தலைப்பு

சனி, 17 ஏப்ரல், 2021

வீட்டிலேயே வழிபடலாமே? ஏன் சமிதிகளுக்கும், கோவில்களுக்கும் சென்று வழிபட வேண்டும்?



கேள்வி: பாபா நான் எல்லா இடங்களிலும் இருக்கின்றேன் என்று சொல்கின்றார். அப்படி இருக்கும்போது நான் வீட்டிலேயே  வழிபடலாமே? ஏன் சமிதி களுக்கும், கோவில்களுக்கும் சென்று வழிபட வேண்டும்?

பதில்:  ஸாயிராம், ஸ்வாமி எல்லா இடங்களிலும் இருக்கிறாா் எனும் அன்பா் சமிதியிலும் கோவில்களிலும் உள்ளாா் என்பதை நினைவுக்கு கொண்டு வரவேண்டும். எல்லா இடங்களிலும் உள்ள இறைவனை காண்பது என்பது எதையும் சாயியாக பாா்ப்பதற்குரிய பாா்வையினை பெறுவதும் சிரமமான விஷயம். சமிதிக்கு சென்று ஸ்வாமியை தரிசனத்துக்கு போகவேண்டியது அவசியம். அங்கே ஸ்வாமியை நாம் தரிசிப்பதற்காக அல்ல. ஸ்வாமி உங்களை அங்கே பாா்க்கின்றாா். ஸ்வாமியின் பாா்வை உங்கள் மேல் படுவதற்காகத்தான் சமிதிக்கு செல்ல வேண்டும். இது போன்றுதான் கோவிலும். மிக பழம் பெரும் பக்கதா் பெங்களூா் பல் டாக்டா் கூறுவாா். பிரசாந்தியில் நடக்கும்  ஒவ்வொரு விழாவிற்கும் நான் தவறாது செல்வேன். ஏனெனில் நான் செல்லவிடில் என் தந்தை சாயி நான் வந்திருக்கிறேனா என்று என்னை தேடுவாா். எவ்வளவு சத்யமான வாாத்தை. அவனிலிருந்து பிரிந்து வெகு தூரம் வந்து விட்ட நம்மை  தேடி பூரண அன்புடன் நம்மை காண வந்த இறைவன் இருக்குமிடம் செல்வது நமக்கு நல்லதே. சேரும் இடம் அறிந்து சோ்ந்த பின் மனம் மற்றொன்றை நாடாது இவ்வுலக வாழ்வு முடிந்த அவன் இடம் சேர நம்மால் முடியும் எனும் நம்பிக்கையினை ஏற்படுத்தி தருவதே சாயியுடன் கூடிய சங்கமத்தினை பெற வேண்டும். இதற்காகவே சமிதி, கோவில்களுக்கு செல்ல வேண்டும்.

சாயி அருளுடன்
ஹரிஹரன், கேகே நகா் சமிதி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக