அன்னை ஈஸ்வராம்பா நினைவு நாட்களில் நாராயண சேவை செய்ய பலர் விரும்புவார்கள் இந்த கொரோனா கிருமித் தொற்று காலத்தில் சமிதி களில், வீட்டில், சாய்அன்பர்களை வரச்செய்து, காய்கறிகளை வாங்கி, பிரசாதங்களை தயார் செய்வதில் சில பயங்கள் ஏற்படும்! சில இடங்களில் அதற்கான உட்கட்டமைப்பும் இருக்காது! மேலும் அதற்கு அனுமதியும் இல்லை!



நேற்றைய(24-04-2021) சுவாமியின் ஆராதனை திருநாளில் இரண்டு அம்மா உணவகங்களில் நாங்கள் பணத்தை செலுத்திவிட அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கப்பட்டது! காலை 2400 (500 நபர்களுக்கு ) இட்லிகளும், மதியம் 400 பேருக்கு மதிய உணவும் (பிரசாதமாக) இலவசமாக தரப்பட்டது! (இட்லி ஒரு ரூபாய் சாதம் 5 ரூபாய்) நாம் முகக்கவசம் அணிந்து பணத்தை செலுத்தி விட்டு அன்பர்கள் உண்பதை அமைதியாக கண்டு மனநிறைவுடன் திரும்பிவிடலாம்! இந்த கொரோனா கிருமித் தொற்று முடியும் வரை நாராயண சேவை செய்ய இது ஒரு எளிய வழியாகும்.. 

-S.ரமேஷ் சாய்ராம், 9566478943.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக