தலைப்பு

வியாழன், 29 ஏப்ரல், 2021

தன்னுடைய ஷீரடி சாயி அவதார சீடர் அப்துல் பாபாவுக்கு மோட்சம் அளித்த இறைவன் சத்ய சாயி!


இந்த அண்ட சராசரம் இறைவன் சத்ய சாயி கட்டுப்பாட்டிலேயே இயங்குகிறது.. அவரிடம் இருந்தே உயிர் தோன்றுகின்றன.. அவருள்ளே மீண்டும் அவை ஒடுங்குகின்றன.. அதில் யோகிகள் சதா சாயி இறைவனையே தியானித்த படி இருப்பதால் அவர்களுக்கு இன்னும் ஆழமான மேன்மையை அவர்களுக்கு வழங்குவது நியாயமே!!!

இங்கே இரண்டு உன்னத சம்பவங்கள் விவரிக்கப்படுகின்றன...
இரண்டுமே மோட்ச நிலை அடைகின்ற மேன்மையான ஆன்மாவைக் குறித்தது..

1966இல் பாபா சென்னையில் இருந்தார். தனது நெருக்கமான பக்தர்களோடு உரையாடிக்கொண்டிருந்த போது அவரது முந்தைய பிறவியில் பிரதான சீடராக இருந்த ஒருவர் இவ்வுலகை விட்டு நீங்கி ஒரு குறிப்பிட்ட தினத்தில் தன்னோடு வந்து ஐக்கியமாகப் போவதாக பாபா தெரிவிக்கிறார் ..
அந்த ஆத்மார்த்த  நாளுக்காக இதைக் கேட்ட அனைவரும் அந்த "காலை"க்காக காத்திருந்தனர்.


அந்த குறிப்பிட்ட "காலை"யும் வந்தது... குளிக்கப் போயிருந்த பாபா நீண்ட நேரம் ஆகியும் வராது போகவே ஜன்னல் வழியே பார்த்தால் பாபா தரையில் விழுந்து கிடந்தார்.
கதவை பலமாக முயற்சித்து திறந்து பாபாவை வெளியே கொண்டு வந்து கிடத்தினர். பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வாயடைத்து செய்வதறியாது இருந்தனர்.

கடவுளின் வினோதமான செய்கையை எல்லாம் பக்தர்களால் எங்கனம் புரிந்து கொள்ள முடியும்!!

இந்த அமானுஷ்யமான பொழுதில்.. பாபா கால் கட்டை விரலிலிருந்து விபூதி பீய்த்து அடித்தபடி மழையாய் பொழிந்து கொண்டிருந்தது ...
அவரது உதடுகள் மராட்டியில் ஏதோ முணுமுணுத்தன ...

பாபாவின் முந்தைய பிறவியான ஷீரடி பாபா தான் பேசுகிறார் என அருகிருந்தோர் புரிந்து கொண்டனர் ...

சீரடி பாபா காலத்தில் வாழ்ந்த அப்துல் பாபாவின் புகைப்படம்

எங்கோ தொலைவிலிருந்த தனது பரமார்த்த சீடருக்காக இந்த ஆன்ம சுவீகரிப்பு நிகழ்ந்த சில நிமிடங்களில் ..
பாபா துள்ளி எழுந்தார் ...
தனது முந்தைய அவதாரமான ஷீரடி பாபாவின் அத்யந்த சீடர் அப்துல் பாபாவிற்கு மோட்சம் அளித்ததாக சத்ய சாயி பாபா கூறினார் ...
அங்கிருந்த அனைவரும்  அதைக் கேட்டு பரவசம் அடைந்தனர் ...
எப்பேர்ப்பட்ட பாக்கியம் அவர்கள் பெற்றது ...!!!

இரண்டாவது உன்னத சம்பவத்தில் மலபாரில் புகழ்பெற்ற ஆன்மீக யோகியான கீதமலை ஸ்வாமிகளுக்கு .. அவரின் உயிர் பிரிந்த அன்றே தன்னுள் அடைக்கலம் அளித்தார் !


ராஜா ரெட்டி.. ராதா கிருஷ்ணன் போன்ற அருமை பக்தர்கள் பாபாவின் அருகில் இருந்ததால்.. இந்த அற்புத சம்பவங்களை நேரில் கண்ட போது .. ஒரு ஒளி வந்து பாபாவை அடைவதைக் கண்டு ..
அதை அவர்களுக்கு பாபாவே விளக்கிக் கூற.. பரவசத்தோடு வெளிய வந்து அந்த ஆழமான அனுபவத்தை எடுத்துக் கூறினார் ...

இன்னும் வெளியே தெரியாமல் எத்தனை பேருக்கு அடைக்கலம் கொடுத்தாரோ... இந்த ஷிவ ஷக்தி ஸ்வரூபி !

ஆதாரம்: Baba Sathya Sai PART-1 | P. 284
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி. 

🌻 அந்த ரெண்டு மகான்களுக்கு மட்டுமல்ல மண்ணில் உதிக்கும் மாசற்ற மகான்கள் அனைவருக்கும் இறைவன் சத்ய சாயியே மோட்சமும் .. பிறவா வரமும் அளிக்கிறார்... இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை... அவரே அனைத்து விதமான செயல்களையும் ஆற்றுகிறார்.. நாம் வெறும் கருவிகள் மட்டுமே.. மனிதர்களுக்கும் மகான்களும் உள்ள வித்தியாசம் இதிலேயே அடங்கிவிடுகிறது .. மகான்களோ  தங்களை வெறும் கருவிகள் என உணர்ந்திருக்கின்றனர்.. மனிதர்களோ அதை உணராமல் இருக்கின்றனர்.. அவ்வளவே !!! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக