தலைப்பு

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

காஷ்மீரில் சமாதியான இயேசு கிறிஸ்துவை குறித்து பரமபிதா சத்யசாயி கூறுவது என்ன??


இயேசு நாதர் குறித்த மேன்மையை... தெய்வீகச் சிறப்பை.. மிக மிக ரகசியமான அவரது இள வயது வாழ்வை.. சிலுவை ஏற்றத்திற்கு பிறகு நிகழ்ந்ததை .. அவரின் ரகசிய சமாதியை.. என ஒவ்வொன்றாக இறைவன் சத்ய சாயி துல்லியமாக விளக்குகிறார் இதோ...

கிறிஸ்து(Christ) என்ற சொல், கிரேக்க சொல்லான christos  என்கிற சொல்லிருந்து பிறந்தது. இதன் பொருள் திவ்யப் பேரருளால் தேரந்தெடுக்கப் பட்டவர் என்பதாம்.
ஜீசஸ் அவர்களின் இயற்பெயர் ஈசா. 

எண்ணம், சொல், செயல் ஆகிய திரிகரணங்களில் செருக்கின்றி , தன்னலமில்லாமல் வாழ்ந்ததால் மக்கள் அவரை மதித்துப் போற்றினர். அவரிடம் ஒருபோதும் பொறாமையோ
வெறுப்பணர்ச்சியோ குடி கொண்டது இல்லை. அவர் அன்பு, ஈகை எளிமை, பரிவு இவைகளில் திளைத்திருந்தார். 
ஈசா என்ற சொல்லை திருப்பி வாசித்தால் சாயி என வருகிறது. ஈசா-சாயி இவை இரண்டும் ஈஸ்வரனைக் குறிக்கும். நிரந்தரமான, முடிவான , சத்-சித்- ஆனந்தமயமானவர் ஈஸ்வரன். ஜீசஸ் தம் வாழ்நாளில் சிலகாலம் திபெத்திலுள்ள புத்த  மடாலயங்களில் வாழ்ந்திருந்தார். அவருடைய பெயர் ஈஷா( Isha ) என்று அப்போது அறியப் பட்டது. ஈஷா என்றால் அனைத்து உயிரினங்களின் தலைவர் என்று பொருள்படும்.

ஆதாரம்: DIVINE DISCOURSE 25-12-1978


அதுமட்டுமின்றி பல்லாண்டுகளாக இயேசுவை பற்றி மிக ரகசியமாக புதைக்கப்பட்டிருந்த சில கேள்விகளுக்கும் சுவாமி பட்டவர்த்தனமாக விடை அளித்திருக்கிறார்.

1.கேள்வி: இயேசுவின் பௌதீக சம்பந்தமான உடல் தான் கல்லறையில் இருந்து மீண்டும் வந்ததா? அல்லது அந்த ஆத்மாவால் சிருஷ்டிக்கப்பட்ட புது உடலா?

சுவாமி பதில்: இல்லை.. அதே பௌதீக உடம்பு தான். ஆத்மா சிருஷ்டித்த புது உடம்பு அல்ல..
இந்த விடையிலிருந்து இயேசு நாதர் சிலுவையிலிருந்து உயிர்ப்புடன் எழுந்து வானுலகம் செல்லவில்லை என்பது புலனாகிறது.

கேள்வி 2: இயேசு கிழக்கு நோக்கி பயணம் செய்தாரா ? அதாவது காஷ்மீர் வரை சென்றாரா?

ஸ்வாமி பதில்: ஆம்.. அவர் கல்கத்தாவுக்கும் மலேசியாவுக்கும் சென்றார்.
இந்த விடையிலிருந்து இயேசு இந்தியா விஜயம் செய்தார் என்பது புலனாகிறது. அவர் செய்த அற்புதங்கள் எல்லாம் இந்தியாவிலிருந்து அவர் அடைந்த யோக சாதனையின் வெளிப்பாடே என்பது புலனாகிறது.

கேள்வி 3: காஷ்மீரில் உள்ள ஸ்ரீ நகரில் அமைந்துள்ள ரோஜபல் ஆலயத்தில் புதைக்கப்பட்டிருக்கும் உடல் இயேசுவினுடையதா? 

சுவாமி பதில்: ஆம்



இந்த விடையிலிருந்து இயேசு நாதரின் சமாதி இந்தியாவில் தான் அமைந்திருக்கிறது என்பது புலனாகிறது.

ஆதாரம் : சாய் ஸ்மரண் - பக்கம் 66.. ஆசிரியர் : டாக்டர் காடியா

சுவாமியின் பதில்கள் சத்தியம் என்பதற்கு ஏதுவாக மேலும் இதை குறித்து வெளிநாட்டு அறிஞர்கள் ஆராய்ச்சி செய்து வெளியிட்ட தனிப் புத்தகமே இருக்கிறது. 


🌻 சத்தியம் ஒன்று தான்.. அதை கிரகிப்பதற்கு பக்குவம் வேண்டும். சாயி வாக்கு-- சத்திய வாக்கு என்பது எப்போதும் நிதர்சனமான அனுபவப்பூர்வ நிகழ்வுகள்!! ஆன்ம சாதனை ஒன்றே நம்மை பக்குவப்படுத்தி சத்தியத்தை ஏற்க வைக்கும்.. எதையும் உணராமல் யாரைப் பற்றியாவது எதையாவது புறம் பேசுவதால் ஆன்ம மேன்மை ஒரு அங்குலம் கூட உயர்வதில்லை. அதை விடுத்து ஆத்ம சாட்சாத்காரத்திற்காக நேரத்தை செலவிட்டால்  இயேசு நாதரும் மகிழ்வார். பரமபிதாவான சத்யசாயியும் அருள் புரிவார். 🌻


தமிழாக்கம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக