தலைப்பு

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

இந்தியாவிலிருந்து ஜெருசலேமிற்கு திரும்பிய இயேசுவின் நிஜ உருவத்தை சிருஷ்டித்த பரமபிதா சாயி!


இறைவன் சத்ய சாயி யாவையும் அறிவார்.. பக்தர்களின் தேவையும் அறிவார்... சரித்திரம் என்று திரித்துக் கூறப்பட்ட விஷயங்களை எல்லாம் சத்தியம் குறையாமல் இதயத்திற்கு இதமாக உணர்த்தும் இறைவன் நம் சுவாமி... அவர் இயேசு கிறிஸ்துவின் நிஜமான உருவத்தை முதன்முதலில் சிருஷ்டித்து அருளிய போது எவ்வகையான சிலிர்ப்பை வெளிநாட்டவர்கள் பெற்றார்கள் என்பதன் அற்புதமான பதிவு இதோ...

ஒருமுறை 1984ஆம் ஆண்டு கிறிஸ்துமஸுக்கு முன்னர் அர்ஜென்டினாவை சேர்ந்த ஒரு தம்பதிகள் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவை தரிசிப்பதற்காக புட்டபர்த்தி வந்தார்கள். வந்தவர்களில் கணவனுக்கு பாபாவின் மீது மிகுந்த பக்தியும் நம்பிக்கையும் இருந்தது. ஆனால் அவரின் மனைவிக்கு பாபாவிடம் கடுகளவும் நம்பிக்கை இல்லை. இப்படி முரணாக வரும் தம்பதிகள் சுவாமியின் தரிசன முடிவில் பக்தி தம்பதிகளாக மாறிவிடுவதும் உண்டு. கணவன் மனைவி இருவரின் எண்ண அலைவரிசையை ஒழுங்குபடுத்தி.. ஒற்றுமைப்படுத்தி அவர்களை ஒருமித்து வாழ வைப்பது எப்போதும் சுவாமி.. இல்லறத்திற்கு சாயி இறையருள் ஆற்றும் மிகப்பெரிய கருணை இது!! இந்த அயல்நாட்டு பெண்மணியோ தன் கணவனின் வற்புறுத்தலின்  பெயரிலே புட்டபர்த்திக்கு வந்தாள்.


அவர்களின் அதிர்ஷ்டம், அவர்கள் வந்த உடனே பாபா அவர்களை நேர்காணலுக்கு அழைத்துச் சென்றார். நேர்காணல் அறையில் பாபா பேசிய ஒவ்வொரு சொற்களும் வந்தவரின் மனைவிக்கு ஆச்சரியமாக இருந்தது எப்படி நம்மைப் பற்றி A to Z எல்லாம் சொல்கிறார்,  அதுவும் அவர்களின் வாழ்வில் அவர்களே மறந்த ஒரு சில பழைய விஷயங்களை பாபா சுட்டிக்காட்டியது அவளுக்கு அதிசயமாக இருந்தது.. இறுதியில் பாபாவின் ஆற்றலை புரிந்து கொண்டு பாபாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டாள்.
சுவாமி அறியாத எந்த விஷயமும் எவர் வாழ்க்கையிலுமே இல்லை. உண்மையில் அந்தரங்கம் என்ற எந்த ஒரு நிகழ்வுமே மனிதரின் வாழ்வில் இல்லை.. அனைத்தும் பரபிரம்மமான இறைவன் சத்ய சாயி அறிகிறார். அவரிடம் எதையும் மறைக்கவும் இயலாது... பேரன்பு மொழியோடு நம்மை அவர் அணுக அதை நாம் மறுக்கவும் இயலாது.

நேர்காணலின் முடிவில் அந்த கணவர் தான் கொண்டு வந்த தானியங்கி கேமராவின் மூலம் பாபாவுடன் சேர்த்து தங்களையும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.  பின்னர் பாபாவிடம் ஆசீர்வாதம் பெற்று இருவரும் தங்கள் நாட்டிற்கு புறப்பட்டு வந்தார்கள்.அவர்கள் வந்த பிறகு தாங்கள் எடுத்த புகைப்படத்தை டெவலப் செய்து பார்த்த போது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது ஏனெனில் அந்த புகைப்படத்தில் அவர்கள் எடுத்த  புகைப்படத்திற்கு பதிலாக தாடி வைத்த ஒரு இளைஞரின் உருவம் இருந்தது.  கணவன் மனைவி இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஒரு சில மாதங்களுக்குப் பின்னர் அவர்கள் மீண்டும் பாபாவை தரிசிக்க புட்டபர்த்தி வந்திருந்தபோது,  அவர்களிடம் பாபா சொன்னார் அந்தப் புகைப்படத்தில் இருப்பது வேறு யாருமில்லை நீங்கள் வணங்கும் இயேசு கிறிஸ்துவின் உண்மையான புகைப்படம் என்றார். 
மிகவும் பரவசம் அடைகின்றனர் அந்த நொடி... வெளிநாட்டவர் தன் மதத்தின் பிரதிநிதியை முதன்முதலாக நிஜ உருவத்தோடு உணர்கையில் அவர்கள் அடைந்த பரவசத்திற்கு அளவே இல்லை... இயேசு கிறிஸ்து தன்னுடைய 29வது வயதில் இந்தியாவிலிருந்து ஜெருசலேமுக்கு சென்ற போது இப்படித்தான் இருந்தார் என்று பாபா கூற...அவர்கள் அடைந்த அதீத பரவசத்தை அவர்களால் கூட விவரிக்க இயலவில்லை.. வார்த்தைகள் கடந்த வாஞ்சையில் திளைத்தனர். அவர்களின் வழியாக உலகத்திற்கும் இயேசு கிறிஸ்துவின் நிஜ உருவத்தை தரிசிக்கும் பாக்கியமும் கிடைத்தது.. 

Jesus Lived in India book promotes the claim of Nicolas Notovich (1894) regarding the unknown years of Jesus between the ages of 12 and 30 in India. The consensus view amongst modern scholars is that Notovitch's account of the travels of Jesus to India was a hoax.

மேற்படி சில புத்தகத்தில் இயேசு குறிப்பிட்ட சில ஆண்டுகள் இந்தியாவில் வந்து யோக தவம் ஏற்றதை சுவாமியின் சொல்லும் ஆணித்தரமாய் ஊர்ஜிதப்படுத்துகிறது. 
பாரதம் ஒரு யோக பூமி.. அது யோகியர் பூமி ஆகவே தான் இங்கே நரசிம்மர்... ராமர்... கிருஷ்ணர்.. மூன்று சாயி அவதாரங்கள் என நிகழ்ந்த வண்ணம் நெஞ்சை ஆன்மீக சாதனையில் ஆழ்த்துகிறது...

ஆதாரம்: book "Shri Sathya Sai, The Yugavatara", by S.D. Kulkarni

🌻 இயேசு அழைத்த பரமபிதா இறைவன் சத்ய சாயியே! மனிதர்களோடு மட்டுமல்ல மகான்களோடு அவர்கள் வாழ்வில் பொதிந்த ரகசியங்களையும் இறைவன் சத்யசாயி அறிவார்... மனிதர்களுக்கு மட்டுமல்ல... மகான்களுக்கும் சத்ய சாயியே இறைவன். 🌻 
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக