தலைப்பு

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

உங்கள் சத்ய சாயி "சாய்பாபா" எனும் பிரபலமான பெயரை பயன்படுத்தித் தானே புகழடைந்தார்?


கேள்வி: உங்கள் சத்ய சாயி "சாயிபாபா" எனும் பிரபலமான பெயரை பயன்படுத்தித் தானே தன்னையும் சாயிபாபா எனச் சொல்லி புகழடைந்தார் என்கிறார்களே.. உண்மை தானா??


பதில்: சினம் தூண்டப்படக்கூடிய கேள்வி. ஆனால் இறைவன் சத்ய சாயி யாரையும் தவறாக விமர்சித்தோ / விமர்சிக்கச் சொல்லியோ சொல்லவே இல்லை. யாரையும் கோபப்படுத்தியோ / கோபப்பட்டோ அவர் ஒரு வார்த்தையும் சொன்னதே இல்லை. பக்தரையும் அப்படி சொல்லத் தூண்டியதில்லை.

நேரடியாக பதிலுக்கு வருகிறேன்.

கேள்வி கேட்டவர் சிறு வயதாக இருக்கலாம் அல்லது வரலாறு தெரியாதவறாக இருக்கலாம் . 

சாயிபாபா எனும் பெயர் எப்போது பிரபலமானது என ஆழமாகத் தேடினால் அல்லது பல புத்தகங்களைப் புரட்டி Comparative study செய்தால் தெரியும்.

"சாயி பாபா" எனும் பெயர் 40களில் பிரபலம் ஆகவே இல்லை எனப் புரியும்.

இப்போது குறைந்தது ஏரியாவுக்கு ஏரியா ஷிர்டி சாயி பாபா கோவில் இருப்பது போல் நாற்பதுகளில் எங்கேயும் இல்லை. பக்தர்களும் அதிகமாக இல்லை.


இறைவன் சத்ய சாயி "சாயி பாபா" என்று முதன் முதலாக அவதாரப் பேரறிவிப்பு (1940) செய்யும் போது அந்த காலத்து ஆந்திர பிரதேசத்தில் அந்த வார்த்தையே புதிதாக இருந்தது. அதில் சிலர் யாரோ ஒரு பூதம் .. பேய் பிசாசு தான் சாயி பாபா என நினைத்திருந்தனர். இஸ்லாமிய பெயராக இருக்கிறதே என ஒருவேளை அந்தப் பேய் இஸ்லாமிய மதமோ என தவறாகவே நினைத்திருந்தனர்.

நீங்கள் சொல்வது போல் சாயி பாபா எனும் பெயர் அப்போதே பிரபலமாகி இருந்தால்.. இறைவன் சத்யசாயியை மந்திர வாதியிடம் தாய் தந்தையர் அழைத்துப் போயிருக்க வேண்டிய அவசியமே இல்லை. அவர் சுவாமியை சித்திரவதை செய்து .. தலையைக் கீறி.. அதில் எலுமிச்சைப் பழம் வைத்து தேய்த்து சொல்ல முடியா கொடுமையை அனுபவிக்க வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் இது ஏதோ ஆவி பிடித்திருக்கிறது என்றே நினைத்திருந்தனர்.

சுவாமி சத்ய சாயி அவதரித்தது முதலே தெய்வீகமானவர். அதிசய சுபாவமுள்ளவர். சராசரி பிள்ளைகள் போல் இல்லை.. திடீரென்று மகான்களுக்கு நேரும் ஞானோதயம் இல்லை. சுவாமி சத்ய சாயி பிறந்ததில் இருந்தே அவதாரம்.  அவதரிப்பதற்கு முன்பே வாத்தியங்களும்... கீத கருவிகளும் தானாய் இசைத்தன...

அவதார அறிவிப்பை மட்டுமே காலம் பார்த்து செய்தாரே தவிற..

1940ல் இருந்து சுவாமி அவதாரமில்லை..

1926 ல் இருந்தே அவதாரம் தான்..

ஏன் கிருத யுக வாமன அவதாரத்தில் இருந்தே அவதார வருகை தான் யுகம் யுகமாய் தொடர்கிறது.

கலி யுகம் உள்ள கேடான சூழலில் ஒரு முறை அவதாரம் போதாது என்பதால் இரு முறை அவதரித்து.. இதோ மூன்றாம் முறையும் அவதரித்திருக்கிறார்.

தான் ஷிர்டி சாயி பாபாவின் மறு அவதாரம் என சத்ய சாயி சொன்ன போது ..

ஓ அப்படியா என யாரும் அதை ஆச்சர்யமாக அணுகவில்லை. காரணம் அவர்களுக்கு சாயி பாபா என்றால் யார் என்றே தெரியாது.

ஊடக வளர்ச்சி இல்லா காலகட்டம். இறைவன் ஷிர்டி சாயியின் நிஜமான புகைப்படமே ஓரிரண்டு தான் இருந்தது. அவர் செய்த அற்புதம்  / மகிமை போன்றவை ஷிர்டி சாயி சத் சரிதத்தில் மிக தாமதமாகவே அச்சானது. 

வேறெந்த மொழியிலும் அவை மொழிபெயர்ந்து அப்போது பிரசுரமாகி .. பிரபலமாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறைவன் சத்ய சாயி தன்னை சாயிபாபா எனச் சொல்லியபிறகு சில நாட்கள் கழிந்து ஆந்திர தேசத்தில் ஒருவர் சாயிபாபாவை வழிபடுகிறார் (மிகச் சிலரே ஷிர்டி சாயி பக்தர் அப்போது) எனவும் அவரை அணுகி விசாரிக்க அவர் மூலமாகவே.. புட்டபர்த்தி சார்ந்த பகுதி மக்கள் முதன்முதலாக அறிகின்றனர்.

தமிழ்நாட்டில் கேட்கவே வேண்டியதில்லை சாயிபாபா என்றால் யாருக்குமே எதுவுமே தெரியாது‌. இப்போது சென்னையிலும் / தமிழ்நாட்டிலும் பிரபலமாகி இருக்கிற சாயிபாபா கோவில்கள் ஒன்று கூட அப்போது இல்லை... 

1940 தில் தான் முதன்முதலாக அவதாரப் பேரறிவுப்பு செய்கிறார் இறைவன் சத்ய சாயி. அடியேன் மேலே சொன்ன கோவில்களின் திறப்பு விழா தேதிகளை ஆழமாய் தேடிய போது 1940களில் எந்த கோவில்களும் அவர்க்கு கட்டப்படவில்லை.

இறைவன் சத்ய சாயி தன்னை ஷிர்டி சாயி பாபா அவதாரம் என்றார்..

கொஞ்சம் காலம் முன்னால் சென்று தன்னை கிருஷ்ண அவதாரம் என்று அறிவித்திருக்கலாம் ..

அதுவும் சத்தியம் தான்..

ஆனால் தன்னை கிருஷ்ண அவதாரம் என முதன்முதலாக அறிவிக்காமல் சாயி பாபா அவதாரம் என்றார் ..

காரணம் 

கிருஷ்ண அவதாரம் உலகம் நிரம்பி பிரபலமாகி இருந்தது... சாயி பாபா அவதாரம் அப்படி இல்லை..

"சாயிபாபா" எனும் பெயரை முதன்முதலில் பிரபலப்படுத்தியது சத்ய சாயியே என்பது ஆராய்ச்சிபடியும்..  ஆன்மீகம் சார்ந்தும் உண்மை.

யார் முதன்முதலில் சாயி பாபாவுக்கு கோவில் கட்டியது எனத் தெரியுமா?

லோகநாத முதலியார்.

எந்த ஆண்டு தெரியுமா?

1949

அவர் யார் தெரியுமா?

இறைவன் சத்ய சாயி பக்தர்.

இடம் : கிண்டி. சென்னை.

இறைவன் சத்ய சாயிக்கே தன் நிலத்தில் அவர் கட்ட இருந்த கோவிலை ..

தன் பூர்வ அவதாரத்திற்கு அதாவது தன் முந்தைய அவதாரத்திற்கு கோவில் கட்டு என உத்தரவிட்டதே சத்ய சாயி தான்.

ஏன்? எதற்காக?

கிருஷ்ணருக்கான கோவில்கள் நிறைய.

ஆனால் சாயி பாபாவுக்கான கோவில்கள் அப்போது ஒன்று கூட இல்லை.

அவரை ஏதோ பக்கிரி என்றும் ..

ஏதோ மகான் என்றும் ஏதோ சித்த புருஷர் என்றும் இஷ்டத்திற்கு.. எண்ணம் போகிற போக்கில் எதையாவது நினைத்துக் கொண்டிருந்தனர்.(இப்போதும் சிலர் அப்படியே நினைக்கின்றனர்)

ஷீரடி பாபாவை பற்றி பலரும் அறியாத அக்காலத்தில் உலகிலேயே முதன்முதலில் ஷீரடி பாபா சிலை இங்குதான் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் திருக்கரங்களால் பிப்ரவரி 3, 1949 அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதுவும் கருங்கல்லால் ஆன சிலை. ஷீரடி பாபாவின் சமாதியில் நிறுவப்பட்டிருக்கும்(அக்டோபர் 7, 1954) வெள்ளைப் பளிங்கு சிலைக்கு 5 ஆண்டுகள் முன்னரே இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தன் அவதாரத்திற்கு கூட கோவில் வேண்டாம் தன் முந்தைய அவதாரத்திற்கு கோவில் கட்ட சொன்னாவர் இறைவன் ஸ்ரீ சத்ய சாயிபாபா. 

நீங்கள் மூன்று சாயி அவதாரங்களில் யாரை தனியாக வழிபட்டிலும் அது மூன்று பேருக்குமே சென்று சேரும்.

ஆனால் இவர் வேறு .. அவர் வேறு என ஒருவரை நேசித்து மற்ற ஒருவரை அறியாமையில் வெறுத்து வழிபட்டால் ஓட்டை வாளியில் தண்ணீர் இறைக்கும் கதை தான்.


மேலும் 

ஊடகம் பரவிய காலகட்டம் ..

சினிமா முதன்முதலாக பரவிய காலக்கட்டம்.

யார் முதன் முதலாக சாயிபாபா பற்றி திரைப்படம் எடுத்தார்கள் என உங்களுக்கு தெரியுமா? 

படத்தின் பொயர்: ஷீர்டி கே சாய் பாபா(Shirdi Ke Sai Baba) 

தயாரிப்பு : இந்து லால் ஷா

இந்து லால் ஷா யார் தெரியுமா?

இறைவன் சத்ய சாயி பக்தர்.இவரே முதன் முதலாக சத்ய சாயி நிறுவன டிரஸ்டியாக இருந்தவர்

1977ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது(சரளா சாரிட்டீஸ் டிரஸ்ட்)

முதன் முதலில் யாருக்கு இந்தப் படம் காட்டப்பட்டது தெரியுமா?

யார் "சாயிபாபா" பற்றிய படம் எடு எனச் சொன்னாரோ.. 

அவருக்கே!!

அவர்?? வேறு யார்??

ஷிர்டி சாயியின் பரிபூரண அவதாரமான இறைவன் சத்ய சாயி.

இந்தத் திரைப்படத்திற்குப் பிறகே ஆச்சர்யப்பட்டும்.. அவரின் மகிமை உணர்ந்தும் சாயி பாபா எனும் பெயர் தாங்கிய நிறைய திரைப்படங்கள் ஊர் உலகில் பவனி வரத் தொடங்கின.. அதற்கு முதன்முதலாக விதை தூவியவர் இறைவன் சத்ய சாயியே!

இரு சாயியும் ஒருவரே எனும் சத்தியம் இந்தப் படத்தின் ஒரு சில காட்சிகளில் குறியீடாக வரும். 

தன்னை முன்னிலைப்படுத்தாமல் தன் முந்தைய அவதாரத்தையே முன்னிலைப்படுத்தி படம் எடுக்கச் சொன்னார் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி. அதை மீறியும் சில காட்சியில் இரு சாயியையும் புகைப்படமாக பதிவு செய்திருப்பார்கள்.

இறைவன் ஷிர்டி சாயி பற்றி பல்வேறு தெரியாத அவரின் தாய்/ தந்தை/ பிறப்பு போன்ற அவதார ரகசியங்கள் ‌...

பலர் அன்றாடம் வாசிக்கும் சத்சரிதத்தில் கூட இல்லாதவை ...

இதனை எல்லாம் வெளியிட்டது இறைவன் சத்ய சாயியே...

சுவாமி ஷிர்டி சாயி அவதாரத்தை பத்ரியில் பிறந்ததாக முதன்முதலாக தெரிவித்த போது.. அதை தொல்லியல் துறையை சார்ந்த ஒரு சில வல்லுனர்கள் நேரில் சென்று ஆராய்ந்து சுவாமி சொன்ன தகவலோடு  அவர்களுக்கு கிடைத்த ஆதாரமும் அதை ஊர்ஜிதப்படுத்தின...

அதனாலேயே பிற்காலத்தில் பலராலும் பத்ரி (மகாராஷ்ட்ரா) என்ற ஷேத்திரமே ஷிர்டி சாயி ஜன்ம தலமாக அறியப்பட்டது!

ஷிர்டி சாயி பாபாவை நேரில் சந்தித்த பக்தர்கள் சத்ய சாயியை சந்தேகக் கண்ணோடு அணுகும் போது.. அதை தெளிவு செய்து .. அவர்களுக்கு பளிங்கு சுத்தமாய் தெளிவு படுத்தி இருக்கிறார்.

நேரடியாக ஷிர்டி பாபாவை தரிசனம் செய்த அவர்களே சத்ய சாயியை அவரின் அடுத்த அவதாரம் எனப் புரிந்து கொண்டார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய பிரமாணம்.

பொதுவாக இரு சாயியை நேரில் தரிசிக்காதவர்கள் தான் சத்தியம் உணராமல்/ ஆழம் அறியாமல் ஏதேதோ பேசுபவர்களே!

கிளிஞ்சல்கள் எல்லாம் முத்துக்களாவது இல்லையே!

இப்படி "சாயிபாபா" என்ற பெயரையும்..

அவருக்கான கோவிலையும் ... சிலையையும் (ஷிர்டி கிராமத்தில் கூட அவர் சமாதியில் சிலை 1956 ஆம் ஆண்டே நிறுவப்பட்டது ) அவர் பற்றிய திரைப்படம் எடுத்து உலகம் அறியச் செய்தது இறைவன் சத்ய சாயி மட்டுமே . வேறு யாரும் இல்லை.

இன்று சாயிபாபாவுக்கு குவிகிற தற்காலக் கூட்டத்தில் பெரும்பாலான பேருக்கு இந்த சத்தியம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையை விட்டு சத்தியத்தை ஆழமாய்ப் புரிகிற போதே பக்தி நிரந்தரமாகும்.

இறைவன் பிரேம சாயி பாபா எனும் தனது அடுத்த அவதார திரு அறிவுப்பும் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி ஆற்றுவார்..

ஷிர்டி சாயியை வழிபடுபவர் சிலர் சத்ய சாயியை . அவர் இவரில்லை.. அவரை வைத்தே இவர் புகழடைந்தார் எனத் தவறாக நினைக்கிறார்கள்.

பொதுவாக மக்களிடம் முன் ஜென்மம் மற்றும் கர்மாவின் செயல்முறை விஞ்ஞானத்தை நாம் அடுத்த தலைமுறையினர்க்கு எடுத்துச் செல்ல.. அதன் சத்திய செயல்பாட்டை எடுத்துச் சொல்ல தவறி விட்டோம்.

அதனால் வந்த வாழ்க்கை மற்றும் ஆன்மீகம் சார்ந்த குழப்பங்களே இவை எல்லாம்.

ஆக!!

சாயிபாபா எனும் பெயரை உலகத்திற்கு முதன்முதலாக உணரும்படி .. திருவிழா காணும் படி.. கும்பாபிஷேகம் நிகழ்த்தும் படி பேரறிவிப்பு செய்தது சத்ய சாயி மட்டுமே. வேறெவரும் இல்லை.

இன்னும் "சாயிபாபா" எனும் திருப்பெயர் அண்டம் கடந்து .. வர பிரபஞ்ச வியாபகமாய் மாறும் இனி வரும் வசந்த பிரேம காலங்களில்...

  

பக்தியுடன் 

வைரபாரதி






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக