தலைப்பு

ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

ஏர்டெல் நிறுவன உரிமையாளரின் உலகம் வியக்கும் சாயி சேவைகள்!

பிரம்மாண்ட ஏர்டெல் நிறுவனத்தின் அதிபர் அவர்களின் வாழ்வில்  வெளியே தெரிய வேண்டிய மிக முக்கியமான பக்கங்கள்... அந்தப் பக்கங்களின் பக்கமாய்  சுவாமியிடம் பக்தியும்... சுவாமி சொல்லியபடியான சேவையும் எவ்வாறு அதிசயத்தோடு இயங்குகிறது என்பதை பரவசத்தோடு வாசிக்க இதோ... 


கை வீசி நடந்தது ஒரு காலம். இன்று கைப் பேசியோடு நடப்பதே தகவல் தொழில்நுட்ப காலம்.. இன்றும் கைப்பேசி இணைப்பின் முடிசூடா மன்னராக இருப்பது ஏர்டெல். தரமான இணைப்பு... உடனடி சேவை என பிரம்மாண்ட நிறுவனம் ஏர்டெல்.

வியாபாரத்தில் ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொரு தொழில் செய்து பிறகே வெளிநாட்டின் பட்டன் தொலைபேசிகளைப் பார்த்து இந்தியாவிலும் அதுபோல் தொலை பேசி இணைவை கொண்டுவர வேண்டும் என எழுந்த அந்த முதல் விதை..  அந்த விதை சாதாரணமாக விருட்சமாகவில்லை... 1997 முதல் 2003 ஏர்டெல் லாக உருமாறிய ஆரம்ப காலம் தொடங்கி இன்று வரை 2ஜி, 3ஜி, 4ஜி என சிறப்பாக நடத்திக் கொண்டு வருபவர் சுனில் பாரதி மிட்டல்.
சராசரியாக தொழில்முனைவோராக இருந்து இன்று தொலைபேசி இணைப்பு சேவையின் சக்கரவர்த்தியாக இருக்கிறார் அவர்.


அவரின் ஆரம்ப முதல் 15,000... தந்தை உபயம். இவ்வாறே அந்த குடும்பத்தின் முதல் தொழில் முனைவோராக உருமாறுகிறார் அவர். அதன் பிற்பாடே ஏர்டெல் உதயம். தற்போது 25,000 பணியாளர்கள் வேலை செய்ய .. ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே 2 மில்லியன் வாடிக்கையாளர்கள். தற்போது ஆசியா .. ஆப்பரிக்கா என 20 நாடுகளுக்கும் மேலாக இவரின் வர்த்தகம் ஆக்டோபஸ் கால்களாய் பெருகியிருக்கிறது. இந்த ராட்சச வளர்ச்சிக்குப் பின்னால் இருப்பது அவரின் தொழில் அர்ப்பணிப்பு... கூர்மதி... சரியான திட்டமிடல்.. வாடிக்கையாளர் திருப்தி என நீங்கள் நினைக்கலாம்.. அதற்கும் அப்பால் ஒரு ஆணிவேர் வெளியே தெரியாமல் மறைந்திருக்கிறது.. அது அவரின் தர்ம சேவை...

எத்தனையோ கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள்.. அவர்களால் பூமிக்கு என்ன பயன்? ஆனால் இவர் செய்து வரும் தர்மம் .. அந்த தர்மமே இவரின் ஏர்டெல் வர்த்தகத்தையும் வளர்த்தெடுக்கிறது.
நாம் ஏர்டெல் சுமந்த கைப்பேசியை இடது கையாலோ .. வலது கையாலோ பேசுவோம்.. ஆனால் இவரின் தர்மமோ வலது கை தருவதை இடது கை அறியாத வண்ணம் அள்ளி வழங்குகிறது.


சுவாமியுடன் சுனில் பாரதி மிட்டல்... 


இதற்கு மிக மிக முக்கிய காரணம் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி. இந்த வள்ளலின் மனைவி நைனா மிட்டல். இவரின் குடும்பமே பல்லாண்டுகளாக தீவிரமான சத்ய சாயி பக்தர்கள். தனது வீட்டு நிகழ்வோ.. தொழில் நிகழ்வோ சுவாமியை வழிபட்டே செய்பவர் இவரது மனைவி.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். இவருக்கு இறைவன் அமைந்ததெல்லாம் மனைவி வந்த வரம்.
பூஜையறையில் மிகப் பெரிய சுவாமி புகைப்படம் வைத்து வழிபடுகிறார் இவரது மனைவி.

ஏர்டெல் நிறுவனர் இறைவன் சத்ய சாயியை பலமுறை தரிசித்திருக்கிறார். அவருக்கு சுவாமியின் ஒரு அம்சம் மிக மிக வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.. அது எது தெரியுமா?
அது தான் சுவாமியின் மதம் கடந்த ஆன்மீக சேவை...
இதை அவரே டெல்லியில் உள்ள மாவ்லாங்கர் அரங்கத்தில் பேசிப் பதிவு செய்கிறார்.
அதை மேடையின் கீழிருந்து பார்க்கும் இவரது மனைவி... சுவாமியின் முன்னிலையில் கணவரின் பேச்சை கேட்பதையும் கடந்து ... இறைவனை மேடை சன்னிதானத்தில் தரிசிக்கும் பரவசத்தோடு அந்த உயர் நிகழ்வை கைகூப்பி பரவசப்படுகிறார். 


நன்றி பரவசத்தோடு சுவாமியின் தரிசன மேடை நோக்கி நைனா மிட்டல் கண்கலங்கி வணங்குகிறார்


இறைவன் ஸ்ரீ சத்யசாயி சர்வ தேவதா அதீத ஸ்வரூபன் என்பதால் தான் அவர் மதம் கடந்த ஆன்மீக சேவையாற்றுகிறார். பரப்பிரம்மமான சத்யசாயிக்கு அது ஒன்றும் பெரிய விஷயமே அல்ல..
ஆனால் இந்த இறை பேரம்சமே ஏர்டெல் நிறுவனரை சுவாமியின் காலடியில் விழ வைத்திருக்கிறது.

மதம் கடந்த இறைவன் ஸ்ரீ சத்ய சாயியிடம் இஸ்லாம் மதத்தின் இரு பெரும் அரசியல் ஆளுமைகள்  முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர்  Dr. ஃபரூக் அப்துல்லா மற்றும் UAE கல்வி அமைச்சர் ஷேக் நாஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் இருவரும் பெரும் பக்தர்களாக இருப்பதை சுட்டிக் காட்டுகிறார்... 

UAE Minister Shaikh Nahyan with Baba in the Interview room

மேலும் ஏர்டெல் நிறுவனர் எழுபதுகளில் சுவாமியோடு தனது சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் சட்டைப்பையில் இருந்து எடுத்துக் காட்டி தனது இளம் பக்தியை இதயம் திறந்து பேசியது கேட்பவர்களுக்கு பரவசத்தையும்.. பார்த்தவர்களுக்கு ஆச்சர்யத்தையும்.. சுவாமி இறைவனே எனும் பரம சத்தியத்தையும் புரிய வைத்தது!!!

சுவாமியின் சேவை பணிகளுக்காக சத்யசாயி நிறுவனத்திற்கும் ஏர்டெல் நிறுவனர் மற்றும் அவரது மனைவி  நிறுவன உரிமையாளரின் உலகம் வியக்கும் சாயி சேவைகள்! பல நன்கொடைகள் அளித்து வந்த வண்ணம் தங்களது பக்தியையும்... அர்ப்பணிப்பையும் செலுத்தி வந்தனர். மேலும் அவர்களது வசிப்பிடமான டெல்லியில் சத்யசாயி சேவா நிறுவனத்தில் சேவாதள தொண்டராகவும் திருமதி நைனா மிட்டல் சேவையாற்றியிருக்கிறார்.


சுவாமியுடன் சுனில் பாரதி மிட்டல்... 

பொதுவாக சுவாமி எவ்வளவு அளிக்கப்படுகிறது என்பதை பார்ப்பதே இல்லை.. எது அளிக்கப்பட்டாலும் எவ்வாறு அளிக்கப்படுகிறது என்பதையே பார்க்கிறார்.

சுவாமிக்கு பக்தியே முக்கியம்.
இலையோ/ மலரோ/ கனியோ/ நீரோ ஏதேனும் ஒன்று சமர்ப்பித்தால் போதும் என்கிறார் சத்யசாயி கிருஷ்ணர். காரணம் சமர்ப்பணம் பணத்தை வைத்தல்ல பக்தியை வைத்தே.. 
இவ்வாறு அவர்கள் சமர்ப்பித்து வந்ததில்..


ஒருமுறை சுவாமி ஏர்டெல் நிறுவனரின் மனைவியான நைனா மிட்டலின் கனவில் தோன்றி .. நீங்களே தனியாக சேவா நிறுவனம் ஆரம்பித்து இன்னும் பல பேர்களுக்கு சேவை செய்யுங்கள் என்று அருள் வார்த்தை பேசி அவர்களது தர்ம சேவையின் வேர்களை ஆழப்படுத்தி பரந்து விரிய வைத்திருக்கிறார்.
அப்படி உருவானதே பாரதி ஃபவுண்டேஷன். 


தங்களது வர்த்தக லாபத்தில் 10 சதவிகிதம் அதாவது 7000 கோடி ரூபாயை பீடமாக அளித்து இந்த சேவா நிறுவனத்தை 2000'ல் கட்டமைத்திருக்கிறார்கள்.
இதில் 200க்கும் அதிகமான தொழில்முறையாளர்கள்..
8000 ஆசிரியர்கள் வழியாக 2,40,000 மாணவர்கள் எந்தக் கட்டணமும் இன்றி கல்வி கற்கிறார்கள்.
ஒரு சமையற் கூடம் ஒரே சமயத்தில் நூறு பேருக்கு உணவளிக்கலாம்.. ஆனால் ஒரு கல்விக் கூடம் லட்சம் பேர்களுக்கும் மேல் கல்வி அளிக்கும்.
அள்ள அள்ளக் குறையாதது கல்வி மட்டுமே என்பதால் தானத்தில் சிறந்த தானம் கல்வி தானமே!!!



அதுமட்டுமல்ல பலதரப்பட்ட சேவைகளில் எதை அதன் சேவைக் கிளைகளாக உருவாக்கினாலும் சுவாமியின் பெயரான 'சத்ய' வை இணைத்தே நடத்துகிறார்கள்..
உதாரணமாக...
ஏழைக் குழந்தைகளின் அடிப்படை கல்விக்காக 2006'ல் சத்ய பாரதி பள்ளி... இதைக் கடந்து பல பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளின் கல்வியை தாங்களே ஏற்றுக் கொண்டு படிக்க வைக்கிறார்கள். மேலும்
ஏழைகளின் அடிப்படை சுகாதாரத்திற்காக 2014'ல் சத்ய பாரதி அபியான் திட்டம் ஆரம்பித்து வசிப்போர்க்கான கழிப்பிடங்கள் என ஒரு அரசாங்கம் நடத்துவதை எல்லாம் தனி நபரான இந்த ஏர்டெல் நிறுவன சாயி பக்தர்களான கணவனும் மனைவியும் இணைந்து செய்கிறார்கள்.



உலகத் தரம் வாய்ந்த சத்ய பாரதி பல்கலைகழகத்தை (ஏழை மாணவ மாணவிகளுக்காக) வெகு விரைவில் நிறுவப்போகிறார்கள். அதற்கான ஆயத்தப் பணிகளும் சுவாமி சங்கல்பத்தோடு நடந்து வருகிறது. இது UGC (University Grants Commission) அனுமதியும் பெற்றிருக்கிறது.
பாரத ரத்னாவுக்கே தகுதி வாய்ந்த சாயி பக்தரான ஏர்டெல் நிறுவனருக்கு அரசாங்கம் பத்மவிபூஷன் விருது வழங்கி கௌரவித்திருக்கிறது.



நம்மிடம் பணம் அதிகமிருந்தால் நாம் கூடத்தான் இப்படி தர்மம் செய்யலாம் என நினைப்பவர்களா நீங்கள்? உங்களுக்கான பதில்.. தர்மம் என்பது அதிக பணம்.. குறைந்த பணம் என்பதிலிருந்து தோன்றுவதில்லை...
ஒரு ஓவியன் நூறு ஓவியங்கள் வரைந்து பணம் சம்பாதிக்கிறான் என்றால் அவன் பத்து ஓவியமாவது இலவசமாக கோவில்களில் / பூங்காக்களில் வரைந்து தர வேண்டும்... ஒருவன் எவ்வளவு சம்பாதிக்கிறானோ அதில் பத்து சதவிகிதம் தர்மம் செய்ய வேண்டும். அது பணமாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை.. இதுவே அடிப்படை தர்மம்.
இறைவன் ஸ்ரீ சத்யசாயி கனவில் சொன்ன தர்மம் இவர்கள் சுவாசிக்க Air'ரை மட்டுமல்ல இவர்களது Airtel'லையுமே பெருக வைத்து காப்பாற்றி வருகிறது!

  பக்தியுடன்
வைரபாரதி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக