மிக முக்கிய விருந்தினருக்காக பிரசாந்தி நிலையத்தில் பல மாளிகைகள் அமைந்திருக்க, தமது இதய மாளிகையின் முக்கிய விருந்தினராக பாபா யாரைக் கருதுகிறார்? மனம் உருக்கும் பாபாவின் கருணை வெள்ளம். அதில் மூழ்கும் பக்தியுடன் தொண்டர் உள்ளம்...
பேராசிரியர் கங்காதர் சாஸ்திரி அவர்கள் ஆங்கிலத்தில் பதிந்த அனுபவத்தின் தமிழாக்கம்....
பிரசாந்தியில் சாயி குல்வந்த் ஹால். அங்கு சேவை செய்ய தேர்ந்தெடுக்கப் படும் சேவாதள் தொண்டர்கள் பாக்கியசாலிகள். சேவையின் பலனும் ஸ்வாமியின் தரிசனமும் ஒருசேர கிட்டும் அல்லவா? மேலும் அச்சேவை கவனத்துடனும் , பொறுமையுடனும் சேவையாற்றும் மனப் பக்குவம் பெற ஒரு பயிற்சி களமாகவும் திகழ்கிறது.
சாய் குல்வந்த் ஹாலில் ஆண்கள் பகுதியில் இரண்டு நுழைவாயில்களும். உள்ளே சற்று தள்ளி, ஆயுதப் பரிசோதனை நுழைவு (Metal Detector) வாயில்களும் அமைந்துள்ளதை அனைவரும் அறிவர். அருகே சேவாதள தொண்டர்கள் சேவை புரிந்து கொண்டிருப்பதைக் கண்டிருப்பீர்கள். அன்று ஒர் நாள்... அவசரமாக VIP வாயிலில் நுழைந்தார் அந்த அதிகாரி. அவர் வழக்கமான ஆயுதப் பரிசோதனை கருவியின் இடையே செல்லாமல் , நேராக தரிசன இடம் செல்ல முற்பட்டார். இதைக் கண்ட ஒரு சேவாதளத் தொண்டர் "சாய்ராம் தயவு செய்து metal derector வழியாக செல்லுங்கள்" என வேண்டினார்.
வழிமறித்த தொண்டரிடம் அந்த அதிகாரி கோபமாகக் கூறினார். "நான் யார் என்று உங்களுக்கு தெரியுமா ? நான்தான் பல்கலைக் கழக துணை வேந்தர். நீங்கள் யார் யாரையோ விட்டுவிடுவீர்கள் . என்போன்றவர்களை பரிசோதிப்பீர்கள்" என காட்டமாக கூறிவிட்டு, வராண்டாவில் உள்ள தரிசன இடத்தில் சென்று அமர்ந்துவிட்டார்.
🌹 சேவையின் மேன்மை.. யாவினும் பெரியது:
அனைவருக்கும் தரிசனம் தந்த பாபா, நேர்முகமாக சிலரை அழைத்து பேட்டி தந்த பிறகு, நேர்முக அறையிலிருந்து வெளியே வந்தார். நேராக துணை வேந்தர் அமர்ந்திருந்த இடம் நோக்கிச் சென்றார்.
சுவாமி: எழுந்திரும். வாயிலில் ஏன் சேவாதளத்தினரிடம் கோபப்பட்டீர்?
துணை வேந்தர்: (அதிர்ந்து) சுவாமி!!!
சுவாமி: நீங்கள் துணை வேந்தர், நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
துணை வேந்தர்: சுவாமி!?!
சுவாமி: அவர்கள் அவர்களது கடமையை செய்கிறார்கள். அவர்கள் மிகுந்த சிரமப்பட்டு, பணம் செலவழித்து அலுவலகத்தில் பலப் போராட்டங்களுக்குப் பிறகு பிரசாந்தி சேவைக்கு வருகிறார்கள். இந்த சேவைக்கு வர அவர்கள் எவ்வளவு சோதனைகள், துயரங்கள் அடைகிறார்கள் என உனக்கு தெரியுமா? போய் ஷெட்டில் தங்குங்கள் என்றால் சென்று தங்குவார்கள். கேன்டீனில் சென்று சாப்பிடுங்கள் என்றால், நான் என்ன வழங்கினாலும் அவர்கள் உண்பார்கள். என் மீதுள்ள பக்தியின் காரணமாக வருகிறார்கள், வேறு எதையும் எதிர்பார்த்தல்ல. அவர்கள் எனக்கு மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் எனது விருந்தினர்கள். நீ அவர்களை காயப்படுதினால் என்னை துன்புறுத்தியதாகவே அர்த்தம். தயவுசெய்து போய் அவரிடம் மன்னிப்பு கேள்.
துணை வேந்தர் அந்த சேவாதள தொண்டரிடம் சென்று 'எனது செயலுக்காக மன்னிப்பு கோருகிறேன்' என கூறிவிட்டு மீண்டும் வந்து அமர்ந்தார்.
சுவாமி: இதுவே சரி. இனி கவனமாய் இரு.
பக்தர்களுக்கு பேட்டி வழங்கி முடித்து வெளிவந்த சுவாமி நேராக துணை வேந்தரிடம் வந்தார்.

🌻 பாபாவின் வலியுறுத்திய ஐந்துகுண நலன்களான ( 5Ds)சேவை, பக்தி, ஒழுக்கம், விடாமுயற்சி, நல்லவை/ அல்லவை பாகுபாடு இவை அனைத்தும் சேவா தள தொண்டர்கள் , தம் சேவை மூலம் பெறுகின்றனர். ஆகவே அவர்களை பாபா கனிந்து ஆசீர்வதிக்கிறார். இந்த குண நலன்களை பக்தர்களாகிய நாமும் கடைபிடித்தால் , பாபாவின் கருணையை விரைந்து பெறலாம் அல்லவா. 🌻
ஜெய் சாய்ராம்.
மொழிமாற்றம்: கவிஞர் குஞ்சிதபாதம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக